what is keto diet in tamil?

1 min read
What is keto diet in tamil-vidiyarseithigal.com

What is keto diet in tamil

உலக அளவில் உடல் எடையைக் குறைப்பதற் காகப் பின்பற்றப்படும் உணவுத் திட்டங்களில் (Diet) கீட்டோ (Ketogenic Diet) முக்கிய இடத்தை வகிக்கிறது. உணவில் மிக மிகக் குறைந்த அளவில் மாவுச்சத்தை (carbohydrate) எடுத்துக்கொண்டு அதிக அளவில் கொழுப்பையும், அதற்கும் கொஞ்சம் குறைவாகப் புரதத்தையும் எடுத்துக்கொள்வதுதான் கீட்டோ உணவுத் திட்டம்.

இந்தியாவில் வீகன், பேலியோ போன்ற உணவுத் திட்டங்கள் அளவுக்கு அதிகமானோர் கீட்டோ உணவுத் திட்டத்தைப் பின்பற்றுவதில்லை என்றாலும், இதைப் பின்தொடர்பவர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.

What is keto diet in tamil?

Keto Diet உங்கள் உடல் எடையை மிக வேகமாக குறைக்கும் முறை என்று பல அறிவியலாளர்களால் நிருபிக்கப்பட்டுள்ளது. எப்படி என்றால்? கீட்டோ Diet நீங்கள் செய்யும்போது நம் உடல் ஒரு கொழுப்பை குறைக்கும் இயந்திரமாக (Fat Burning Machine) செயல்படுகிறது. இதனை புரிந்துக்கொள்ள உடலுக்கு எப்படி ஆற்றல் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

அதாவது, மனித இனம் ஆரம்ப காலத்தில் தனது உணவு தேவைக்காக பல மிருகங்களை வேட்டையாடி மாமிச (Meat) உணவுகளை உண்டு வந்தது. இந்த மாமிச உணவில் fat மற்றும் protein மூலம் நம் உடளுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும் கிடைத்துகொண்டிருந்தது.




What is keto diet in tamil-vidiyarseithigal.com

What is keto diet in tamil

இதனால் நம் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக தேங்கி இருக்காமல், ஆற்றலின் தேவைக்காக உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து போனது.

ஆனால் இன்றைய நாகரீக வளர்ச்சியில் விவசாயத்தை தொடர்ந்து வந்த நாம் உணவு முறைகளில் அரிசி, கிழங்கு போன்ற carbohydrate அதிகம் உள்ள உணவுகளையே உண்டு பழக்கப்பட்டுவிட்டோம். இந்த carbohydrate உணவின் வழியாக நம் உடலுக்குள் சென்றவுடன் முதலில் glucose ஆக மாற்றபடுகிறது. இந்த glucose மூலமாகதான் நம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.

உடல் எடை அதிகரிப்பது எப்படி?

நாம் அதிகம் எடுத்துக்கொள்ளும் Carbohydrate மூலம் Glucose அளவு அதிகரிக்கிறது. இதனால் கூடுதலாக இருக்கும் Glucose, Glycogenesis என்னும் செயல்முறையின் மூலம் Glycogen ஆகா பரிணமிமிக்கும். இந்த glycogen அளவும் அதிகரிக்க அதிகரிக்க fat உருவாகி, உடலிலேயே தேங்கிவிடுகிறது.

எனவே ஆற்றலில் தேவைக்காக கொழுப்பில் இருந்து எடுக்கப்படுவது நிருத்தப்பட்டுவிடும். காரணம், நம் உடல் ஆற்றலுக்காக கார்போஹைட்ரேடை முதலில் குறிவைத்து. இதனால் நம் உடலில் உள்ள fat கரைக்கப்படுவது நின்றுபோய், அதன் விளைவாக fat அளவு அதிகரித்து உடல் எடையும் அதிகரித்தது.




What is keto diet in tamil-vidiyarseithigal.com

What is keto diet in tamil

இன்றைய உணவு முறைகளில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் அனைத்திலுமே carbohydrate அதிக அளவு இருக்கிறது. இந்த Carbohydrate அதிகம் உள்ள உணவுகளை குறைத்துவிட்டு, போதுமான அளவு Protein அதிக அளவு fat உள்ள உணவுகளை நம் உணவு முறைகளில் எடுத்துகொண்டால், நம் உடல் கொழுப்பில் இருந்து தேவையான ஆற்றலை எடுத்துக்கொண்டு, கொழுப்பை கரைத்து, உடல் எடையும் குறைந்துவிடலாம்.

இது எப்படி நடக்கிறது என்றால், உங்கள் உடலுக்கு glucose மூலம் கிடைத்துகொண்டிருந்த ஆற்றல் நின்றுபோனதால், ஆற்றலின் தேவைக்காக உங்கள் உடலில் தேங்கி இருக்கும் கூடுதலான கொழுப்பை கரைந்து Ketogenesis என்னும் செயல்முறையின் மூலம் Ketone என்னும் மூலக்கூறு உருவாகிறது. இந்த ketone நம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.

Keto diet நன்மைகள் :

  • keto diet, நீங்கள் ஆரோகியமாக வாழ ஒரு அருமையான உணவுமுறையை கொடுக்கிறது.
  • சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த keto diet எடுத்துக்கொள்வதன் மூலம் அவர்களின் insulin அளவு குறைய வாய்பிருக்கிறது. இதனால் சர்க்கரை நோயில் இருந்து விடுபடுவார்கள்.
  • keto diet cancer நோயை குணபடுத்தும் என்றும் நிருபிக்கபடுகிறது, அதாவது உடல் வளர்சிக்கு முக்கியமான தேவைகளில் ஒன்றான insulin அளவு குறைவதால், cancer செல்களும் வளர்ந்து பெருகுவது குறைக்கிறது.
  • keto diet மிக முக்கியமாக எல்லோரும் தேர்ந்தெடுப்பதன் காரணம் weight loss, நம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • நம் மூளை வேகமாக செயல்படவும் என்றும் சுருருப்பக இருக்கவும் keto diet உதவுகிறது.
  • keto diet தொடர்ந்து செய்பவர்களுக்கு வயிற்று தொப்பை என்பதே வராது.
    நாம் என்றும் இளமையாக இருப்பதற்கும் keto diet உதவுகிறது.

Keto diet உணவு பட்டியல் :

கடல் உணவுகள்,

குறைந்த கலோரி காய்கறிகள்,

சீஸ்,

அவகேடோ,

சிக்கன்,




முட்டை,

நட்ஸ் மற்றும் விதைகள்,

யோகர்ட், காட்டேஜ் சீஸ்,

பெர்ரீஸ்,

இனிப்பு சேர்க்காத டீ மற்றும் காபி,

டார்க் சாக்லெட்,

ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

கடல் உணவுகள் :

மீன் மற்றும் பிற கடல் உணவுகளில் வைட்டமின் பி, பொட்டாசியம், செலீனியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.

அவற்றோடு இதில் மிகக் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டும் அதிக அளவிலான புரதச்சத்தும் நிறைந்திருக்கிறது.

What is keto diet in tamil-vidiyarseithigal.com

What is keto diet in tamil

மேலும் மத்தி, விறால் மீன், சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக நிறைந்திருக்கின்றன. இவை உடலில் கெட்ட கொழுப்புகள் சேர விடாமல் தடுக்கும்.

தினமும் ரூ.333 முதலீடு செய்தால் 26 வருடத்தில் ரூ.9 கோடி வருமானம்…!

சீஸ்

சீஸில் அதிக அளவு கொழுப்புச் சத்து நிறைந்திருக்கிறது. ஆனால் இதில் கார்போஹட்ரேட் சுத்தமாகக் கிடையாது. அதோடு இதில் கால்சியமும் புரதமும் அதிக அளவில் இருக்கிறது.

அதேசமயம் சீஸில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக இருப்பதால் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும்போதுது கவனமாக இருக்க வேண்டும்.

க்ரீக் யோகர்ட் :

யோகர்ட்டும் காட்டேஜ் சீஸிலும் அதிக அளவிலான கால்சியமும் புரதச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. 4 அவுன்ஸ் க்ரீக் யோகர்ட்டில் கிட்டதட்ட 5 கிராம் அளவுக்கு கார்போஹைட்ரேட்டும் 12 கிராம் அளவுக்கு புரதமும் இருக்கிறது. அதே அளவு காட்டேஜ் சீஸில் 5 கிராம் அளவுக்கு கார்போஹைட்ரேட்டும் 18 கிராம் அளவுக்கு புரதமும் இருக்கிறது.

What is keto diet in tamil-vidiyarseithigal.com

What is keto diet in tamil




இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பிய உணர்வை பெற முடியும். இது உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

அவகேடோ:

இதயத்துக்கு நன்மை செய்யும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அவகேடோவில் அதிகமாக இருக்கின்றன.

அதோடு அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு, பொட்டாசியம், மினரல்கள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன.

What is keto diet in tamil-vidiyarseithigal.com

ஒரு மீடியம் சைஸ் அவகேடோவில் 9 கிராம் அளவுக்கு கார்போஹைட்ரேட்டும் 7 கிராம் அளவுக்கு நார்ச்சத்துக்களும் கிடைக்கும். இது உடலின் நல்ல கொலஸ்டிரால் அளவை அதிகரிக்கச் செய்து, ட்ரை- கிளிசரைடுகளைக் குறைக்க உதவுகிறது.

முட்டை:

முட்டையில் மிக அதிக அளவிலான புரதங்களும் வைட்டமின் பி, மினரல்கள் மற்றும் ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் ஆகியவை நிறைந்திருக்கின்றன.

இரண்டு முட்டையில் கார்போ ஹைட்ரேட்டுகள் கிடையாது. ஆனால் 12 கிராம் அளவுக்கு புரதங்கள் இருக்கின்றன. முட்டை பசியைத் தூண்டும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இதனால் வயிறு நிரம்பிய உணர்வு உண்டாவதோடு ரத்தத்தின் சர்க்கரை அளவும் கட்டுக்குள்ளே வைத்துக் கொள்ள முடியும்.

What is keto diet in tamil-vidiyarseithigal.com

What is keto diet in tamil

பெர்ரி:

பெர்ரி வகைகளில் ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. பெர்ரி வகை பழங்களில் கார்போஹைட்ரேட்டும் அதிக அளவிலான நார்ச்சத்தும் அதிகமாக இருக்கின்றன.

பிளாக் பெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்டிராபெர்ரி ஆகிய பெர்ரி வகை பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

சிக்கன்:

லீன் மீட் என்று சொல்லப்படும் இறைச்சி தான் சிக்கன். இதில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. கார்போஹைட்ரேட் இல்லாத, அதேசமயம் வைட்டமின்கள் பி மற்றும் மினரல்கள் நிறைந்த உணவாக சிக்கன் இருக்கும்.

ஆனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதய பாதிப்புகள் தொடங்கி, புற்றுநோய் ஆபத்து வரையிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு.




What is keto diet in tamil-vidiyarseithigal.com

What is keto diet in tamil

Keto diet ல் தவிர்க்க வேண்டிய உணவுகள் :

கீட்டோ டயட்டில்,

முழு தானியங்கள்,

ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகள்,

அதிக சர்க்கரை உள்ள பழங்கள்,




ஜூஸ்,

தேன்,

சர்க்கரை,

சிப்ஸ்,

பேக் செய்யப்பட்ட உணவுகள்

ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Spread the love
x