post office savings scheme in tamil:வங்கிகையை காட்டிலும் அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு..!சூப்பரான திட்டங்கள்..!

1 min read
how to open a post office savings account Tamil-vidiyarseithigal.com

post office savings scheme in tamil

பணத்தினை சேமிக்க நினைப்பவர்களின் முதல் தேர்வு வங்கிகள் தான். ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகதன்மை நிறைந்த ஒன்றாக பலரால வங்கிகள் பார்க்கபடுகிறது. இப்படிபட்ட வங்கிகளில் நாம் சேமிக்கும் தொகைக்கு குறிப்பிட்ட அளவிலான வட்டி என்ற ஒன்று வழங்கபட்டு வருகிறது. சில வங்கிகளில் கூடுதலாகவும், சில வங்கிகளில் குறைவாகவும் கிடைக்கின்றன.

கால மாற்றம் அடைய அடைய வங்கிகள் போன்று சிறிய சிறிய நிதி நிறுவனங்கள் உருவாகின. தற்போது தகவல் பரிமாற்றம் மட்டுமே செய்து கொண்டு இருந்த மத்திய அரசு நிறுவனமான  அஞ்சலகமும் மக்களுக்கு நிதி சேமிப்பு நிறுவனமாக மாறியுள்ளது(post office savings). ஏனைய வங்கிகளை காட்டிலும் அதிக லாபம் அளிக்க கூடிய ஒன்றாகவும் அஞ்சலகம் மாறியுள்ளது.

நிறைய முதலீடு திட்டங்கள் இருந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் அவற்றை தாண்டி அஞ்சலக திட்டங்கள் சிறப்பான ஒன்றாகவும், தனித்துவமான ஒன்றாகவும் மாறியுள்ளன. பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை காட்டிலும் அதிக வட்டி, பாதுக்காப்பு மற்றும் சந்தை அபாயம் இல்லாத ஒன்றாக இவை உள்ளன. அஞ்சலகத்தின் சிறந்த திட்டங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.(post office savings)

அஞ்சலக டைம் டெபாசிட் திட்டம்: 

குறிப்பிட்ட கால அளவிலான டெபாசிட் திட்டங்கள் மக்களால அதிக அளவில் வரவேற்கபடும் திட்டங்கள் ஆகும். குறிப்பிட்ட காலத்தில் நமது பணம் நல்ல வட்டி விகிதமுடன் முதிர்வு தொகை நமக்கு கிடைக்கும்.  அஞ்சலகத்தில் உள்ள டைம் டெபாசிட் திட்டங்களில் 1,2,3,5 வருடங்கள் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். இதில் 5 வருட டெபாசிட் திட்டத்தில் 6.7% வட்டி விகிதம் (post office interest rate 2021) வழங்கபடுகிறது. இது 10.75 வருடங்களில் இரட்டிப்பாகும். மற்ற திட்டங்களில் 5.5% வட்டி விகிதம் ஆகும். அவை 13 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

net banking in tamil: ஆன்லைனில் பணத்தை மாற்றி அனுப்பீட்டிங்களா..! என்ன நடக்கும் தெரியுமா?

அஞ்சலக சேமிப்பு கணக்கு:(post office savings scheme in tamil)

வங்கிகளில் எப்படி சேமிப்பு கணக்கு உள்ளதோ அதுபோல தான் அஞ்சல சேமிப்பு கணக்கு ஆகும். எப்படி ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கினால் நமக்கு பல சலுகைகள் கிடைக்கிறதோ அதுபோல தான் அஞ்சலகங்களில் நாம் பெற முடியும். இந்த சேமிப்பு கணக்கு மூலம் சேமிக்கபடும் தொகைக்கு 4% வட்டி(post office interest rate 2021) வழங்கப்படுகிறது. மேலும் இது செய்யபடும் முதலீட்டு தொகை 18 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகும்.

post office savings scheme in tamil-vidiyarseithigal.com

post office savings scheme in tamil

அஞ்சலக தொடர் வைப்பு நிதி:(post office savings scheme in tamil)

நம்மால் முடிந்த சிறு தொகையை மாத மாதம் சேமிக்க ஆசைப்படுவோம் . ஆனால் எப்படி சேமிப்பது , அதற்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கபடுகிறது. நமக்கு லாபம் தருமா என பல கேள்விகள் நம்மிடம் இருக்கும். அதற்கு சரியான பதில் இந்த தொடர் வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் சேமிக்கபடும் பணத்திற்கு 5.8% வட்டி (post office interest rate 2021) வழங்கபடுகிறது. மற்ற வங்கிகளில் உள்ள வட்டி விகிதம் ஒப்பிட்டு பார்த்தால் இந்த வட்டி விகிதம் அதிகமானதாகும். இதில் முதலீடு செய்வதால் 12.41 ஆண்டுகளில் உங்கள் முதலீட்டு தொகை இரட்டிப்பாகும்.

அஞ்சலக மாதந்திர வருமான திட்டம்:(post office savings scheme in tamil)

எப்போதுமே நாம் செய்யும் முதலீட்டில் இருந்து நமக்கு ஒரு மாதந்திர வருமானம் வர வேண்டும் என்பது தான் பலரின் எதிர்பார்ப்பு. அப்படி திட்டங்களும் இருக்கின்றன. சில திட்டங்களில் மாத தொகை குறைவாக வரலாம். சில திட்டங்களில் அதிகமாக வரலாம். மாத தொகை அதிகமாக வரகூடிய சில திட்டம் அஞ்சலகத்தில் உள்ளன. அஞ்சலகத்தின் மாதாந்திர வருமான திட்டத்தில், தற்போது வட்டி விகிதம், 6.6% post office interest rate 2021)(வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் உங்கள் தொகையானது 10.91 ஆண்டுகளில் இருமடங்காக மாறும். இந்த திட்டத்தில் மாத மாதம் எனக்கு ஒரு வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள் முதலீடு செய்து கொள்ளலாம். குறிப்பாக மூத்த குடி மகக்ளுக்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டம்.

 

Spread the love
x