quick weight loss in tamil ஒரே மாதத்தில் 7 kG..! இந்த 4 விஷயம் செஞ்சா போதும்..!
1 min readquick weight loss in tamil
எடை கூட கூட உடலில் சோம்பேறி தனம் மற்றும் வியாதிகளும் கூடிக் கொண்டே தான் போகும். அவ்வாறு ஒரு முறை கூடிய எடையை குறைப்பது என்பது சாதாரண் விஷயம் அல்ல மிகவும் சிரமம்படும் நேரிடும். ஆனால் எளிதில் குறைக்க அதுவும் 7 கிலோ வரை குறைக்க சில வழிகள் உள்ளன. அது என்னவென்று பார்க்கலாம்.
ஒரு மாதத்தில் 15 பவுண்ட் அளவுக்கு எடையை குறைக்க விரும்பினால், அதுவும் ஆரோக்கியமான முறையில் குறைக்க விரும்பினால் சில அடிப்படையான டயட் ட்ரிக்குகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பட்டினியாக கிடப்பது, ஏதேனும் ஒரு வேளை உணவை சாப்பிடாமல் நிறுத்துவது, அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்து உடலை வருத்திக் கொள்வது போன்ற பலவற்றாலும் எடையை குறைக்க முடியும். அது தற்காலிகமானது மற்றும் ஆரோக்கியமற்றது.
குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து உணவுகள்
சிலருக்கு நிறைய சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் அதேசமயம் எடையையும் குறைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எனெனில் நிறைய பேருக்கு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்.
ஆனால் எடை கூடும் என்ற பயமும் இருக்கும். அவர்களுக்கு தான் இந்த சீக்ரெட் டிப்ஸ். நீங்கள் வழக்கம்போல நிறயை சாப்பிடலாம். எடையையும் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கலாம். அது எப்படி என்று கேட்கிறீர்களா? ரொம்ப சிம்பிள்.
quick weight loss in tamil
உங்களுடைய உணவுத் தட்டில் பாதி அளவுக்கு குறைந்த கலோரி உணவுகளையும் அதிக அளவு நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி சாப்பிடும்போது நிறைய சாப்பிட்டது போலவும் இருக்கும். அது ஆரோக்கியமான கலோரிகளாகவும் எடையை அதிகரிக்காமல் குறைக்கவும் உதவியாக இருக்கும்.
ரிஃபைண்ட் கார்போஹைட்ரேட்டுகளை தவிருங்கள் (quick weight loss in tamil)
முழு தானியங்களைப் போல ரிஃபைண்ட் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை நாம் பெற முடியாது. இவற்றில் நார்ச்சத்துக்களும் ஊட்டச்சத்துக்களும் மிக மிகக் குறைவு. அதனால் இது வயிறு நிரம்பிய உணர்வை தரவோ அல்லது பசியை கட்டுப்படுத்தவோ செய்யாது. இதனால் உடல் எடை கூடுமே தவிர குறையாது.
தவிர்க்க வேண்டிய ரிஃபைண்ட் கார்போ உணவுகள்
பேஸ்ட்ரிஸ்,
குக்கீஸ்,
சர்க்கரை சேர்த்த .இனிப்பு வகைகள்,
வெள்ளை பிரட்,
பாஸ்தா,
பேக் செய்யப்பட்ட சிப்ஸ், கேக் வகைகள்,
அதற்கு மாற்றாக,
பிரௌன் ரைஸ், குயினோவா,
முழு தானியங்களில் செய்த பிரட், நூடுல்ஸ்
போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
மெதுவாக சாப்பிட வேண்டும்
எடையை குறைப்பதில் உள்ள மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? நாம் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவுகளை எப்படி குறைக்கிறோம், குறைவாக கலோரிக்ள மூலமாகவே எப்படி திருப்தியடைகிறோம் என்பது மிக முக்கியம். குறைந்த கலோரி உணவுகள் எடுத்துக் கொள்ளும்போது சீக்கிரம் பசி எடுக்கும். அதிகமாக சாப்பிட தூண்டும். அதனால் புரதச்சத்தும் நார்ச்சத்துக்களும் அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. (quick weight loss in tamil)
அப்படி எடுக்கும்போது வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகும். பசியும் எடுக்காது. இதில் இருக்கும் முக்கியமான விஷயமே புரத உணவுகளையும் நார்ச்சத்து உணவுகளையும் நன்றாக மென்று, மிகவும் மெதுவாக சாப்பிடுங்கள்.
இப்படி சாப்பிடும்போது மெட்டபாலிசமும் சீராகும். உணவு செரிப்பதற்கு போதிய நேரம் எடுத்துக் கொள்வதால் நீண்ட நேரம் பசியின்றி இருக்க முடியும். இதுதான் எடையை வேகமாக குறைப்பதற்கான மந்திரம் என்றே சொல்லலாம்.
அதிக புரதங்கள் எடுத்துக் கொள்வது (quick weight loss in tamil)
உங்களுடைய உணவுத் தட்டில் முதல் பாதியளவுக்கு குறைந்த கலோரி உணவுகளும் அதிக நார்ச்சத்து உணவுகளும் எடுத்துக் கொள்வீர்கள். மீதியுள்ள பாதி தட்டில் புரத உணவுகள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் நார்ச்சத்துக்களும் புரதங்களும் வயிறை நிறைவாக வைத்திருக்கச் செய்யும். அதனால் உங்களுடைய ஒவ்வொரு வேளை உணவிலும் புரதங்கள் கட்டாயம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இவை தாவர அடிப்படையிலான புரதமாகவும் இருக்கலாம். விலங்குகள் அடிப்படையிலான புரதமாகவும் இருக்கலாம்.
லீக் மீட் (சிக்கன், மீன்) ,
யோகர்ட்,
பீன்ஸ் வகைகள்.,
நட்ஸ் மற்றும் விதைகள்,
முட்டை
ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.