Tamil cinema news : ‘இவர் தான் அவர்’… தனது காதலரை அறிமுகப்படுத்திய பிரபல நடிகை…!!

1 min read
cine-vidiyar

நடிகை நக்‌ஷத்ரா செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிறகு ‘வாணி ராணி’ சீரியலில் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, நாயகி  உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘திருமகள்’ சீரியலிலும் நடித்து வருகிறார். மேலும் மிஸ்டர் லோக்கல், இரும்புகுதிரை, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நக்‌ஷத்ரா நடித்துள்ளார். தற்போது இவர் தனது காதலரைப் பற்றிய அறிவிப்பை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு க்ளிக் செய்யவும்

இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில், முதலில் நான் இன்ஸ்டாகிராமிற்கு வந்த போது நண்பர்கள் மட்டும் தான். ஆனால் நடிப்பு தொழிலில் நான் ஈடுபட்டபோது ரசிகர்கள் நீங்கள் எல்லோரும் என் சிறிய உலகத்தில் ஒரு பகுதியாக இருந்தீர்கள். நாளுக்கு நாள் நீங்கள் எனக்குக் கொடுக்கும் அன்பு வளர்ந்து கொண்டே வருகிறது. அது தான் என்னுடைய பலம்.

cine-vidiyar

இப்போது உங்களிடம் முக்கியமான ஒரு நபரை அறிமுகப்படுத்த இருக்கிறேன் என கூறிய அவர் தனது அடுத்த பதிவில் இவர் தான் அவர் எனக் குறிப்பிட்டு தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் காதலரின் பெயர் ராகவ் என்றும் அதை சுருக்கமாக ராகா என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நக்‌ஷத்ராவின் பதிவைப்பார்த்த சின்னத்திரை, வெள்ளித்திரை நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

https://www.instagram.com/p/CKTp2OynXPe/?utm_source=ig_web_button_share_sheet

Spread the love
x