new job ideas..! புது வேலைக்கு போறீங்கனா நிச்சயம் இதலாம் செய்யதீங்க..!

1 min read
new job ideas-vidiyarseithigal.com

new job ideas

நாம் எப்போதுமே முதல் முறை ஒரு இடத்திற்கு செல்வோம் என்றால் பல சிந்தனைகளுடன் அல்லது பயத்துடன் தான் இருப்போம். அதிலும் குறிப்பாக முதல் முறை பள்ளிக்கு, கல்லூரிக்கு , வேலைக்கு செல்ல போகிறோம் என்றால் நிச்சயம் அது ஒருவித புதுமையான அனுபவம் தான். இருப்பினும் சிலர் அப்படி இருக்கமாட்டர்கள்.

அவர்களுக்கு அந்த இடத்திற்கு முன்னரே சென்ற மாதிரி அங்கு இருப்பவர்களிடம் பழகி வருவார்கள். முதல் முறை பள்ளி, கல்லூரி செல்வதை போல அல்ல வேலைக்கு செல்வது. ஒரு இடத்தில் வேலைக்கு செல்கிறோம் என்றால் நிச்சயம் நம்மை பலர் மதிப்பீடுவர். வேலைக்கு சென்றுவிட்டாலே அந்த வேலை நிரந்தரம் என்று கூறி விட முடியாது. நாம் நடந்து கொள்ளும் முறையை வைத்துதான் வேலையை நிரந்தரம் ஆக்குவார்களா அல்லது அனுப்புவார்களா என தெரியும் .

நீங்கள் புதிதாக் ஒரு இடத்தில் வேலைக்கு செல்கிறீர்கள் என்றால் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு . அவையெல்லாம் என்று ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

வார்த்தை:

வார்த்தையில் என்ன உள்ளது என்று தானே யோசிக்கிறீகள். நீங்கள் பேசும் வார்த்தையில் பல விஷயங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக புதிதாக ஒரு நிறுவனத்திற்கு வேலை சென்று உள்ளீர்கள் என்றால் அங்கு இருப்பவர்கள் அனைவரும் எப்போதுமே உங்களிடம் இருந்து எப்படிபட்ட வார்த்தைகள் வருகின்றன.

பிறரிடம் எப்படி பேசுகிறீர்கள் என்பதை எல்லாம் கவனாப்பர்கள். நீங்கள் பேசும் வார்த்தைகளை கொண்டே உங்களை குறித்த எண்ணத்தை உருவாக்குவர்கள். எனவே புதிதாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் அனைவரிடமும் கனிவாக பேச வேண்டும்.

new job ideas-vidiyarseithigal.com

new job ideas

தாமதம் :

பொதுவாக நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு பழக்கம் சொன்ன இடத்திற்கு சொன்ன நேரத்திற்கு செல்லாமல் இருப்பது. இறுதி நேரத்தில் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் பலர் தாமதமாகி செல்கிறோம். ஆனால் வேலைக்கு செல்லும் இடத்தில் அப்படி செய்தால் நிச்சயம் அது பெரிய தவறாக அமைந்துவிடும்.

குறிப்பாக முதல் நாள் வேலைக்கு செல்கிறோம் என்றால் தாமதாக மட்டும் சென்று விட கூடாது. முதல் நாள் வேலைக்கு செல்பவர்கள் காலையில் விரைவாக எழுந்து, தயாராகி, சொன்ன நேரத்தை காட்டிலும் முன் கூட்டியே செல்ல வேண்டும். அப்படி செல்வதன் மூலம் நமக்கு முதல் நாள் அன்று ஒரு வித புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் நம் நல்ல அபிப்ராயம் உருவாகும்.

பழைய வேலை:

எப்போதுமே வேலைக்கு சென்ற இடத்தில் உங்களுடைய பழைய நிறுவனம் பற்றியோ, வேலை பற்றியோ பேசாதீர்கள். குறிப்பாக நீங்கள் வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தில் கடுமையான சூழல் ஒன்று உருவாகலாம் . அப்போது உங்களுக்கு இந்த சூழலை நீங்கள் முன் கூட்டியே வேலை செய்த நிறுவனத்தில் வேறு யாரேனும் கையாண்டு இருக்கலாம்.  அதனை ஒப்பிட்டு எப்போதும் உங்கள் புதிய நிறுவனத்தில் பேசாதீர்கள்.

அதுபோல நீங்கள் வேலை செய்யும் இடத்தில் என்னுடைய பழைய வேலையில் நாம் அப்படி இருந்தேன் , இப்படி இருந்தேன் என கூறாதீர்கள். எப்போதுமே புதிதாக வேலைக்கு சென்ற நிறுவனத்தில் உங்கள் செயலால் மட்டுமே நீங்கள் யார் என்று என்பதனை அனைவருக்கும் நிருபிக்க வேண்டும். அப்படி இல்லாமல் வெறும் வார்த்தைகளால் உங்கள் பழைய வேலை பற்றி பேசினால் நிச்சயம் உங்கள் மீதான எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் .

சமூக வலைதளங்கள் :

முதல் நாள் வேலைக்கு செல்கிறீர்கள் என்றால் உங்கள் சமூக வலைத்தளத்தில் நேரம் செலவிடுவதை காட்டிலும் உங்கள் நிறுவனத்தின் பணி என்ன? எப்படி பணியினை கையாள்வது போன்ற காரியங்களில் கவனத்தை செலுத்துங்கள் .அவ்வாறு செய்யாமல் முதல் நாளிலேயே சமூக வலைத்தளங்களில் நேரம் கழித்தீர்கள் என்றால் அது நஷ்டத்தில் தான் முடியும் .

நீங்கள் முதல் நாள் எப்படி இருக்கிறீர்கள் என்று அனைவரும் உங்களை பார்த்து கொண்டே இருப்பர். எனவே முடிந்த அளவு முதல் நாள் அன்று கம்பெனியின் மீது கவனத்தை செலுத்துங்கள்.

இதுபோன்ற காரியங்களை முதல் நாள் வேலைக்கு செல்கிறீர்கள் என்றால் தவிர்க்க பாருங்கள். நிச்சயம் அனைவராலும் பாராட்டபடுவீர்கள்.

Spread the love
x