best tea for diabetics:நீரிழிவு நோயாளிகள் குடிக்க வேண்டிய மூலிகை டீ..! இவ்வளவு இருக்கா..!

1 min read
best tea for diabetics-vidiyarseithigal.com

best tea for diabetics

தேநீர் விரும்பாத நபர்களை சுலபமாக விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு மிகவும் குறைவான நபர்களே தேநீர் விரும்பாதவர்களாக இருக்கின்றனர். அதுவும் இந்தியர்கள் மிக பெரிய தேநீர் விரும்பிகள் ஆவர். இந்தியாவில் தெருவுக்கு ஒரு தேநீர் கடையை நிச்சயம் நாம் பார்த்துவிடலாம்.

இப்படி இருக்கும் நிலையில் மூலிகை தேநீர் கொண்டு உடல் உபாதகளை சரி செய்ய முடியும் என்று கூறினால் என்ன செய்வீர்கள். ஆச்சரியமாக உள்ளதா, ஆம் நாம் பருகும் தேநீரை கூட மூலிகையாக மாற்ற முடியும். அதனை கொண்டு நீரிழிவு போன்ற நோய்களுக்கு உதவுகின்றன.

ஜின்செங்க் தேநீர் :

பெயரே வித்தியாசமாக உள்ளதா. ஒரு சிலர் கேள்விபட்டிருப்பீர்கள். வெகு சிலருக்கு புதிதாக இருக்கலாம். ஜின்ஸெங் என்பது ஒரு வேர் தாவரமாகும். இது அதிக மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளது. நமது உடலில் நோயெதிர்ப்பு செயல்பாடு, மத்திய நரம்பு மண்டலம், மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடுகளை மேம்படுத்துதல் போன்ற விஷயங்களுக்கு இந்த ஜின்ஸெங் வேர் பயன்படுகிறது. ஜின்ஸெங் தேநீரும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. நீரிழிவு நோய்க்கு ஒரு மாற்று மருந்தாக இந்த ஜின்ஸெங் தேநீர் உள்ளது.

best tea for diabetics-vidiyarseithigal.com

best tea for diabetics

கற்றாழை தேநீர்:

உடலுக்கு சிறந்த சில பொருட்களில் கற்றாழை மிக சிறந்த ஒன்றாகும். அந்த வகையில் கற்றாழை தேநீர் கூட மிக சிறந்த ஆரோக்கியமான ஒன்றாக உள்ளது. உடல் சார்ந்த பல தயாரிப்புகளில் முக்கிய பொருளாகக் கற்றாழை இருப்பதை பார்க்கலாம். இது ஒரு பழங்கால மூலிகை ஆகும். பச்சையாக அல்லது வேக வைத்து என எப்படி பயன்படுத்தினாலும் இது உடலுக்கு நன்மை அளிக்கிறது. கற்றாழையை எடுத்து அதில் உள்ள ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து அதை நீரில் வேகவைத்துக் குடிப்பதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்.

செம்பருத்தி தேநீர் :

செம்பருத்தி தேநீரை மிக எளிதாக செய்ய முடியும். இதற்கு உலர்ந்த செம்பருத்தி பூவின் இதழ்களைத் தண்ணீரில் கொதிக்க வைப்பதன் மூலம் நம்மால் தேநீரை செய்ய முடியும். இதில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாக உள்ளன மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க இவை உதவுகின்றன. மேலும் டைப் 2 வகை நீரிழிவை கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. மேலும் லேசான உயர் ரத்த அழுத்தம் உள்ள டைப் 2 வகை நீரிழிவு கொண்ட நோயாளிகள் செம்பருத்தி தேநீரை பயன்படுத்தும்போது அவர்களுக்கு இரத்த அழுத்தத்திலும் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

health tips tamil:மாத்திரைகளை இரண்டாக உடைக்கலாமா? படிச்சு பாருங்க..!

இலவங்கபட்ட தேநீர் : (which tea is best for diabetes)

லவங்கம் எப்போதும் நமக்கு சிறந்த சுவை தரும் ஒரு பொருளாக உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான நேரங்களில் அசைவ உணவுகளில் சேர்க்கபடும் ஒன்றாக உள்ளது. அதனை காட்டிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் ஒரு சிறந்த பொருளாக உள்ளது. இதனை தண்ணீரில் கொதிக்க செய்து தேநீர் செய்து அருந்துவது மூலம் நீரிழிவு நோயை கட்டுபடுத்த முடியும்.

எலுமிச்சை தேநீர்:

எலுமிச்சை தைலம் என்பது எலுமிச்சை போன்ற மணமுடைய ஒரு மூலிகையை குறிக்கும் சொல் ஆகும். ஒரு அறிக்கையின்படி எலுமிச்சை தைலத்தின் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடானது இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது என கூறப்படுகிறது. எலுமிச்சை தைலம் தேநீரை வழக்கமாக உட்கொள்ளும்போது அது உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராடுகிறது, மேலும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை இது குறைக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

Spread the love
x