recurring deposit என்றால் என்ன? முழு விவரம்..!
1 min readrecurring deposit
வாழ்வில் நாம் ஈட்டும் பணத்தில் சிறிதளவாது சேமித்து வைக்க வேண்டும் என்று பலர் கூறி கேட்டுள்ளோம். வரவுக்கு மீறிய செலவு எப்போதுமே துன்பத்தை மட்டுமே தரும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும். கடந்த காலங்கள் முதல் தற்போது வரை சேமிப்பு என்பது முக்கிய ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. பணமாக, நகையாக, இடமாக என பல வித சேமிப்புகள் உள்ளன.
தற்போது எல்லாம் சேமிப்புகளை தாண்டி முதலீடுகள் மூலம் சேமிக்க தொடங்கிவிட்டனர். வங்கிகளில் கிடைக்கும் முதிர்வு தொகையை காட்டிலும் முதலீடுகள் மூலம் அதிக முதிர்வு தொகை கிடைப்பதால் மக்கள் முதலீடுகளில் பணத்தை சேமிக்க தொடங்கி உள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் தற்போது வங்கிகளில் சேமித்து வருகின்றனர்.
வங்கிகளில் பணத்தை சேமிக்கும் போது பலவித திட்டங்கள் காண்பிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் ரெக்கரிங்க் டெபாசிட் ஆகும். இந்த ரெக்கரிங்க் டெபாசிட் என்றால் என்ன? அதில் சேமிப்பதில் நமக்கு என்ன வருவாய் கிடைக்கும் என்பதை குறித்து இப்பதிவில் முழுமையாக காணலாம்.
ரெக்கரிங்க் டெபாசிட் என்றால் தொடர் வைப்பு தொகை சேமிப்பு திட்டம் ஆகும். தொடர்ச்சியான வைப்புத் தொகையை செலுத்துவதன் மூலம், தனி நபர்கள் தவறாமல் சேமிக்கும் பழக்கத்தை அடைய உதவுகிறது. ஒருவரின் குறுகிய கால மற்றும் நீண்ட கால தேவைக்கு, ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை சேமிக்க இது ஒரு சிறந்த வழியாகும்.
இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவிலான தொகையை முதலீடு செய்து குறிப்பிட்ட காலத்தில் கணிசமான தொகையாக, வட்டி விகிதத்துடன் சேர்த்து, லாபமாக பெற முடியும்.
கால அளவு:
முதலில் நாம் தொடங்கும் ரெக்கரிங்க் டெபாசிட்ற்கு குறைந்தபட்சமாக ரூபாய் 100 வைத்து கூட தொடங்கலாம். ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்றால் போல முதலீடு தொகை மாறுப்படலாம். அனைத்து வங்கிகளிலும் இந்த ரெகுர்ரிங்க் டெபாசிட் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 12 மாதங்கள் முதல் 120 மாதங்கள் வரை தேர்ந்தெடுக்கலாம்.
recurring deposit
வட்டி விகிதம்:
ரெக்கரிங் டெபாசிட்டுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் என்பது, அந்தந்த வங்கிகளின் டெர்ம் டெபாசிட் அல்லது ஸ்பெஷல் டெர்ம் டெபாசிட் பொறுத்து அமையும். முதலீடு செய்யும் போதே,ஒருவேளை பணம் தேவைப்பட்டால், ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்துள்ள 90 சதவீத பணத்தைக் கடன் அல்லது ஓவர் டிராஃப்ட் ஆகப் பெற முடியும்.
ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து கிடைக்கும் வட்டி லாபத்திற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் இடையில் வெளியேறலாம். ஆனால் அதற்கு ஏற்றவாறு வட்டி விகித லாபமும் குறையும்.
நாமினேஷன்
ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது அது முதிர்வடையும் காலத்தில் யாருக்கு சென்று சேர வேண்டும் என்பதை குறிக்கும் நாமினேஷனையும் தேர்வு செய்ய முடியும். ரெக்கரிங் டெபாசிட் முதலீடு செய்யும் போது அதற்கான பாஸ்புக்கும் வழங்கப்படும். அதே சமயம், பெரும்பாலான வங்கிகள், இதற்கான தவணை தொகையை வங்கி கணக்கில் இருந்து நேரடியாக எடுத்து கொள்வதால், தவணை செலுத்தியதற்கான குறிப்புகள் மாறும் எவ்வளவு வட்டி சேர்ந்துள்ளது என்பதை, நேரடியாக இணையத்திலும் பார்த்து கொள்ளும் வசதிகளும் உள்ளன.
recurring deposit
இதற்கு வழங்கப்படும் வட்டி தொகையை, மொத்தமாக முதிர்வின் போது பெறுதல் என்பது ஒரு முறை. அதே சமயம், தேவைப்பட்டால், வட்டி தொகையை மட்டும் மாதாந்திரம், காலாண்டு அல்லது அரையாண்டு என்ற கால அளவில் பெற்று கொள்ளலாம். பொதுத்துறை வங்கிகள் தொடங்கி, சில தனியார் நிதி நிறுவனங்கள் வரை பெரும்பாலான நிறுவனங்களிடம் இந்த தொடர் வைப்பு நிதி திட்டம் உள்ளது. இதில், ஒவ்வொரு வங்கிக்கும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இடையிலான வட்டி விகிதங்கள் மாறும்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். வட்டி விகிதம் என்பது பெரும்பாலும் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும்.
அனைத்து குடியுரிமை பெற்ற இந்தியர்களும், இந்து பிரிக்கப்படாத குடும்பங்களும் தொடர் வைப்பு நிதி கணக்கைத் திறக்க தகுதியுடையவர்கள். இந்த கணக்கை சிறார்களுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் திறக்கலாம்.