upcoming mobile in september.!இந்த மாத புது வரவுகள்.!
1 min readupcoming mobile in september
ஒவ்வொரு மாதமும் எப்படி நகர்ந்து செல்கிறது என்றே தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு மாதம் வந்தாலெ போதும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அவர்களின் புது வரவுகளை சந்தையில் வெளியிட காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த செம்டம்பர் மாதம் சந்தைக்கு வர உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து இதில் காணலாம் .
Redmi 10 Prime :
இந்திய சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக ரெட்மி நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் பட்ஜெட் விலையில் வரவுள்ள ஒரு ஸ்மார்ட்போனாக தான் இந்த ரெட்மி 10 பிரைம் இருக்க போகிறது. இது குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை . ஆனால் இதுபோன்ற அம்சங்களுடன் வரலாம் என வல்லுனர்கள் கணிக்கின்றனர்.
அதன்படி 6.5 Inch கொண்ட டிஸ்பிளே, 5000 mah கொண்ட பேட்டரி, Mediatek Helio g88 பிராஸசர் உடன் வரலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் 50Mp, 8mp, 2mp, 2mp என 4 பின் பக்க கேமராக்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் 8mp கொண்ட ஒரு முன் பக்க கேமராவுடன் வரலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
upcoming mobile in september
IQOO 8 series:
குறைந்த ஒரு Flagship ஸ்மார்ட்போனை சந்தைக்கு கொண்டு வருவதில் IQOO நிருவனத்தை மிஞ்சிட முடியாது. அதிக அளவிலான Specifications கொண்ட ஸ்மார்ட்போன்கள் எப்போதும் IQOO நிறுவனம் தரப்பில் இருந்து வெளி வந்துகொண்டிருக்கின்றன. அதன் படி இந்த முறை IQOO 8 series வெளியாக இருப்பாதாக தகவல் வெளிவந்துள்ளன.
இதுவரை கொண்ட வரப்படாத பல Specifications களை இந்த ஸ்மார்ட்போனில் எதிர்ப்பார்க்கலாம் என தகவல் வெளியாகி உள்ளன. 6.56 inch கொண்ட டிஸ்பிளே, 888 plus snapdragon பிராஸர் , 4350 mah பேட்டரி, 48+13+13Mp கொண்ட பின் பக்க கேமரா, 16 Mp கொண்ட முன் பக்க கேமரா என பல அம்சங்களுடன் வரலாம் என எதிர்ப்பார்க்க படுகிறது. இன்னும் முழு தகவல்கள் வெளியாகவில்லை.
Best skill development ideas in Tamil ..!
Galaxy S21 :
சாம்சங்க் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுமையான வகையில் பல ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றனர். பல புதுவித டெக்னாலஜிகளை ஸ்மார்ட்போனில் கொண்டு வரும் நிறுவனமாக சாம்சங்க் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் சாம்சங்க் நிறுவனம் அதன் கேலக்சி சிரீஸில் இருந்து S21 மாடலை வெளியிட உள்ளது.
இது குறித்தும் முழு தகவல்கள் வெளிவரவில்லை ஆனால் இது போன்ற specifications களை கொண்டு வெளிவரலாம் என சில தகவல்கல் வெளியாகி உள்ளன . அவை 888 Snapdragon பிராஸர் உடன் , FHD டிஸ்பிளே கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் முன்னரே வந்த சாம்சங்க் S21 மாடலின் Fan edition மாடலாக இது வெளிவரும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
VIVO X70 series :
பெரும் புகைப்பட பிரியர்கள் விரும்பும் ஸ்மார்ட்போனாக விவோ உள்ளது. புகைப்பட தரத்திற்காகவே பலர் இந்த ஸ்மார்ட்போனை விரும்பி வாங்குகின்றனர். அதற்கு ஏற்றால் போல கடந்த முறை வெளியான விவோ X60 மாடல்கள் இருந்தன. Zeiss நிருவனத்துடன் இணைந்து கேமராக்களில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது விவோ நிறுவனம் .
இந்நிலையில் அடுத்து X70 சீரீஸ் வெளியிட உள்ளது. இதிலும் கேமராவுக்கு மிகப்பெரிய முக்கியதுவம் அளிக்கபட்டு உள்ளதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் முக்கிய அம்சங்களாக இந்த முறை Snapdragon 888 பிளஸ் பிராசஸர் மற்றும் இதன் டிஸ்பிளே அமையும் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த முறை வெளிவந்த X60 70000 ரூபாய் அளவுக்கு வெளி வந்தது. இம்முறை என்ன விலைக்கு வெளி வரும் என பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.
Apple 13 :
இறுதியாக அனைவராலும் விரும்ப படும் ஒரு ஸ்மார்ட்போன் தான் வெளிவர உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் ஒரு முறையாவது இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என ஆசையில் இருப்பர். அது தான் ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் இந்த மாதம் அந்நிறுவனத்தின் ஆப்பிள் 13 மாடல்கள் வெளிவர உள்ளன. இது குறித்து மேற்படி தகவல்கள் எதும் வெளியாகவில்லை.
இது மட்டுமின்றி Oppo, mi போன்ற நிறுவனங்களும் ஒரு ஸ்மார்ட்போன்கள் வெளியிடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.