Kalvaraayan hills tamil: கல்வராயன் மலை சுற்றுலா செல்ல தயாரா..! Best of அறியப்படாத மலை..!

1 min read
kalvaraayan hills tamil-vidiyarseithigal.com

kalvaraayan hills tamil

தமிழகத்தில் சுற்றுலா தலங்களுக்கு பஞ்சமே இல்லை. சில பல கிலோமீட்டர் சென்றாலே  நிச்சயம் ஒரு இடமாவது சுற்றுலா தலமாக நம் கண்ணில் பட்டுவிடும். அப்படிபட்ட ஒரு சிறந்த சுற்றுலா தலமாக தமிழகம் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட சில இடங்கள் மட்டுமே அனைவராலும் அறியபட்ட இடமாக உள்ளது. பலருக்கு ஒரு சில இடங்கள் இருப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி தெரிந்திருந்தாலும்  அந்த இடத்தை பற்றி முழுவதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படிபட்ட ஒரு இடமாக தான் கல்வராயன் மலை உள்ளது. தமிழகத்தில் உள்ல மலை பிரதேசங்களில் கல்வராயன் மலையும் ஒன்று. ஆனால் பெரும்பாலான மக்களால் அறியபடாத இடமாக தான் இது உள்ளது. ஒரு சிலருக்கு மட்டுமே இப்படி ஒரு மலை பிரதேசம் இருப்பது தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.  இம்மலையானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது.

சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள ஒரு மலைதொடர் இதுவாகும். மிகவும் குளிர்ச்சியான பகுதி என்றோ அல்லது மிகவும் வெப்பம் நிறைந்த பகுதி என்றோ இதனை கூற முடியாது இந்த மலை  பகுதியில் மிகவும் தட்ப வெப்பமான நிலை நிலவுகிறது(kalvaraayan hills tamil).

இங்கு (kalvaraayan hills tamil) அச்சமடைய வைக்கும் கொண்டை ஊசி வளைவுகளும் பல உள்ளன. இந்த மலை பச்சைமலை, ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை ஆகியவற்றுடன் காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. 1095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலையின் உயரம் 2000 முதல் 3000 அடி வரை உள்ளது. கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அதில் வடபகுதி சின்னக் கல்வராயன் என்றும்  தென்பகுதி பெரிய கல்வராயன் என்றும் குறிப்பிடுகின்றனர்.

Telegram channel link to follow https://t.me/vidiyarseithigal

இதில் சின்னக் கல்வராயன் மலைகள் சராசரியாக 2700 அடி உயரமும், பெரிய கல்வராயன்  மலைகள் சராசரியாக 4000 அடி உயரமும் கொண்டுள்ளது. கல்வராயன் மலையின் வரலாறு விஜய நகர் ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி கிருஷ்ண தேவராயரின் காலப்பகுதியை சேர்ந்தது. கிருஷ்ண தேவராயர் இந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமைகளை பழங்குடியினருக்கு வழங்கினார். ஆனால் ஏகப்பட்ட வரிகளை சுமத்தியதாக கூறப்படுகிறது.

hdfc fd interest rates:HDFC வங்கியில் FIXED டெபாசிட் Best ஆ இருக்குமா ? பாருங்க..!

கல்வராயன் மலைகளில் (kalvaraayan hills tamil) ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளது. இங்கு நீர்வீழ்ச்சிகள், நீரோடைகள், ஆறுகள் மற்றும் அருமையான ஜங்கிள் நடை போக இடங்கள் போன்றவை அமைந்துள்ளன. இந்த இடம் மலையேற்றம் செய்பவர்களுக்கு சொர்க்கமாக உள்ளது.  அதுமட்டுமல்லாமல் மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளது. இங்கு உள்ள நீர்வீழ்ச்சிகளை காண்பதும் குளிப்பதும் சுற்றுலா பயணிகளுக்கு ஆனந்தமாக உள்ளது. கல்வராயன் மலை செல்பவர்கள் கோமுகி அணையைப் பார்க்காமல் திரும்பமாட்டார்கள். ஏன்னென்றால் அங்கு குழந்தைகள் பூங்காவும், ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, படகு குழாம் உருவாகியுள்ளது. காட்டுப் பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைத்  பார்க்கும் அரிய வாய்ப்பும் கிட்டுகிறது.

கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின்  வசதிக்கு ஏற்ப வனத்துறையினர் விடுதிகள் அமைத்திருக்கின்றனர். இங்கு வனத்துறையினரிடம் முன் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் காலையில் சென்று, மாலையில் திரும்பிவிடலாம். கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன.

இந்த மலையில் (kalvaraayan hills tamil) பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன மேலும் மலையில் மேலே செல்ல செல்ல நிறைய ஊர்கள் வழியில் உள்ளன. இந்த மலையில் சுற்றி பார்க்கும் இடங்களாக பெரியார் நீர்வீழ்ச்சி, மாங்கொம்பு நீர்வீழ்ச்சி,மேகம் அருவி,வெள்ளிமலை அருவி ஆகியவை உள்ளன. இம்மலையில் ஆண்டுதோறும் அரசு சார்பில் ஜீன் மாதங்களில் கோடை விழா நடத்துபட்டு வருகிறது.

மிகவும் பிரபலமடையாத இந்த மலை தேசம் கூட்டம் குறைவாக காணப்படும் ஒன்றாக உள்ளது. யாருமில்லாமல் குறைவான மக்கள் கூட்டம் இடையே பொழுதை கழிக்க விரும்பும் நபர்கள் இந்த மலை தேசத்திற்கு சென்று அங்கு பொழுதை கழிக்கலாம். அரசாங்கம் சார்பில் பல தங்கும் விடுதிகள் உள்ளன. உடனே சென்று ரசிச்சிட்டு வாங்க. எங்கு சென்றாலும் கோவிட் வழிமுறைகள் கண்டிபாக கடைப்பிடித்து செல்லுங்கள்.

Spread the love
x