How to Open Account in Post office Online?தமிழில் அறிய..!
1 min readippb mobile banking login
வங்கிகளில் பெரும்பாலான நபர்கள் கணக்கு வைத்திருப்பீர்கள். ஒரு சிலர் சிறிய அளவிலான பைனான்ஸ் நிறுவனத்தில் கணக்கு வைத்திருப்பீர்கள். அதுபோல தபால் அலுவலகத்திலும் கணக்கு தொடங்க முடியும் என பலருக்கு தெரியும். சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி தெரியாதவர்களுக்கு கூடுதலான தகவலுடன் தெரிந்து கொள்ள தான் இந்த பதிவு.
டிஜிட்டல் என்ற ஒற்றை சொல்லை நோக்கி தான் உலகம் ஒடிகொண்டிருக்கிறது. அனைத்திலும் டிஜிட்டல் அதன் திறனை காட்டி வருகிறது. அந்த வங்கிகளிலும் டிஜிட்டல் முறையில் அனைத்து செயல்பாடுகளும் வந்துள்ளன. வங்கிகளுக்கு நிகராக கருதபடும் தபால் துறை சேமிப்புகளும் டிஜிட்டல் நிலையை எட்டி வருகிறது. அப்படியாக தான் இனி தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு தொடங்க அஞ்சலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே தொடங்கலாம்.
இன்றைய நாளில் வங்கி கணக்கில் பெறும் பெரும்பாலான சேவைகள் அனைத்தையும் போஸ்ட் ஆபீஸ் கணக்கிலும் பெற முடிகிறது. மொபைல் பேக்கிங், ஆன்லைன் பேக்கிங், ஏடிஎம் கார்டு போன்ற அனைத்து வசதிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
நகர்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் அஞ்சல் சேமிப்புக்கு நல்ல வரவேற்பு உண்டு. அஞ்சல் சேமிப்பில் இருக்கும் 9 வகையான சிறுசேமிப்பு திட்டங்கள் பெண் பிள்ளைளின் கல்வியை உறுதிபடுத்துகிறது, ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்ட்ம், வருங்கால வைப்பு நிதி திட்டம் போன்றவை வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற திட்டமாக இருக்கிறது. இதனால் அஞ்சலக சேமிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது.
ippb mobile banking login: How to Open Account in Post office Online?
இவ்வளவு பலன்களை கொண்டிருக்கும் போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்டை ஆன்லைனில் தொடங்குவது எப்படி? என பார்க்கலாம் வாங்க. அஞ்சலகத்தின் IPPB app (ippb mobile banking login) மூலம் தொடங்கிக் கொள்ளலாம். அதனுள் சென்று ஒபன் அக்கவுண்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்து, அதில் பான் எண் மற்றும் ஆதார் நம்பரை பதிவு செய்ய வேண்டும். இந்த ஆப் இல்லாதவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளவும்.
Follow us in telegram : https://t.me/vidiyarseithigal
அதன் பின்னர் ஆதார் வெரிபிகேஷன் செய்யப்படும். ஆதார் எண்ணில் கொடுக்கப்பட்ட பதிவு மொபைல் எண்ணுக்கு ஓரு ஓடிபி வரும். அடுத்தது, அம்மா பெயர், கல்வித் தகுதி, முகவரி, நாமினி விவரம் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும். இந்த அனைத்து விவரங்களையும் சரியாக கொடுத்த பின்னர், உங்களது அஞ்சல கணக்கு ஆக்டிவேட் ஆகிவிடும் (ippb mobile banking login)
top 10 places to visit in goa..!
இதோடு முடிந்தது என நினைத்து விட கூடாது, அதாவது இந்த டிஜிட்டல் சேமிப்பு கணக்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே வேலிட் ஆக இருக்கும். இதனை துவங்கிய ஒரு வருடத்திற்குள், நீங்கள் நேரடியாக சென்று பையோமெட்ரிக் முறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்வது அவசியம். போஸ்ட் ஆபீஸ் மொபைல் பேங்கிங் வசதியை எப்படி பெறுவது என்பது குறித்தும் இப்போது பார்க்கலாம்.
https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx என்ற இணையத்தில் சென்று, India Post Payments Bank என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதில் மெனு பாரில் services என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் IPPB mobile app என்பதை https://www.ippbonline.com/web/ippb/mobile-app என்ற இணையத்தில் சென்று லாகின் செய்து கொள்ளலாம். ஆனால் ஆன்லைனில் நீங்கள் இந்த சேவையை தொடங்கும் முன்பு, நேரிடையாக சென்று KYC விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும்.