best life goals list..! 30 வயதுக்குள் இதெல்லாம் கண்டிப்பாக செஞ்சிடுங்க..!

1 min read
best life goals list-vidiyarseithigal.com

best life goals list

எல்லோருக்கும் நன்றாக சம்பாரித்து சிறிய வயதில் நன்றாக வாழ்க்கையில் செட்டில் ஆகி விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் . ஆனால் பலருக்கு அதற்கான திட்டமிடுதல் இருக்காது. சிலர் மட்டுமே அந்த திட்டமிடுதலில் வெற்றி பெறுகிறார்கள். நாம் அனைவருமே 30 வயதுக்குள் சொந்த வீடு, நல்ல வருமானம் வர கூடிய தொழில் அல்லது வேலை, சொந்தமாக ஒரு கார் என வாழ்க்கையில் செட்டில் ஆக ஆசை வைத்திருப்போம்.

ஆனால் அதற்கான திட்டமிடுதல் நம்மில் பலரிடம் இருக்காது. அப்படி திட்டமிடுதல் குறித்தும் என்னென்ன நாம் 30 வய்துக்குள் கோல்களாக செட் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம் .

1.Build Emergency fund :

எமர்ஜென்சி பண்ட் என்றால் என்ன? எப்போதுமே நாம் சம்பாரிக்கும் தொகையில் குறிப்பிட்ட ஒரு தொகையை தனியாக சேமித்து வைக்க வேண்டும். அவ்வாறு சேமித்து வைத்தால் என்றெனும் ஒரு அவசர தேவைக்கும் நமக்கு உதவும் . இதுபோன்று பண்ட்களை தான் நாம் எமர்ஜென்சி பண்ட் என கூறுகிறோம். உதாரணமாக 25 வயதில் இருந்து வேலைக்கு செல்கிறீர்கள் என்றால் உங்கள் வருமானத்தில் ஒரு 2000 அளவினை தனியாக வங்கி கணக்கு  தொடங்கி சேமித்து வையுங்கள் பிற்காலத்தில் உங்களுக்கு எமர்ஜென்சி பண்டாக இருக்கும் .

best life goals list-vidiyarseithigal.com

best life goals list

2.Build an Side hustle :

சைட் ஹஸ்ல் என்றால் பார்ட் டைம் ஜாப் தான் சைட் ஹஸ்ல் என்பர். இன்றைய காலகட்டத்தில் ஒரு வருமானத்தை வைத்து கொண்டு நம்மால வாழ்க்கை நடத்துவது என்பது ஒரு பெரிய விஷியமாக உள்ளது. அதன் காரணமாக பலர் அவர்கள் வேலை நேரம் முடிந்த பிறகு மேற்கொண்டு வேலை செய்து வருகின்றனர். இதுபோன்ற பார்ட் டைம் ஜாப்கள் மூலம் நன்றாக வருவாய் ஈட்ட முடியும் .

உதாரணமாக பார்ட் டைமில் நீங்கள் சொந்தமாக ஒரு பிளாக் உருவாக்கி உள்ளீர்கள் என்றால் குறைந்தது ஒரு நாளில் 2 மணி நேரம் அந்த பிளாகிற்காக செலவிடுங்கள் . அதில் வரும் உங்கள் வருவாயை பெருக்க பாருங்கள் . அதன் மூலம் மாதம்தோறும் ஒரு 5 முதல் 8 ஆயிரம் வரை சம்பாரிக்க முடியும் என்ற அளவுக்கு உங்கள் வருவாயை ஈட்டுங்கள்.

  1. Eat healthy foods:

பணம் மட்டும் இருந்தால் நன்றாக வாழ்ந்திட முடியாது . நன்றாக சம்பாரிக்க வேண்டும் என்றால் நல்ல உடல் ஆரோக்கியம் வேண்டும். எனவே எந்த அளவுக்கு உழைக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கு முதலில் நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும். அதிக அளவில் உணவகத்தில் உண்பது உங்கள் காசினை மட்டும் அல்ல உங்கள் உடல் நலனையும் கரைக்க தொடங்கிவிடும். ஒரு 30 வயதுக்குள் இதனையெல்லாம் ஒரு செயலாக கடைப்பிடிக்க தொடங்கினால் நிச்சயம் 30 வயதில் உங்கள் வாழ்க்கையின் பிற்பாதியில் சிறந்த ஒன்றாக அமையும் .

4.Save for Large Purchase:

சம்பாரித்து உடனே ஒரு பொருளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். நாம் தான் சம்பாரிக்க தொடங்கிவிட்டோம் அதனால் இந்த பொருளை தற்போது வாங்கிவிட்டு அதற்காக ஈஎம்ஐ கட்டிக் கொள்ளலாம் என நினைக்காதீர்கள் . உங்கள் வருவாயினை சேமித்து வைத்து அதன் மூலம் நீங்கள் சிறியதாக வாங்க நினைத்த பொருளை பெரிய அளவில வாங்க ஆசைப்படுங்கள். உதாரணமாக ஒரு செல்போன் வாங்க ஆசை இருக்கும் 20 ஆயிரத்தில் வாங்க நினைக்கும் செல்போனை தற்போது வாங்காமல் பிற்காலத்தில் நன்றாக சேமித்து வந்தால் அதனை காட்டிலும் சிறந்த மாடல் செல்போனை வாங்கலாம்.

எனவே எப்போதுமே உடனே எந்த ஒரு பொருளையும் வாங்க நினைக்காமல் உங்கள் வருமானத்தை சேமித்து வைத்து பெரிய பொருளாக வாங்க ஆசைப்படுங்கள். அதன் மூலம் உங்கள் சேமிப்பு கூட உயர வாய்ப்புள்ளது.

இதுபோன்று பல கோல்கள் உள்ளன 30 வயதுக்குள் நாம் அடைய அவற்றையெல்லாம் வருகிற பதிவில் காணலாம் . தொடர்ந்து நம் பக்கத்தை பிந்தொடருங்கள் .

Spread the love
x