youtube content ideas tamil..! part 1

1 min read
youtube content ideas tamil-vidiyarseithigal.com

youtube content ideas tamil

கொரோனா தொற்றில் பலர் வேலையிழந்தனர் , பலருக்கு வருமானத்தில் பற்றாகுறை ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் பலர் வீட்டில் இருந்து லாபம் ஈட்ட பல வழிகளை தேடினர் . அதில் ஒன்று தான் இணையதளம் வாயிலாக லாபம் ஈட்டும் முறை . அதிலும் முக்கியமாக யூடியுப் வலைத்தளம் மூலம் லாபம் ஈட்ட பலர் முயற்சிக்க தொடங்கினர். அன்று முதல் இப்போது வரை இன்னும் பலர் யூடியுப் வலைத்தளங்களில் சேனல் தொடங்கி வருகின்றனர்.

பொதுவாக யூடியுப்பில் அதிகம் காணப்படுபவை cooking மற்றும் travel vlog ஆனால் அவற்றை தாண்டி பல ஐடியாக்கள் உள்ளன யூடியுப் சேனல் தொடங்க அவற்றை குறித்து இந்த பதிவில் காணலாம்.

Top List :

அது என்ன டாப் லிஸ்ட் என யோசிக்கிறீர்களா எப்போதுமே அனைத்து பொருட்களிலும் சில டாப் லிஸ்ட்கள் இருக்கும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட தொகையில் 10 ஆயிரம் அளவில் செல்போன் தேடப்போனால் பல மாடல்கள் பல பிராண்ட்களில் உள்ளன. அதில் குறிப்பிட்ட நல்ல மாடலை தேர்வு செய்து டாப் 5 அல்லது டாப் 10 என வரிசைப்படுத்தி அதில் உள்ள features களை மக்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூறி வீடியோக்களை பதிவிடலாம். இது செல்போனுக்கு மட்டும் அல்ல அனைத்து விதமான பொருட்கள் , தங்கும் விடுதிகள் , உணவகம் என எல்லாவற்றிக்கும் பொருந்தும் .

Pets and Animals videos :

இன்றைய நாளில் பலர் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்த்து வருகிறோம் . அவர்கள் எல்லாம் இதனை ஈசியாக தொடங்கி வீடியோக்களை பதிவேற்றி வரலாம். உங்கள் செல்லபிராணிக்கு நீங்கள் என்ன மாதிரியான உணவு வழங்கி வருகிறீர்கள், எப்படி பார்த்து கொள்கிறீர்கள் என பல வீடியோக்களை பதிவேற்றலாம்.

இவற்றையெல்லாம் தாண்டி உங்கள் செல்லப்பிராணி செய்யும் குறும்பு தனமான சேட்டைகள் தான் அதிக மக்களை கவரும் எனவே உங்கள் செல்லப்பிராணிகள் செய்யும் சேட்டைகளை வீடியோவாக பதிவேற்றி வரலாம். செல்லபிராணிகள் இல்லாதவர்கள் கூட எந்த மாதிரியான் செல்லபிராணிகள் வாங்கலாம், எங்கு வாங்கலாம் என அது குறித்த வீடியோக்களை பதிவிடலாம்.

youtube content ideas tamil-vidiyarseithigal.com

youtube content ideas tamil

Trailer and movie reactions :

நீங்கள் மிகப் பெரிய சினிமா பிரியர் என்றால் அனைத்து படங்களையும் முதல் காட்சி பார்த்துவிடுவீர்கள் என்றால் கண்டிபாக நீங்கள் யூடியுப் சேனல் தொடங்கலாம். பிரத்யேகமாக உங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தால் நிச்சயம் பலரால் விரும்பி பார்க்கபடும் வலைத்தளமாக உங்கள் சேனல் மாறிவிடும். ரீவிவ்யூ சேனல் என்றால் சினிமா பார்த்துவிட்டு தான் உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று இல்லை.

ஒரு டிசர், டிரைலர், பஸ்ட் லுக் போஸ்டர் , பாடல் என சினிமா குறித்த அனைத்து விசயங்களையும் உங்கள் சேனலில் நீங்கள் பேசலாம். அதற்கென எப்போது பார்வையாளர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். எனவே இதுபோண்ற சேனல்கள் ஆரம்பித்தால் நிச்சயம் விரைவில் நல்ல வரவேற்ப்பை பெறலாம்.

Time lapse :

டைம் லேப்ஸ் பலருக்கு தெரிந்திருக்கும் , சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . டைம் லேப்ஸ் என்றால் ஒரு நாள் முழுவதும் ஒரு குறிப்பிட இடத்தில் நடக்கும் விசயங்களை கேமரவை அசைவின்றி துள்ளியமாக படம்பிடித்து பின்னர் அதனை குறுகிய கால நிமிடத்திற்குள் உங்களுக்கு ஏற்றாற்போல மாற்றி பதிவேற்றலாம். இதனை டைம் லேப்ஸ் என்பர். உதாரணமாக இப்போது நீங்கள் ஒரு சுற்றுலா செல்கிறீர்கள் என்றால் ஒரு டைம் லேப்ஸ் வீடியோவை நீங்கள் வீட்டில் இருந்து தொடங்கி பின்னர் மீண்டும் வீடு வரும் வரை எடுத்து அதனை பதிவேற்றலாம். அதன் மூலம் உங்கள் பயண அனுபவங்களை பதிவேற்றலாம் .

Dash and security cam videos :

பலருக்கு ஆச்சரிய மற்றும் அதிசயத்தக்க நிகழ்வுகளை காண பிடிக்கும் . ஆனால் அப்படிபட்ட நிகழ்வுகளை நாம் காத்திருந்து உருவாக்கவோ , படம் பிடிக்கவோ முடியாது. இதுபோன்ற நிகழ்வுகள் எப்போதாவது சிசிடிவி அல்லது கார்களில் உள்ள டாஸ்போர்ட் கேமிராக்களில் பதிவானால் தான் உண்டு . அவ்வாறு அது போன்று பதிவாகும் காட்சிகளை பிரத்யேகமாக நாம் கண்டுபிடித்து அதனை சிறந்த எடிட் மற்றும் அந்த காட்சியில் என்ன நடைபெறுகிறது என்பதனை நம்முடைய குரல்விளக்கத்துடன் பதிவிடலாம் . இது குறித்து சேனல்கள் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெறும் .

இதுபோன்று பல்வேறு ஐடியாக்கள் உள்ளன உங்களுக்கென என யூடியுப் சேனல் தொடங்க .அதனை தெரிந்து கொள்ள நம் பக்கத்தை பின் தொடருங்கள்.

Spread the love
x