irctc food order online: How to order food in train Tamil..!
1 min readirctc food order online
பொதுவாக நாம் சாலைகளில் பயணிக்கும் போது பல வகையான உணவு விடுதிகளை பார்க்க முடியும், அதுமட்டுமின்றி நாம் நினைக்கும் இடத்தில் எல்லாம் நிறுத்தி உணவை எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் ரயில் பயணங்களில் அவ்வாறு நடப்பதில்லை. ரயில் நிலையங்களில் அல்லது ரயிலில் சமைத்து தரப்படும் உனவுகளை மட்டும் எடுத்துக் கொள்ள முடியும்.
ஆனால் தற்போது அந்த நிலை மாறி நாம் நினைக்கும் உனவுகளை நாம் விரும்பும் உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்து ரயிலில் உட்கொள்ள முடியும் என்றால் நம்ப முடிகிறதா? சற்று நம்ப முடியாத ஒன்று தான். ஆனால் அதனை இந்திய ரயில்வே சாத்தியப்படுத்தி உள்ளது. எவ்வாறு என்று பார்க்காலமா…
quick weight loss in tamil ஒரே மாதத்தில் 7 kG..! இந்த 4 விஷயம் செஞ்சா போதும்..!
Order food through Irctc app :
ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்ய முதலில் நாம் செய்ய வேண்டியது. IRCTC ஆப் மற்றும் ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்யலாம். இந்த செயலி ஆனது Google play store மற்றும் Apple store என இரண்டிலும் கிடைக்கிறது.
How to order food in train என யோசித்தால் நீங்கள் முதலில் ecatering.irctc.co.in இந்த வலைத்தளத்தில் நுழைய வேண்டும். அதன் பின் உங்கள் ரயிலின் பெயர் அல்லது நிலைய எண்ணை பதிவிட வேண்டும்.
அதன் பின் உங்கள் PNR ஐ உள்ளிட்டு உங்களுக்கு தேவையான உணவகங்களை நீங்கள் ஆராயலாம்.
உங்கள் உணவைத் தேர்ந்தெடுத்து, ஆன்லைனில் பணம் செலுத்தும் ஆர்டரைத் திட்டமிடுங்கள் அல்லது டெலிவரிக்கு பணம் செலுத்துங்கள்
நீங்கள் தேர்ந்தெடுத்த நேரத்தில் உங்கள் உணவு விரைவில் டெலிவரி செய்யப்படும்
மும்பை சென்ட்ரல் (பிசிடி), சத்ரபதி சிவாஜி டெர்மினல் (சிஎஸ்டி), புது தில்லி ரயில் நிலையம் (என்டிஎல்எஸ்), பழைய டெல்லி ரயில் நிலையம் (டிஇஎல்), பெங்களூர் சிட்டி ஜங்ஷன் (எஸ்பிசி) ஆகிய ரயிலில் உணவுப்பெட்டி டெலிவரி செய்யப்படும்
irctc food order online
அவற்றில் சில முக்கிய நிலையங்கள் : சென்னை சென்ட்ரல் (MAS), கான்பூர் (CNB), அலகாபாத் சந்திப்பு (ALD), வாரணாசி (BSB), லக்னோ (LKO), இடார்சி (ET), போபால் சந்திப்பு (BPL), விஜயவாடா (BZA) போன்றவை. IRCTC இதை விரிவுபடுத்துவதில் முனைப்பாக உள்ளது. ரயிலில் ஆன்லைன் உணவை ஆர்டர் செய்வது பயணிகள் மத்தியில் ஒரு ட்ரெண்டாக உள்ளது எதிர்காலத்தில் மேலும் பல நிலையங்களுக்கு eCatering சேவை விரிவுப்படுத்தப்படும் என ஐஆர்சிடிசி கூறியுள்ளது.
இவ்வாறு மட்டுமின்றி மேலும் ஒரு வகையிலும் உங்கள் உணவுகளை ஆர்டர் செய்யலாம். எப்படி என்றால் வாட்ஸ்ஆப் மூலம் தான் ஆகும். எப்படி என்று பார்க்கலாமா…
best places to visit in Pondicherry..! Must visit Places..!
Order food through whatsapp:
மக்களுக்கு உணவுகளை ஆர்டர் செய்வதை எளிமையாக மாற்றுவதற்காக ஜியோவுடன் இணைந்து இந்திய ரயில்வே உருவாக்கியுள்ள சேவை தான் ஜூப் ( zoop) .பயணிகள் தங்களுடைய PNR எண்ணை மட்டும் பயன்படுத்தி தாங்கள் இருக்கும் இருந்தே எந்தவொரு ஆப்பினையும் டவுன்லோட் செய்யாமல் உணவை எளிதாக ஆர்டர் செய்யலாம்.
Zoop இன் புதிய WhatsApp சேவையானது பயணத்தில் அடுத்து வரவிருக்கும் எந்த ஸ்டேஷனிலும் மக்கள் ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. மேலும் உணவு டெலிவரி ஆப்களைப் போலவே நிகழ்நேர உணவு கண்காணிப்பு அம்சங்களையும் வழங்குகிறது. வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்வதில் பயணிகளுக்கு சிரமம் இருந்தால் அவர்கள் நேரடியாக சாட்போட்டில் உதவி கேட்கலாம்.
ஜூப் வாட்ஸ்அப் சாட்போட் எண் +91 7042062070 ஐ உங்கள் மொபைலில் சேமிக்கவும். அல்லது நீங்கள் https://wa.me/917042062070 தளத்திற்கு செல்லலாம்.
பின் வாட்ஸாப்பில் சென்று உங்கள் சாட்பாட்டினை திறக்கவும். அதில் சிவா என்ற பாட் உங்களை வரவேற்கும்.
அதன் பின் உங்கள் PNR எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் ரயில் எண் , உங்கள் பெர்த் எண் அனைத்தையும் வழங்கும்.
irctc food order online
இவை அனைத்தும் குறித்து சரிபார்ப்பு முடிந்த பின்னர் உங்களுக்கான உணவகத்தை தேர்ந்தெடுக்க சொல்லும். அதில் உங்களுக்கு தேவையான அனைத்து உணவகங்களும் இருக்கும்.
சாட்போட்டில் ஆர்டர் மற்றும் கட்டண முறை தொடர்பான அனைத்து விவரங்களையும் பயணிகள் பெறுவார்கள்.
உணவை ஆர்டர் செய்து பரிவர்த்தனையை முடித்த பிறகு, சாட்போட்டிலிருந்தே உங்கள் உணவைக் கண்காணிக்கலாம்.
ரயில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையத்தை அடைந்தவுடன் Zoop உங்கள் உணவை டெலிவரி செய்யும்.
இவ்வாறு இரண்டு வழிகள் மூலம் ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து பெறலாம். ரயில் டிக்கெட்கள் ஆர்டர் செய்த காலம் சென்று ரயிலில் உணவினை ஆர்டர் செய்யும் காலத்தில் இருப்பதும் ஒரு வகை ஆச்சரியமே!!!