water falls in India To visit must in tamil..!Part 1

1 min read
water falls-vidiyarseithigal.com

water falls

நீர்வீழ்ச்சியில் குளிப்பது என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைருக்குமே ஒரு புதுவித உற்சாகம் தோன்றிவிடும். குறிப்பாக பெரியவர்கள் கூட சிறியவர்களுக்கு இணையாக மாறி நீர்வீழ்ச்சியில் குளிப்பதை ரசிக்க தொடங்கிவிடுவர். அந்த அளவுக்கு water falls என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது.

இந்தியாவில் பல விதமான நீர்வீழ்ச்சிகள் பல மாநிலங்களில் உள்ளன. பலர் இந்த இடங்களுக்கு சென்று இருப்பீர்கள். ஆனால் சில இடங்கள் இருப்பது இன்னும் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் . அதுபோல மிகவும் பிரபலமான மற்றும் அறியப்படாத நீர்வீழ்ச்சிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

water falls-vidiyarseithigal.com

water falls

Shivanasamudra Falls, Karnataka:

இந்த சிவசமுத்திரா நீர்வீழ்ச்சி கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்திய மாவட்டத்தில் உள்ளது.  இந்த நீர்வீழ்ச்சியானது இரண்டாக பிரிகிறது கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாக பிரிந்து செல்கிறது. இந்த நீர்வீழ்ச்சியால அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இங்கு காணப்படுகின்றது. இது இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சியாக உள்ளது.

இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டுமானால் பல வழிகளில் செல்ல முடியும் . அருகாமையில் விமான நிலையம் பெங்களூர் ஆகும். அருகாமையில் ரயில் நிலையம் மத்தூர். இவை மட்டும் இன்றி மைசூரில் இருந்து அதிகமான பேருந்துகள் இங்கு செல்கின்றன.  இந்த நீர்வீழ்ச்சியை கான சிறந்த மாதம் ஜூன் முதல் அக்டோபர் ஆகும் .

Dudhsagar water falls, Goa:

அனைவராலும் அறியபட்ட ஒரு நீர்வீழ்ச்சியாக தூத்சாகர் உள்ளது.  பெரும்பாலான சினிமா படப்பிடிப்பின் போது இந்த நீர்வீச்சியை பார்த்திருப்பீர்கள். இந்த நீர்வீழ்ச்சியானது மந்தோவி ஆற்றில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தூத்சாகர் நீர்வீழ்ச்சி 1017 அடி உயரம் கொண்டதாக உள்ளது. இயற்கை விரும்பிகளுக்கு சிறந்த இடமாக இந்த தூத்சாகர் நீர்வீழ்ச்சி உள்ளது.

இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு சிறந்த வழியாக இருப்பது  சாலை தான். சாலை வழியாக செல்வது பனாஜியில் இருந்து 60 கிமீ ஆகும் , மடகானில் இருந்து 46 கிமீ மற்றும் பெல்காம் வடக்கில் இருந்து 60 கிமீ ஆகும் . இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல சிறந்த மாதம் நவம்பர் முதல் பிப்ரவரி அல்லது ஜூன் முதல் செப்டம்பர் வரை ஆகும் .

இதுவரை நீங்கள் செல்லாமல் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடமாக இது இருக்கும் .

Athirampally falls, Kerala:

நிச்சயம் நீங்கள் அறிந்த பெயராக தான் இது இருக்கும் . இந்தியாவில் உள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகளில் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். கேரளாவில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியாக இது உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்தியாவின் நையகரா என அழைக்கபடும் ஒரு முக்கிய நீர்வீழ்ச்சியாக இது உள்ளது.  இந்த நீர்வீழ்ச்சியை பார்த்த உடன் அதன் மீது நமக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல கூடிய வழிகள் என்ன என்று பார்த்தால் அருகாமையில் உள்ள விமான நிலையம் கொச்சி ஆகும். சாலக்குடி ரயில் நிலையத்தில் இருந்து 30கிமீ தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றி பார்க்க சிறந்த மாதம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் ஆகும்.

Soochippaara Falls. Kerala:

கடவுளின் தேசம் எனப்படும் கேரளாவில் இயற்கைக்கு குறைவே இல்லை. எங்கு பார்த்தாலும் கண்களை கவரும் வகையில் பச்சை நிறம் போர்த்தியது போல இருக்கும். அதைபோல கேரளாவில் நீர்வீழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. குறைந்த தூரத்தில் பல நீர்வீழ்ச்சிகளை நம்மால் காண முடியும்.

அதுபோன்று கண்டிப்பாக நாம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சி தான் சுச்சிப்பாரா நீர்வீழ்ச்சி. இதனை sentinel rock falls எனவும் அழைப்பர். வெள்ளரிமலை என்ற இடத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீங்கள் Trekking செல்வதை விரும்புவர் என்றால் உங்களுக்கான சிறந்த இடம் இது ஆகும்.

இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல சிறந்த வழி Elevayal ரயில் நிலையத்தில் இருந்து 2 கிமீ சாலை வழியாக பயணித்து சென்றடையலாம் . குறிப்பாக இங்கு செல்வதற்கு உரிய காலம் ஜூன் முதல் செப்டம்பர் ஆகும்.

இந்த தொகுப்பில் நாம் பார்த்தது குறிப்பிட நீர்வீழ்ச்சிகளை மட்டுமே மேலும் இதுபோன்ற சில நீர்வீழ்ச்சிகளை பற்றி அறிய நம் பக்கத்தை தொடருங்கள்

Spread the love
x