health tips tamil:ஆப்பிள் தோலை இப்படி கூட பயன்படுத்தலாமா..!

1 min read
health tips tamil-vidiyarseithigal.com

health tips tamil

ஆப்பிள் பலரால் விரும்பி சாப்பிட கூடிய ஒரு பழமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. நிறைய சத்துக்கள் நிறைந்த ஒன்றாக ஆப்பிள் பழம் இருந்து வருகிறது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை பார்க்க கூடிய தேவை இருக்காது என பொதுவாக கூறுவர். அந்த அளவுக்கு சத்துக்கள் நிறைந்த ஒன்றான ஆப்பிள் பழம் மட்டும் அல்லாமல் அதன் தோலில் கூட பல பயன்கள் உள்ளன.

ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். மேலும் பசியின்மையை போக்கும் திறன் கொண்டதாக ஆப்பிள் உள்ளது. சிலர் தோலை சீவி பழத்தை மட்டும் உண்ணும் பழக்கம் கொண்டவராக இருப்பர். அப்படி செய்ய கூடாது அதில் எந்த பயனும் இல்லை. ஒரு வேலை நீங்கள் தோலை நீக்கிவிட்டால் அதனை எப்படி பயன்படுத்தலாம் என தற்போது காணலாம்.

ஆப்பிள் தோள் தேனீர்:health tips tamil

தினமும் ஒரு கப் சூடான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தேநீர் சாப்பிடுவதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? உங்கள் ஆப்பிள் தோல்களை ஒரு சுவையான தேநீராக மாற்றலாம். இதற்கு ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி , ஒரு சிறிய இலவங்கப்பட்டை குச்சியை போடவும். இதனுடன் ஆப்பிள் தோல்களை சேர்த்து சில நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் சுவைக்கு ஏற்ப தேநீரில் தேன் சேர்க்கவும். இலவங்கப்பட்டை மற்றும் ஆப்பிள் இரண்டுமே அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன, எனவே நீங்கள் ஒரு அழகான இளஞ்சிவப்பு நிற தேநீரை அருந்தாலும்.

ஆப்பிள் சைடர் வினீகர்:health tips tamil

ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகரை நீங்களே வீட்டில் தயாரிக்கலாம். ஒரு பாட்டிலில் சில ஆப்பிள் தோல்கள், சிறிது சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்க்கவும். அதில் சர்க்கரை கரைக்கும் வரை குலுக்கவும். பாட்டிலை ஒரு மூடி அல்லது துணியால் மூடி விட்டு சுமார் 3-4 வாரங்கள் வைத்திருக்கவும். பின்னர் எடுத்து பார்த்தால் ஆப்பிள் சீடர் வினிகர் தயார்.

ஆப்பிள் சிப்ஸ் :health tips tamil

நாம் அனைவரும் எளிமையான மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகளை விரும்புகிறோம். அதற்கு ஆப்பிள் சிப்ஸ் நல்ல தேர்வாக இருக்கும். ஒரு கடாயில், சிறிது வெண்ணெய் மற்றும் இலவங்கப்பட்டை சர்க்கரை சேர்க்கவும். நன்றாகக் கிளறி, பின்னர் இதனுடன் ஆப்பிள் தோல்களில் சேர்க்கவும். இதனை ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு எடுக்கவும். ஆப்பிள் தோல்களை வேகும் வரை வறுக்கவும். இந்த ஆரோக்கியமான சிற்றுண்டியை நீங்கள் தினமும் சாப்பிடலாம்.

savings for kids tamil: பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்கள்…!

ஆப்பிள் ஜாம் :health tips tamil

நீங்கள் வீட்டிலேயே ஆப்பிள் ஜாம் தயார் செய்யலாம், இது மிகவும் எளிதானது. இதற்கு ஒரு கடாயில், ஆப்பிள் தோல்கள் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். பழ தோல் மென்மையாகும் வரை வேகவைக்கவும். சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் எலுமிச்சை சாறு 1/2 கப் பிழிந்து, நன்கு கலக்கவும். இந்த கலவையை காற்று புகாத பாட்டிலில் எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். சில மணி நேரங்களுக்கு பின்னர் எடுத்து பார்த்தால் நீங்கள் ஜெல்லி போன்ற நிலைத்தன்மையைப் பெறுவீர்கள். நீங்கள் அதை ஒரு சிற்றுண்டியாக அல்லது பிரட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.

பேக்கரி பொருட்களுக்கு சுவைக்கு சேர்க்கவும் :health tips tamil

நீங்கள் வீட்டில் பேக்கரி பொருட்களை தயாரிக்க விரும்பினால் இந்த மீதமுள்ள ஆப்பிள் தோல்கள் வாஃபிள்ஸ், மஃபின், கேக் அல்லது டார்ட்ஸ் போன்ற பொருட்களுடன் சேர்த்து சாப்பிடலாம். நீங்கள் சில இலவங்கப்பட்டை சேர்த்து மேலும் ஒரு சிறந்த சுவையை பெறலாம்.

Spread the love
x