is paneer good for weight loss tamil

1 min read
is paneer good for weight loss tamil-vidiyarseithigal.com

is paneer good for weight loss tamil

பட்டர் நிரம்பிய பன்னீர் கடாய் அல்லது பன்னீர் டிக்கா என்பது யாருக்கேனும் பிடிக்காமல் இருக்குமா? அதே சமயம், இதை முறையாக பயன்படுத்தும் போது அது உங்கள் உடல் எடை குறைப்பிற்கு உதவிகரமாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆக, பன்னீரில் என்னென்ன வகையான சத்துக்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றபடி உங்கள் உணவுப் பழக்க, வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

உடலுக்கு ஆற்றலைத் தரும் உணவுகளில் மிக அடிப்படையானவை இரண்டு. 1. கார்போஹைட்ரேட், 2. புரதங்கள். ஆனால் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும்போது குறைந்த கார்போ உணவுகளை எடுத்துக் கொள்வது தான் நல்லது.

ஆனால் புரதங்கள் நிறைந்த உணவு அதிகமாக எடுத்துக் கொள்ள நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.

அது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு உடலில் இருக்கும் கொழுப்புகளை எரித்து ஆற்றலாக மாற்றுகிறது.

புரத சத்து:

உணவில் அதிகம் புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றதும் பெரும்பாலானோரின் தேர்வு பருப்பு வகைகளும் பனீரும் தான். ஏனெனில் பருப்பு வகைகளையடுத்து பனீர் மற்றும் காட்டேஜ் சீஸில் புரதங்கள் அதிக அளவில் இருக்கின்றன.

சரியா உணவைத் தேர்ந்தெடுப்பது என்பது எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்ல, பொதுவாகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆரோக்கியமான உணவு முறையைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

is paneer good for weight loss tamil-vidiyarseithigal.com

is paneer good for weight loss tamil

அந்த வகையில் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஏன் புரதத்தின் தேவைக்காக ஏன் பனீரை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான காரண்ங்களைத் தெரிந்து கொள்வோம்.

ஒரு கப் லோ ஃபேட் காட்டேஜ் சீஸ்-இல் 28 கிராம் புரதம் மற்றும் 163 கலோரிகள் உள்ளன. அதிக புரதம் இருப்பதால் என்ன பயன் கிடைக்கும்? புரதம் ஜீரனம் அடைய அதிக நேரம் தேவைப்படும். அதாவது உங்களுக்கு நீண்ட நேரம் உணவு செரிமானம் ஆகாமல் இருக்கும்.

ஆக, ஜீரனம் அடையும் வரையிலும் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். பசி எடுக்காது. அந்த வகையில் உடல் எடையை குறைக்க இது உதவிகரமாக இருக்கும்.

buddha statue for home vastu: லாபிங்க் புத்தா வயிற்றில் தடவினால் பணமழையா?

கேலோரி குறைவு:

குறைந்த கார்போ அளவும் அதிக புரதமும் கொண்ட பனீர் கலோரி அளவில் மிக மிகக் குறைந்தது. 100 கிராம் பனீரில் வெறும் 70 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. அதனால் எடை குறைக்க பனீர் சாப்பிடலாம்.

ஆனால் அது கொழுப்பு நீக்கப்படாத பாலில் இருந்து எடுக்கப்பட்ட பனீராக இருக்கக்கூடாது. அதேபோல சமைக்கும்போது எண்ணெய் சேர்ப்பது ஆகியவற்றால் நிச்சயம் கலோரி அளவு கூடும். அதனால் தந்தூரி, தவா ஃபரை போன்று எடுத்துக் கொள்வது நல்லது

is paneer good for weight loss tamil-vidiyarseithigal.com

is paneer good for weight loss tamil

நேரடியாக இதை மட்டுமே சாப்பிட்டால் கூட போதுமானது என்பதால், குறைவான கலோரிகளுடன் பசி அடங்கி விடும். இதன் எதிரொலியாக உடல் எடையை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக, பன்னீரை நீங்கள் கிரில் செய்து அல்லது பேக் செய்து சாப்பிடலாம்.

புரதம் நிறைந்தது:

பனீரை கிட்டதட்ட புரதங்களின் மூலம் என்று கூட சொல்லலாம். காட்டேஜ் சீஸைப் பொருத்தவரையில் 100 கிராம் சீஸில் கிட்டதட்ட 11 கிராம் அளவுக்குப் புரதம் கிடைக்கிறது.

ஆனால் காட்டேஜ் சீஸ் முழு கொழுப்புடைய பாலை பதப்படுத்தி எடுக்கப்படுகிறது. அதனால் அதில் கொழுப்பும் அதிகமாக இருக்கும்.

அதற்கு பதிலாக பசும்பாலில் இருந்து அதிலும் குறைந்த கொழுப்புள்ள பாலில் இருந்து எடுக்கப்படும் பனீரை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அதில் குறைந்த கொழுப்பும் அதிக புரதமும் கிடைக்கிறது.

Is peanut butter good for weight loss tamil

நல்ல கொழுப்பு:

கொழுப்பைப் பொருத்தவரையில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரண்டு வகைகள் உண்டு. இதில் நல்ல கொழுப்பு என்பது முட்டை, சீஸ், பால், நட்ஸ் போன்ற உணவுகளில் இருந்து கிடைப்பது.

ஆனால் கெட்ட கொழுப்பு என்பது சோடா போன்ற பானங்கள், பர்கர் – ப்ரைஸ் போன்ற துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் பொரித்த உணவுகளில் இருந்து கிடைப்பவை.

is paneer good for weight loss tamil-vidiyarseithigal.com

is paneer good for weight loss tamil

பனீரில் உள்ள கொழுப்பு நல்ல கொழுப்பு வகையைச் சார்ந்தது. இது உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை எரிக்கவும் உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்யவும் பயன்படுவதால் இயல்பாகவே எடை குறைய ஆரம்பிக்கும்.

கால்சியம் நிறைந்தது:

பன்னீர் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு அன்றாடம் தேவையான கால்சியம் சத்தில் 30 சதவீதம் பூர்த்தி அடைகிறது என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்.

எலும்பு நலன் முதல் ஒட்டுமொத்த உடல் நலன் வரையில், கால்சியத்தின் தேவை மிக அவசியமானது. குறிப்பாக, பெண்களுக்கு 30 வயதுக்கு மேல் அதிக கால்சியம் சத்து தேவைப்படும்.

is paneer good for weight loss tamil-vidiyarseithigal.com

is paneer good for weight loss tamil

 ஆக, குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு அதிக பன்னீர் பரிமாறுவதை பெண்கள் வாடிக்கையாக கொண்டிருந்தால், அதை இனி உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்குத் தான் கால்சியம் சத்து அதிக தேவையாகும்.

லியோனிக் ஆசிட்:

பன்னீரில் இருக்கும் மிக முக்கியமான சத்து இதுவாகும். பொதுவாக இது இறைச்சி மற்றும் இதர பால் பொருட்களில் தான் அதிகம் இருக்கும். குறிப்பாக, தாவரங்களை உண்ணும் விலங்களின் இறைச்சியில் இந்த சத்து அதிகம் காணப்படும். உங்கள் உடலில் படிந்துள்ள கொழுப்பு படிவங்களை நீக்குவதற்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் லியோனெலிக் ஆசிட் மிக முக்கியமானது ஆகும்.

Spread the love
x