best e vehicles in tamil details.! Part 1..!
1 min readbest e vehicles in tamil details
உலகில் காற்று மாசு அடைவதை குறைக்க கண்டுபிடிக்கபட்டது தான் இ- வாகனங்கள் . காற்று மாசு மட்டுமின்றி ஒலி மாசு மற்றும் எரிபொருளுக்கு மாற்று தீர்வாக கண்டுபிடிக்கபட்டது என்று கூட கூறலாம் . இப்படிபட்ட இ- வாகனங்கள் தொடக்கத்தில் குறைவாக விற்பனையாளும் இன்றைய நிலையில் குறிப்பாக பெட்ரோல் , டீசல் விற்கும் விலையில் சிறந்த வாகனங்களாக மாறியுள்ளன.
இ-வாகனங்களால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சுற்றுசூழல் பாதுகாப்பு என்பது இந்த வகை வாகனங்களால் சாத்தியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த பதிவில் இந்த வாகனங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம் மற்றும் சிறந்த இ-வாகனங்கள் எவை என்பது குறித்தும் காணலாம் .
Cheaper to Run:
ஒரு இ- வாகனம் இயங்க பெட்ரோலை விட 40% குறைந்த அளவே நமக்கு செலவாகிறது. இதன் மூலம் நம் பணத்திற்கு சிறந்த சேமிப்பாக அமைக்கிறது. மேலும் நீங்கள் மின்சாரம் மூலம் சார்ஜினை செய்யாமல் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்தால் இன்னும் நமக்கு செலவு குறைவாகவே ஏற்படுகிறது.
Environment support :
ஒரு இ-வாகனம் இயங்குவதால் பெருமளவிலான காற்று மாசு குறைகிறது. எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையினால் ஏற்படும் பாதிப்புகள் இ-வாகன இயக்கத்தால் குறைகிறது. மேலும் நாம் சோலார் மூலம் மின்சாரத்தை இந்த வாகனத்திற்கு கொடுத்தால் நாம் மின்சாரத்திற்காக தனியாக ஒரு எனர்சி உருவாக்க வேண்டிய அவசியமில்லை.
Cheap maintenance :
பிற வாகனங்களை காட்டிலும் இந்த வாகனங்கள் குறைவான மெய்டனன்ஸ் செய்தால் போதும். அதன் மூலம் நமக்கு அன்றாட மெய்டனன்ஸ் செலவுகள் குறைகிறது.
தற்போது இந்தியாவில் சிறந்த இ- வாகனம் எவை என்பது குறித்து பார்க்கலாம்.
best e vehicles in tamil details
Ola:
ஓலா நிறுவனம் இந்தியாவில் இ- வாகனத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தும் வகையில் வாகனம் உற்பத்தி மையத்தினை தொடங்கி உள்ளது. அன்மையில் இந்த ஓலா நிறுவனத்தின் வாகனங்கள் புக்கிங்க் தொடங்கியது. பல லட்சம் மக்கள் இந்த வாகனங்களை புக்கிங்க் செய்ய தொடங்கி உள்ளனர். ஓலா வாகனம் இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி உள்ளன S1 and S1 Pro.
S1 யில் 2.98kwh லித்தியம் ஐயான் பேட்டரி உள்ளது. இதன் அதிக வேகம் 90கீமி என கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமாராக 121 கிமீ வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. அடுத்தபடியாக S1 Proயில் 3.97 kWh பேட்டரி கொண்டதாக உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் 115 கிமீ என கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமாராக 181 கிமீ வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டர்களில் குறிப்பிட்ட சில அம்சங்கள் உள்ளன . அவை என்ன என்று பார்த்தால் 7 inch touch screen instrutment cluster, hill hold assist, reverse mode, cruise control, navigation, keyless start போன்ற எண்ணற்ற அம்சங்கள் இந்த வாகங்னகளில் கொடுக்கபட்டுள்ளன. இதன் விலை என்னவென்று பார்த்தால் Ola s1 price 1,00,000 ஆக நிர்ணயம் செய்யபட்டுள்ளது. Ola s1 pro விலை 1.3 லட்சமாக நிர்ணயம் செய்யபட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டர்களில் குறிப்பிட்ட சில அம்சங்கள் உள்ளன . அவை என்ன என்று பார்த்தால் 7 inch touch screen instrutment cluster, hill hold assist, reverse mode, cruise control, navigation, keyless start போன்ற எண்ணற்ற அம்சங்கள் இந்த வாகங்னகளில் கொடுக்கபட்டுள்ளன. இதன் விலை என்னவென்று பார்த்தால் Ola s1 price 1,00,000 ஆக நிர்ணயம் செய்யபட்டுள்ளது. Ola s1 pro விலை 1.3 லட்சமாக நிர்ணயம் செய்யபட்டுள்ளது.
Simple one :
ஓலா நிறுவனத்தின் வாகனம் வெளியான அன்று வெளியான வாகனம் தான் Simple one . இதில் 4.8 kwh பேட்டரி உள்ளது இந்த வண்டியின் அதிகபட்ச வேகம் 105 கிமீ ஆக குறிப்பிடபட்டுள்ளது. மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 236 கிமீ செல்லலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. 30 நிமிட பாஸ்ட் சார்ஜிங்க் மூலம் 75 கிமீ வரை செல்ல முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இதில் நீக்க கூடிய பேட்டரி உள்ளதால் வீட்டின் உள்ளே அல்லது நீங்கள் பணிபுரியும் இடத்திற்கு கூட எடுத்து சென்று சார்ஜ் செய்ய முடியும் .
இந்த ஸ்கூட்டரில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன அவை geo fencing, sos message, navigation, tyre pressure monitoring, music போன்ற பல முக்கிய அமசங்கள் உள்ளன.
இதுபோல மேலும் சில ஸ்கூட்டர்கள் குறித்து அடுத்த பதிவில் காணலாம். தொடர்ந்து நம் பக்கத்தை பின் தொடருங்கள்.