healthy lifestyle tips:மது அருந்திய பின் இதலாம் மறந்து கூட சாப்பிடாதிங்க..!!
1 min readhealthy lifestyle tips
மாறி வரும் உலகில் மது பழக்கம் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. அனைத்து விதமான நிகழ்ச்சிகள், சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகள் என பல இடங்களில் மது கொண்டாட்டம் இருந்து கொண்டு தான் உள்ளது. இவற்றையெல்லாம் கடந்து தற்போது வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து வார இறுதி நாட்களை கொண்டாடுவது இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது (healthy eating tips).
வாரம் முழுவதும் வேலை பளு அதிகம் உள்ளதால் இறுதி நாட்களில் இதுபோன்று கொண்டாடுவதை இன்றைய இளைஞர்கள் மிகவும் விரும்புகின்றனர். மது பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்றாலும் சிலர் அதனை மாற்றிக் கொள்ளும் மன நிலையில் இல்லாத ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. முடிந்த அளவு மதுவில் இருந்து ஒதுங்கி இருப்பது தான் அனைவருக்குமே நல்ல வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள துணையாக இருக்கும்.
மது அருந்துபவர்கள், மதுவுடன் சேர்ந்து துணைக்கு சில உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். அப்படி எடுத்துக் கொள்ளப்படும் சில உணவுகள் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன(healthy eating tips). குறிப்பாக, நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. அதனால் மது அருந்தும்போது என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
மதுவும் உணவும்: (healthy lifestyle tips)
மது அருந்துவதால் இயற்கையாகவே நமது உடலில் அதிகமான அமிலத்தன்மை ஏற்படுகின்றது. எனவே மது அருந்திய பின் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மது அருந்துவதே உடலுக்கு தீங்கான ஒன்று தான்(healthy eating tips). அந்த சமயத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு நமது உடலுக்கு கூடுதல் தீங்கு விளைவித்து விட கூடாது. மது அருந்துவிட்டு தவறான உணவுகளை எடுத்து கொண்டால் வயிற்றிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வயிறு என்பது மிகவும் சென்சிட்டிவான பகுதியாகும். நாம் உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் எடுத்துச் செல்வதில் வயிறு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மது அருந்திய பிறகு நாம் உண்ணும் உணவுகள் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்(healthy eating tips). குறிப்பாக, இரவு நேரங்களில் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இன்னும் கூடுதலாக உணவைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவது நல்லது.
பர்கர்: (healthy lifestyle tips)
பர்கர் பொதுவாகவே அதிக அளவு கேலரி கொண்ட உணவகும். பர்கர் பசியை கட்டுபடுத்தும் ஒரு உணவாக கருதபடுகிறது. இதன் காரணமாகவே மருந்து அருந்துவதற்கு முன் பர்கர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதைபோல தான் மது அருந்திய பிறகு பர்கர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை மது அருந்திய பின் பர்கர் சாப்பிட்டால் என்ன ஆகும் என யோசிக்கீறீர்களா? அப்படி சாப்பிடும்போது வயிற்று வலி மற்றும் பெருங்குடல் சார்ந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், பர்க்கரில் இருக்கக்கூடிய அதிக புரோட்டீன் ஊட்டச்சத்து ஆனது உடலில் சரிவர பகிர்ந்து கொடுப்பதில் தடங்கல்கள் ஏற்படலாம்.
பன்றி இறைச்சி , முட்டை மற்றும் சீஸ்: (healthy lifestyle tips)
மது அருந்துபவர்கள் பெரும்பாலும் எடுத்துக் கொள்ளும் உணவு அசைவ உணவுகள் தான். அசைவ மற்றும் முட்டை போன்ற உணவுகள் மது அருந்துபவர்களால் பெரும்பாலும் எடுத்து கொள்ளபடுகிறது. ஆனால் இவை போன்ற உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக உடலில் வாயுத்தொல்லை, ஆசிட் ரிப்ளக்ஸ் பிரச்சனை இருக்கிறவர்கள் இவற்றைக் கட்டாயம் தவிர்ப்பது நல்லது(healthy eating tips). ஏனெனில் முட்டையில் இருக்கக்கூடிய அதிகப்படியான புரதத்தன்மை மது குடித்த பிறகு வயிற்றில் சேர்வது நல்லதல்ல. அவை உங்கள் வயிற்றினைத் தொந்தரவுக்கு உட்படுத்தும்.
பால் பொருட்கள்:(healthy lifestyle tips)
பால் ஒரு நல்ல சத்துள்ள பானம் தானே அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும். பால் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன கேடு வரப்போகிறது என யோசிக்கீறீர்களா? பாலினை தனியாக எடுத்துக் கொள்ளும் போது உடலுக்கு எந்த வித தீங்கும் வரபோவதில்லை. ஆனால் மது அருந்திய பின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டால் செரிமான அமைப்பில் பிரச்சினை ஏற்படுத்தும். வயிற்றில் ஆசிட் அதிகமாக உற்பத்தி ஆகுவதற்கு மது மற்றும் பால் பொருட்களை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்வது முக்கியக் காரணம். மது குடித்த பிறகு மிக எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
benefits of drinking turmeric milk: மஞ்சள் பாலில் உள்ள super நன்மைகள்..!
சாக்லேட்:(healthy lifestyle tips)
சாக்லேட்டில் இருக்கக்கூடிய கொக்கோ மற்றும் காபின் ஆகியவை உடலில் வாயுத் தொல்லையை அதிகரிக்கக் காரணமாக அமைகிறது. முக்கியமாக, மது குடித்த பிறகு உடலில் ஏற்கனவே ஆசிட் உற்பத்தி அதிகரித்திருக்க கூடிய சூழலில் இவற்றினை எடுத்துக் கொள்வது கூடுதலாக வயிற்றினை பாதிப்புக்கு உட்படுத்தும்.
healthy lifestyle tips: TELEGRAM FOLLOW LINK : https://t.me/vidiyarseithigal
உப்பு பிஸ்கட்:(healthy lifestyle tips)
மது அருந்தியவர்கள் விரும்பி உண்ணக்கூடிய உணவுகளில் உப்பு அதிகமுள்ள பொருட்களும் உண்டு. உப்பு இல்லா பொருட்களை உணவாக எடுத்து கொள்ள முடியாது. ஆனால் அதனை காட்டிலும் உப்பு அதிகம் உள்ள பொருட்களையும் உணவாக எடுத்து கொள்ள கூடாது. உதாரணமாக உப்பு பிஸ்கட் போன்ற உணவுகளில் உப்பு அதிகமாக இருக்கும் .அவற்ரை எடுத்துகொண்டால் அது உடலினை பாதிப்பதுடன் மறு நாள் வரையும் கூட சோர்வு, தூக்கமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வழிவகுத்திருக்கின்றன.
வறுக்கபட்ட உணவுகள் :(healthy lifestyle tips)
மது அருந்தியவுடன் முதலில் தேடுவது நன்றாக எண்ணெயில் பொரிக்கபட்ட உணவுகளை தான். எண்ணெயில் வறுக்கப்பட்ட கூடிய உணவுகள் மது குடித்த பிறகு எடுத்துக்கொள்வது ஆபத்தானதாக முடியும். மேலும், அவை உடலில் நீர்ச்சத்து இல்லாமல் ஆக்கிவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே மது குடித்த மறுநாளும் கூட நீங்கள் தொந்தரவுக்கு உள்ளாவதற்கு இவை வாய்ப்பு அளிக்கின்றன.
மேலே குறிப்பிட்ட உணவுகளை நிச்சயமாக மது அருந்திய பின் எடுத்து கொள்வது கூடாது. அவை உடலில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
குறிப்பு: மது அருந்துவது உடலுக்கு கேடு விளைவிக்கும் ஒன்று. முடிந்த மது பழக்கத்தை தவிர்ப்பது நல்லது