aari : வெளியே வந்தவுடன் அடுத்த படத்திற்கு கமிட் ஆன பிக்பாஸ் ஆரி..!

1 min read
aari-vidiyarseithigal.com

aari

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆரி நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

நடிகர் ஆரி முதல் முறையாக இயக்குனர் ஷங்கர் தயாரித்த ரெட்டசுழி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின் நெடுஞ்சாலை, மாயா என பல்வேறு படங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதனிடையே பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

aari-vidiyarseithigal.com

நேர்மையான குணம், அமைதியான பண்பு ஆகியவற்றிக்கு அவரின் பின் ஒரு ரசிகர் கூட்டமே உருவானது. அவரின் இந்த பண்பிற்காக சுமார் 16 கோடி மக்கள் அவருக்கு வாக்களித்து டைட்டில் வின்னர் ஆக்கினர். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் ஆரி என்ன செய்யப்போகிறார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

இந்நிலையில் அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக ஆரி (aari) நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படம் குறித்த அப்டேட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் வித்யா பிரதீப் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பூஜை இன்று நடத்தப்பட்டது அதில் இயக்குனர் ஏ.ஆர் . முருகதாஸ் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
x