latest tamil cinema news:சூர்யா தயாரிப்பில் பிரத்திவிராஜா? அதுவும் இந்த படத்திலா?

1 min read
latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

நடிகர் சூர்யா மற்றும் பிரத்திவிராஜ் இருவரும் குடும்பத்தினருடன் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர, இருவரின் சந்திப்பு குறித்த காரணம் இதுதான் என தற்போது கிசுகிசுக்கப்படுகிறது.

சூர்யா – பிருத்விராஜ் சந்திப்பு:

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘சூர்யா 42’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் 2023 இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறாது. இதனிடையே மலையாள நடிகர் பிருத்விராஜ்ஜை சூர்யாவும் ஜோதிகாவும் நேரில் சந்தித்தனர். அப்போது சூர்யா – ஜோதிகா ஜோடி, பிருத்விராஜ் அவரது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நான்கு பேரும் எடுத்துக்கொண்ட க்யூட்டான போட்டோ இணையத்தில் வைரலானது.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

பயோப்பிக்கா?

சூர்யா மற்றும்  பிரத்திவிராஜ் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தது இல்லை. ஆனாலும் சூர்யாவின் மனைவி ஜோதிகா, பிரத்திவிராஜூடன் மொழி என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் பிராம்மாண்ட வெற்றி கண்டு இன்றளவும் ரசிகர்கள் பாராட்டும் படமாக உள்ளது. இப்படி இருக்க தற்போது நடைபெற்ற சந்திப்பில் சூர்யா தயாரிப்பில் பிரத்திவிராஜை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி தொழிலதிபர் ஒருவரின் பயோபிக்காக இந்தப் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

எதிர் நீச்சல் கனிகாவா இது..! கவர்ச்சியில் கலக்கும் கனிகா ஸ்டில்ஸ்..!

2டி தயாரிப்பு:

இப்படமானது பிரிட்டனியா நிறுவனத்தின் மறைந்த தொழிலதிபர் ராஜன் பிள்ளை வாழ்க்கை வரலாற்றில் பிருத்விராஜ் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி இப்படத்தை தயாரிக்கும் என கூறப்படுகிறது.

என்ன தான் இருதரப்பு சந்தித்து பேசிக்கொண்டதாக கிசுகிசுக்கப்பட்டாலும், இதுவரை இது குறித்து அதிகாரப்பூர்வ எந்த தகவலும் வெளியாகவில்லை.

Spread the love
x