tamil cinema news: தங்கபதக்கம் நடிகரின் தற்போதைய நிலை? பாத்தா ஷாக் ஆய்டுவீங்க..!
1 min readtamil cinema news
சினிமாவில் வரும் அனைவரின் வாழ்கையும் ஒரே மாதிரி அமைவதில்லை. பல நடிகர், நடிகைகள் என்ன ஆனார்கள் என்றே பலருக்கு தெரிவதில்லை. சில நேரங்களில் நமக்கு தெரியாமலேயே அவ்வாறு வரும் நடிகர்களின் ரசிகர்களாக நாம் மாறி இருப்போம். குறிப்பிட்ட சில காட்சிகளில் மட்டும் நடித்து மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்த நடிகர், நடிகைகள் உள்ளனர்.
ஒரு முன்னனி நடிகர் சில நாட்களுக்குள் பின் நடிக்கவில்லை என்றால் அவர்கள் எப்போது நினைவில் இருப்பார்கள். ஆனால் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அவ்வாறு இல்லை. அவர்களை மக்கள் விரைவில் மறந்து விடுவார்கள் என்றே கூறலாம். அந்த வகையில் மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்து பிறகு சரிவர வாய்ப்பு கிடைக்காததால் மறைந்து போன நடிகர்கள் பலர் உள்ளனர்.
இப்படி பார்கையில் அந்த லிஸ்டில் பல நடிகர், நடிகைகள் உள்ளனர். ஆனால் அதில் குறிப்பிட்ட ஒரு நபரை நம்மால் மறக்க முடியாது. அந்த கால கட்டத்தில் சில படங்களை இயக்கியும், அவர் இயக்கி படங்களில் நடித்தவர் தான் மறுமலர்ச்சி பாரதி ஆவார். மம்மூட்டி நடித்து மாபெரும் வெற்றி படம் மறுமலர்ச்சி ஆகும்.
tamil cinema news
tamil cinema news
அந்த படத்தில் நடித்து தான் இவர் அப்பெயரை பெற்றார். அந்த படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் வைகை புயலுடன் இணைந்து காமெடி புயலை உருவாக்கி இருப்பார். அந்த படம் இவருக்கு மாபெரும் பெயரை பெற்றுக்கொடுத்ததன் காரணமாக தம் பெயரை மறுமலர்ச்சி பாரதி என மாற்றிக் கொண்டார்.
இவர் நடிப்பு மட்டுமல்லாமல் சில படங்களை இயக்கி மற்றும் அதில் நடித்தும் உள்ளார். அவ்வாறு இவர் விஜயகாந்த் நடிப்பில் கள்ளழகர் மற்றும் சரத்குமார் நடிப்பில் மானஸ்தன் ஆகிய படங்களை இயக்கி அதில் சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தும் உள்ளார். இவர் கடைசியாக தமிழில் இயக்கிய படம் வள்ளுவன் வாசுகி ஆகும்.
அதன் பின் அவருக்கு சரிவர பட வாய்ப்புகள் அமையாமல் போனது. சில நாட்களுக்குள் முன் சிறு நீரக கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவருக்கு மாற்று சிறு நீரகம் பொறுத்து வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். நிறைய பணம் செலவாகும் என்பதால் அவரது குடும்பத்தினர் தயங்கி நிற்கின்றனர். காரணம் இவருக்கு யாரிடமும் உதவி கேட்டு செல்லும் பழக்கம் இல்லையாம்.
இறுதியாக இயக்குனர்கள் சங்கம் மூலம் அவருக்கு உதவி கிட்டவே சிகிச்சை நல்லபடியாக முடிந்து வீடு திரும்பியுள்ளார். விரைவில் அவர் நங்கு குணமடைய வேண்டும் என பல திரை பிரபலங்கள் வாழ்த்தி வருகிண்றனர்.