milk is good for weight loss:உடல் எடையை குறைக்க பால் உதவுமா?

1 min read
milk is good for weight loss-vidiyarseithigal.com

milk is good for weight loss

உடல் எடை குறைப்பு என்றாலே பலரும் முதலில் செய்வது பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்கின்றனர். எனவே உடல் எடையை குறைப்பதில்  பாலின் பங்கு என்ன என்று இப்போது பார்க்கலாம்.

பால் பொருட்கள் :

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் தொடர்பாக பல கேள்விகள் இருக்கின்றன. உடல் எடையை குறைக்க எந்த வகையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும், எவற்றை சேர்க்க வேண்டும் என்பதில் மக்களுக்குப் பல வித குழப்பங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் பாலும் உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க பாலை தவிர்க்க வேண்டுமா?

best foods to eat at night for weight loss

எடை குறைப்பு:

முக்கியமாகப் பால் எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்குமா? என பலர் யோசிக்கின்றனர். பால் ஒரு பொதுவான உணவாகும், மேலும் இது ஆரோக்கியமானது, அதில் எந்த சந்தேகமும் இல்லை.

milk is good for weight loss-vidiyarseithigal.com

milk is good for weight loss

ஆனால் இதில் கொழுப்பு உள்ளது, எடை அதிகரிப்புடன் தொடர்புடைய சில காரணங்களைப் பால் கொண்டுள்ளது என்பதால் உடல் எடை குறைப்பின்போது நாம் பாலை நிராகரிப்பது சரியா? என்பது இப்போது கேள்வியாக உள்ளது. அதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

ஆரோக்கியமற்றது எனும் வதந்தி:

பாலில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது, மேலும் அதிக அளவில் இதில் கலோரிகள் உள்ளன. ஆனால் எடை இழப்பு என வரும்போது அதில் புறக்கணிக்க முடியாத இரண்டு காரணிகள் உள்ளன. 250 மிலி பாலில் கிட்டத்தட்ட 5 கிராம் கொழுப்பு மற்றும் 152 கலோரிகள் உள்ளன.

milk is good for weight loss-vidiyarseithigal.com

milk is good for weight loss

குறிப்பாக குறைந்த கலோரி உணவுக்கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் குறைந்த அளவு கலோரி உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர். எனவே அவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களைத் தவிர்க்கின்றனர்.

fruits for diet: டயட்டில் சாப்பிட வேண்டிய பழங்கள்..!

எடை அதிகரிக்குமா?

பால் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்காது, உண்மையில், அது சில நேரங்களில் உடல் எடையை குறைக்க உதவும். பால் ஆரோக்கியமான உணவாகும். இது உயர்தர புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. இது தசையை உருவாக்குவதற்கும், தசை வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

milk is good for weight loss-vidiyarseithigal.com

milk is good for weight loss

மேலும் இதில் துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

250 மிலி பாலில் 8 கிராம் புரதம் மற்றும் 125 மி.கி கால்சியம் உள்ளது. எனவே நீங்கள் உணவு கட்டுப்பாட்டிலிருந்தாலும் கூட குறைந்த அளவில் பால் உட்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

Spread the love
x