weight loss ideas in tamil..!

1 min read
weight loss ideas in tamil-VIDIYARSEITHIGAL.COM

weight loss ideas in tamil

உடல் எடை சற்றி அதிகரித்தாலே பலருக்கு முகத்தில் ஒருவித சோகம் தோன்றிவிடுகிறது. அனைவருக்குமே சினிமா ஹீரோக்களை போன்று அழகான உடலை வைத்திருக்க வேண்டும் என ஆசை உள்ளது. ஆனால் வேலை பளு, அன்றாட டென்ஷன் காரணமாக பலருக்கு உடலை கவனித்து கொள்ள நேரமில்லாமல் உள்ளது.

பலருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என ஆசை உள்ளது . ஆனால் எப்படி குறைக்க வேண்டும் என்பது தான் தெரியவில்லை . Gym க்கு செல்ல வேண்டும் என பலருக்கு ஆசை ஆனால் நேரமில்லாத காரணத்தினால் முடிவதில்லை. உணவு கட்டுபாடு நம் உடலை நன்றாக வைத்துக்கொள்ள சிறந்த வழியாக உள்ளது.

என்ன தான் கஷ்டப்பட்டு உடற்பயிற்சி மேற்கொண்டாலும் உணவு கட்டுபாடு இல்லையெனில் நிச்சயமாக உடல் எடையை குறைப்பதில் கடும் சிரமம் ஏற்படும் . எனவே எந்த அளவுக்கு உடற்பயிற்சி மேற்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நாம் உணவிலும் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் முதலில் உணவு பழக்கத்தில் அதிகமாக குறைக்க நினைக்கும் பொருள் கார்போஹட்ரேட்ஸ் தான்.

ஆனால் கார்ப்பொஹைட்ரேட்ஸ் ஒரேடியாக குறைக்காமல் சிறிய அளவில் எடுத்து கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எளிய முறையில் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்களை கீழே பார்க்கலாம்:

சர்க்கரைவள்ளி கிழங்கு :

சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ,சி,பி , மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. கிழங்கு வகைகள் என்றாலே கொழுப்பு அதிகமாக இருக்கும் என நினைப்பர் . ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் அப்படி இல்லை மிகவும் குறைவான கொழுப்பு கொண்டதாக  சர்க்கரைவள்ளி கிழங்கு உள்ளது. இதனை சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தி நல்ல அளவில் அதிகரிக்கிறது. மேலும் மூளையின் செயல்பாட்டுக்கு இது மிகவும் நன்றாக உதவுகிறது.

பருப்பு வகைகள் :

அதிக அளவிலான கார்போஹைட்ரேட்கள் பருப்பு வகைகள் உள்ளன. அதை போல அந்த அளவுக்கு நார்ச்சத்து மற்றும் புரத சத்துக்கள் நிறைந்த ஒன்றாக பருப்பு வகைகள் உள்ளன.துவரம் பருப்பு, உளுந்த பருப்பு போன்றவைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபாட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இதயத்தை சீராக வைக்கவும் உதவுகிறது.

weight loss ideas in tamil-VIDIYARSEITHIGAL.COM

weight loss ideas in tamil

பழங்கள் :

பழங்கள் எப்போதுமே உடலுக்கு நன்மை பயக்க கூடிய ஒன்றாக தான் உள்ளன. வாழைப்பழம் ,ஸ்டாரபரி, மாம்பழம், தர்பூசனி போன்ற பழங்களில் ஆரோக்கியமான கார்போஹைரேட்கள் உள்ளன. அதன் காரணமாக தான் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் எப்போதுமே பழங்களை அதிக அளவில் எடுத்து கொள்கின்றனர். பழங்கள் அதிக அளவில் எடுத்து கொள்வதன் மூலம் பசியை குறைத்து உணவு குறைவாக எடுத்து கொள்ள உதவுகிறது.

முழு தானியங்கள் :

நிபுணர்கள் எப்போதும் நம்முடைய ஆரோக்கியமான உணவில் தாணியங்கள் இருக்க வேண்டும் என்றே கூறுகின்றனர். பெரும்பாலும் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் எப்போதும் தாணிய வகைகளை அதிக அளவில் உட்கொள்வர். தாணிய வகைகள் சிறந்த டையடிங்க் பொருளாக உள்ளது. தானியங்களில் அமீலம், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன. பிரவுன் அரிசி மற்றும் ஓட்மில் முழு போன்றவை இதற்கு சரியான எடுத்துக்காட்டு ஆகும் .

பால் பொருட்கள் :

அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது பால் பொருட்கள் பற்றி தான் . அதனால் டயடிங்க் இருப்பவர்களுக்கு இவை சிறந்த ஒன்றாக உள்ளது. பாலில் இருந்து பெறப்படும் பொருட்களான தயிர், யோகார்ட், நெய், வெண்னெய் போன்ற பொருட்களில் நல்ல கார்போஹைட்ரேட்ஸ் உள்ளன. பாலில் உள்ள லேக்டகோஸ் உடலில் உள்ள தசைகளை வலிமையாக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி பாலில் இயற்கையான கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை எலும்புகள் வலிமையாக உதவுகின்றன.

மேலே குறிப்பிடபட்டுள்ள சில பொருட்கள் உடலுக்கு நல்ல வலிமை அளிக்க கூடியவை ஆகும் . கார்போஹட்ரேட்ஸ் நிறைந்த ஒன்றாக இருந்தாலும் இவை உடலுக்கு நன்மை பயக்க கூடிய ஒன்றாக உள்ளன.  ஆயினும் உடற்பயிற்சி போன்று ஒன்று உடல் எடையை குறைக்க உதவுவது போல பிற உதவுவது. இவை எல்லாம் உடல் எடையை குறைப்பதில் கூடுதல் பலம் அளிப்பவை ஆகும்.

Spread the love
x