top 10 places to visit in goa..!

1 min read
top 10 places to visit in goa-vidiyarseithigal.com

top 10 places to visit in goa

நம் அனைவருக்குமே பள்ளி பருவம் முதல் வெளியூர் ஒன்றுக்கு நண்பர்களுடன் செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தால் அது கோவா என்று தான் கூறுவோம். அப்படி என்ன அந்த கோவா வில் உள்ளது என்பது பலருக்கு தெரிந்திருக்கும். ஒரு வேளை தெரியாமல் இருந்தால் உங்களுக்காக சில தகவல்கள் சுருக்கமாக பார்க்கலாம்.

கோவா என்பது ஒரு பார்ட்டி செய்யும் இடம் என்று தான் பலர் எண்ணுகின்றனர். நண்பர்களுடன் சென்று உல்லாசமாக இருக்க சிறந்த இடம் கோவா என்பதற்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே சமயத்தில் குடும்பமாகவும் சென்று கோவாவை ரசிக்கலாம். ஒரு இயற்கை எழில் கொஞ்சும் நகரம் கோவா என்று கூறலாம். மேலும் பல பழங்கால சின்னங்களை கோவா உள்ளடக்கி உள்ளது.

அப்படியாக கோவாவில் சுற்றி பார்க்க கூடிய சில இடங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.

top 10 places to visit in goa

FORT AGUADA:

top 10 places to visit in goa-vidiyarseithigal.com

top 10 places to visit in goa

கோவாவில் நீங்கள் ஒரு புராதாண இடத்தை சுற்றி பார்க்க விரும்பினால் முதலில் நீங்கள் செல்ல வேண்டிய இடம் இந்த FORT AGUADA ஆகும். 17ம் நூற்றிண்டில் கட்டபட்ட இந்த கோட்டை sinquerim beach அருகாமையில் வட கோவாவில் உள்ளது. முன்னொரு காலத்தில் டச் மற்றும் மராதாஸ் ஆகியோர்க்கு இடையே முக்கிய இடமாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது. உயரிய சுவர்கள், கலங்கரை விளக்கம் என பலவற்றை உள்ளடக்கிய ஒன்றாக இது உள்ளது. இதனை பற்றி நீங்கள் முழுவதும் தெரிந்து கொள்ள நீங்கள் சுற்றி பார்க்க விரும்பினால் நிச்சயம் ஒரு Guide உங்களுடன் கூட்டி செல்வது நல்லது.

SINQUERIM BEACH : top 10 places to visit in goa

FORT AGUADA வரை சென்று வீட்டிர்கள் என்றால் நிச்சயம் sinquerin பீச் பார்காமல் வர முடியாது. ஏனென்றால் இரண்டும் மிகவும் அருகில் உள்ள ஒன்றாக உள்ளது. நீங்கள் கோட்டை பார்த்துவிட்டால் கண்டிபாக இந்த பீச்சினை கூட சென்று பார்க்கலாம். அப்படி என்ன் இதில் உள்ளது கேட்டீர்கள் என்றால்,அந்த கடற்கரையின் அழகை கூறலாம். இயற்கையுடன் கடல் நிறைந்த இடமாக உள்ளது. சாதாரணமாக ரசிக்க மட்டும் அல்லாமல் பல தண்ணீர் சார்ந்த விளையாட்டுகள் நிறைந்த இடமாக இது உள்ளது.

BAGA BEACH:

top 10 places to visit in goa-vidiyarseithigal.com

top 10 places to visit in goa

கோவாவில் நம்மால அதிக காணப்படும் இடங்கள் கடற்கரையாக தான் இருக்கும். எங்கு திரும்பினாலும் கடலால் சூழப்பட்ட இடமாக தான் இருக்கும். அப்படிபட்ட கோவாவில் காண்கூடிய முக்கிய் கடற்கரை பாகா கடற்கரை ஆகும். கோவா சுற்றுலா முழுமை பெற வேண்டும் என்றால் நிச்சயம் நீங்கள் இங்கு சென்றால் தான் முடியும். கோவாவில் பெருமளவில் நடக்கும் பீச் பார்ட்டிகள் இங்கு தான் அதிகம். அதிலும் இந்த கடற்கரையில் இரவு நேர பொழுது கழிப்பது மிக சிறப்பான ஒன்று. நீங்கள் ஒரு பார்ட்டி பிரியர் என்றால் நிச்சயம் உங்களுக்காக தான் இது.

BUTTERFLY BEACH:

கோவா சென்று விட்டு இந்த கடற்கரைகளை மட்டும் பார்த்துவிட்டு திரும்புங்கள் என்று எதனையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால் கோவாவில் உள்ள அனைத்து கடற்கரையும் மிகவும் அழகு வாய்ந்தவை. இருப்பினும் நாம் முன்னரே குறிப்பிட்ட போல மிகவும் சிறப்பான இடங்களை மட்டும் தேர்வு செய்து பட்டியலிட்டு வருகிறோம். அதில் ஒன்று தான் பட்டர்பிளை கடற்கரை. பிற கடற்கரைகள் போல மிக சிறப்பான ஒன்று கூற முடியாது. காரணம் இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக தான் இருக்கும். ஆனால் நாம் கடற்கரைக்கு செல்வது எதற்காக அமைதி மற்றும் இயற்கை ரசிக்க தான் அப்படி விரும்பும் நபர்களுக்கு சிறப்பான இடம் இந்த கடற்கரை.

DUDHSAGAR FALLS :

top 10 places to visit in goa-vidiyarseithigal.com

top 10 places to visit in goa

பலரால் இன்று காண விரும்பும் நீர்வீச்சிகளில் ஒன்றாக இது உள்ளது. இயற்கையை அதன் அருகில் சென்று ரசிக்க முக்கிய இடமாக இந்த Dudhsagar நீர்வீழ்ச்சி உள்ளது. சினிமாவில் நீர்வீழ்ச்சி அருகில் ரயில்கள் கடக்கும் காட்சிகளை பார்த்து இருக்போம். அது வேறு எங்கும் இல்லை இங்கு தான். இங்கு சென்றால் அந்த அழகான காட்சியை கண்டிபாக ரசிக்கலாம்.

waterfall: Best Waterfalls in India To visit in tamil..!

NATIONAL AVIATION MUSEUM:

முன்னரே சொன்னது போல கோவா ஒரு பார்ட்டி நகரம் மட்டுமல்ல அங்கு புராதாண சின்னங்கள் நிறைய உள்ளன. அப்படிபட்ட கோவாவில் அருங்காட்சியத்திற்கு பஞ்சமில்லை. நிறைய அருங்காட்சியங்கள் உள்ளன அதில் ஒன்று தான் NATIONAL AVIATION MUSEUM. மற்ற அருங்காட்சியங்களை காட்டிலும் அப்படி என்ன இதில் சிறப்பு என்று பார்த்தால் உலகிலே சில அருங்காட்சியங்கள் மட்டும் தான் விமான அருங்காட்சியங்களாக உள்ளன அதில் ஒன்று தான் இது. இங்கு ஏராளமான விமானங்கள், பாராசூட்கள், வெடிகுண்டுகள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.

MOLLEM NATIONAL PARK :

vidiyarseithigal.com

top 10 places to visit in goa

முன் கூட்டியே சொன்னது போல கோவா இளசுகளுக்கு மட்டுமல்ல குடும்பங்களுக்கும் ஏற்ற இடம். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றி பார்க்க பல இடங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் MOLLEM NATIONAL PARK இந்த பூங்காவில் டிரங்கிக் பயணம் மேற்கொள்வது ஒரு அலாதியான இன்பத்தை அளிக்கும் என்று கூறலாம்.  பல வகையான விலங்குகளை இங்கு உங்களால் கண்டுகளிக்க முடியும். மேலும் நீங்கள் உள்ளே சென்று வெளியே வரும் ஒருவர் உங்களுடன் வந்து சுற்றி காட்டுவர். எனவே நீங்கள் பயமின்றி செல்லலாம். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட சிறப்பான இடம் என்று கூறலாம் நிச்சயம்.

FOLLOW US IN TELEGRAM: https://t.me/vidiyarseithigal

ARPORA NIGHT MARKET:

vidiyarseithigal.com

top 10 places to visit in goa
எங்கு சென்றாலும் அந்த ஊரின் முக்கிய பொருட்களை வாங்கி வருவது ஒரு நடைமுறை என்றே சொல்லலாம். அப்படியாக கோவாவின் முக்கிய மற்றும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் இடமாக இந்த ARPORA NIGHT MARKET உள்ளது. கோவாவின் முக்கிய சுற்றி பார்க்கும் இடங்களில் இது உள்ளது.

BASILICA OF BOM JESUS: 

கோவாவில் கடற்கரை எந்த அளவுக்கு நம்மால் காண முடியுமோ அந்த அளவுக்கு சர்ச் களை காண முடியும். BASILICA OF BOM JESUS கோவாவின் முக்கிய அங்கம் என்று கூறலாம். கோவாவின் வரலாற்றை பரை சாற்றும் ஒன்றாக இது உள்ளது. இதனுடைய கட்டுமான அமைப்பு மற்றும் உள்ளே உள்ள கலை ஒவியங்கள் இதனை முக்கிய இடமாக மாற்றி உள்ளது.

CASINO CARNIVAL: top 10 places to visit in goa
கோவாவின் முக்கிய இடமாக கேசினோ உள்ளது. கேசினோ செல்ல அங்கு வயது தடை அல்ல. மேலும் இது 24 மணி நேரம் செயல்பட கூடிய கேசினோவாக உள்ளது. நீங்கள் உள்ளே சென்று விளையாட வேண்டிய அவசியமில்லை. அங்கு நடக்கும் பிற நிகழ்வுகளை கூட ரசித்துவிட்டு வரலாம்.

இதுபோன்ற top 10 places to visit in goa பல சுற்றுலா தளங்கள் கோவாவில் உள்ளன. அவற்றை குறித்து மேலும் அடுத்து ஒரு தொகுப்பில் காணலாம்.

Spread the love
x