benefits of drinking turmeric milk: மஞ்சள் பாலில் உள்ள super நன்மைகள்..!

1 min read
benefits of drinking turmeric milk-vidiyarseithigal.com

benefits of drinking turmeric milk

பால் என்பது அனைவராலும் எடுத்து கொள்ள கூடிய சிறந்த சத்துள்ள ஒரு பொருளாகும். அன்றாடம் பால் குடிப்பதால் உடலில் கால்சியம் சத்து அதிகரித்து உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பாலை பலர் காய்ச்சி அப்படியே பருகுவர் சிலர் அதில் காபி அல்லது டீ பவுடர் போட்டு குடிப்பர். இதனை விட சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு பானமாக பாலை மாற்ற முடியும். எப்படி என யோசிக்கீறீர்களா?

ஆம் சிறிதளவு மஞ்சள் பாலில் (benefits of drinking turmeric milk) சேர்த்து கொண்டால் மிக சிறந்த மருத்துவ பானமாக மாறிவிடுகிறது. குறிப்பாக சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் இந்த மஞ்சள் பாலினை எடுத்து கொண்டால் விரைவாக இருமல், சளி ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறலாம். பாலில் பொதுவாகவே அதிக ஆற்றல் கொண்ட நோயெதிர்ப்பு சக்தி உள்ளது. ஆனால் அவற்றின் கூட பாலில் மஞ்சள் சேர்ப்பதால் கூடுதலாக பலன் அளிக்கிறது.

மஞ்சள் பாலின் நன்மைகள்: (benefits of drinking turmeric milk)

மஞ்சள் கலந்த பாலில் பல நன்மைகள் உள்ளன. மஞ்சள் கலந்த பால் உடலில் உள்ள செல்களை புத்துணர்வு பெற உதவும் என்றே கூறலாம். மஞ்சள் கலந்த பாலில் ஒரு வகையான ஹீலிங்க் குணம் என்று சொல்லலாம். உடலில் உள்ள பூஞ்சை, பேக்டரீயல் மற்றூம் அழற்சி போன்ற கிருமிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட கூடியது. மேலும் உடலில் உள்ள நோயெதிர்ப்பு செல்களை நன்றாக பலபடுத்துவது மஞ்சள் கலந்த பாலின் கூடுதலான சிறப்பாகும் (benefits of turmeric milk).

ஒருவர் இரவில் மஞ்சள் கலந்த பாலை குடிப்பது இரவில் நல்ல தூக்கத்திற்கு வழிவகை செய்யும். மேலும் வயிற்றில் உண்டாகும் எரிச்சல், உபசம், மற்றும் செரிமான பிரச்சனைகள் தீர்க்க சிறந்த பானம் மஞ்சள் பால் ஆகும். மஞ்சள் பால் குடிப்பதால் ஒற்றை தலைவலி நன்றாக குறைந்து புத்துணர்ச்சி ஏற்படும் என கூறலாம்.

மஞ்சள் பால் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள் – அரை டிஸ்பூன்

நெய்- ஒரு டிஸ்பூன்

பொடித்த மிளகு- அரை டிஸ்பூன்

பட்டை மற்றும் ஜாதிபத்ரி தூள் – சிறிதளவு

முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி  சூடாக்க வேண்டும். அதில் நெய் சூடான உடன் பின்பு அதிலில் அனைத்து மசாலா பொருட்களையும் சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்றாக கலக்க வேண்டும். பின் அதில் சூடான பாலை அதில் சேர்த்து  ஒன்று அல்லது இரண்டு நன்றாக கொதிக்க வேண்டும். இறுதியாக இனிப்பிற்காக சிறிது சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும்.

lic policy details in tamil:சிறந்த எல்.ஐ.சி பாலிசி திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

எப்போது மஞ்சள் பாலை குடிக்க வேண்டும்? (benefits of turmeric milk)

தினமும் மாலை அல்லது இரவு நேரத்தில் தினசரி குடித்து வந்தால்9benefits of drinking turmeric milk), நன்றாகத் தூங்கி, காலையில் புத்துணர்வோடு எழுவதற்கு உதவியாக இருக்கும். இரவில் குடித்தால், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் மற்றும் தூங்க செல்வதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னரும் குடிக்கவும்(benefits of turmeric milk).

மஞ்சளில் இருக்கும் மைக்ரோ என்சைம்கள், நெய்யுடன் சேர்ப்பதால் ஆக்டிவேட் செய்யபடுகின்றன. குர்குமின் என்ற காம்பவுண்ட் உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கம், அழற்சி ஆகியவற்றைத் தடுக்கிறது. மிளகில் உள்ள பிபெரின் என்ற காம்பவுண்டுடன் சேரும் போது, குர்குமின் எளிதாக உடலில் உறிஞ்சப்படுகிறது(golden milk benefits). அதனால் தான் இந்த உட்பொருட்களின் கலவை தான் மஞ்சள் பாலின் மருத்துவத் தன்மையை அதிகரிக்கிறது.

யாரெல்லாம் இந்த மஞ்சள் பாலை குடிக்கக் கூடாது:(golden milk benefits)

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் எனப்படும் லாக்டோஸ் என்ற ஒரு காம்பவுண்டால், பால் உணவுப் பொருட்களை சாப்பிட்டவுடன் பாதிப்பு ஏற்படும் பிரச்சனை இருந்தால், இந்த மசாலா பாலைத் தவிர்க்க வேண்டும். அதே போல உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தால், மற்றும் ரத்த அடர்த்தியை குறைக்கும் மருத்துகள் எடுத்துக்கொண்டிருந்தால் இதைத் தவிர்க்க வேண்டும்.

Spread the love
x