startup ideas in tamil: புதிதாக தொழில் தொடங்க போறீங்களா ..! உங்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ்..!
1 min readstartup ideas in tamil
சிலருக்கு வேலைக்கு செல்வதை விட வேலை தரும் அளவுக்கு முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும் . இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்வதை காட்டிலும் புதிதாக தொழில் தொடங்குவதையே ஆசையாக வைத்துள்ளனர். நீங்கள் எந்த தொழில் தொடங்கினாலும் சரி உங்களுக்கான சில நெறிமுறைகள் உள்ளன.
அந்த நெறிமுறைகளை கண்டிப்பாக நீங்கள் தொழில் தொடங்குவதற்கு முன் ஆராய்ந்து அதன் படி செய்ய வேண்டும் .அப்படி செய்தால் நீங்கள் தொடங்கும் தொழிலில் நிச்சயம் 100 சதவீத வெற்றியை நீங்கள் அடையலாம்.
Industry specific skills :
உங்களுக்கு ஏற்ற தொழில் என்ன ? அதனை முதலில் நீங்கள் கண்டறிய வேண்டும் . அந்த தொழிலில் உங்களுக்கு தெரிந்தது என்ன? அதனை நீங்கள் செய்ய தொடங்கினால் பிறரின் உதவி இல்லாமல் எந்த அளவுக்கு உங்களால் அனைத்தையும் செய்ய முடியும். இவை அனைத்தையும் நீங்கள் ஆராய வேண்டும் பின்னர் உங்களுக்கு ஏற்ற தொழிலை நீங்கள் தொடங்க வேண்டும்.
உதரணமாக நீங்கள் ஒரு உணவகம் தொடங்க போகிறீர்கள் என்றால் அதில் உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும். அதனை நீங்கள் செய்ய தொடங்கினால் எந்த அளவுக்கு லாபம் அடைவீர்கள் . எவ்வளவு செலவு செய்வீர்கள் என அனைத்தையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் .
pan card என்றால் என்ன? நாம் எதற்கு பயன்படுத்துகிறோம்..!
Creating system :
முறையான ஒரு சுழற்சி முறையை உருவாக்க வேண்டும் . அதன்படி அனைத்து நேரங்களிலும் செயல்பட வேண்டும். இவர்களுக்கு இந்த பொறுப்பு தான் என பிரித்து முன் கூட்டியே கொடுக்க வேண்டும் . பின்னர் அதன் படி நடந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட செயலை செய்து அந்த தொழிலில் அதனை ஒரு அடையாளமாக மாற்ற வேண்டும்.
உதாரணமாக உணவகத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தால் அந்த குறிப்பிட்ட உணவு நிச்சயம் கிடைக்கும் என வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் நிச்சயம் ஒரு சுழற்சி முறையை உருவாக்க முடியும்.
startup ideas in tamil
Marketing :
இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே சிறிய பல் குத்தும் குச்சி அதனை குறித்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் உங்கள் பொருளோ , நிறுவனமொ மக்களிடம் சென்றடையும். அதன் பின் தான் உங்களால் வெற்றி காண முடியும். ஆனால் அதிலும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் அளவை வைத்து மார்கெட்டிங்க் செய்ய வேண்டும் .
பெரிய அளவில் செய்துவிட்டு மக்களிடம் சென்று சேராமல் போனாலும் நஷ்டம் தான் ஏற்படும் . சிறிய தொகையில் எப்படி சிறந்த முறையில் மார்கெட்டிங்க் செய்ய முடியும் என நீங்கள் தேர்வு செய்து அதன்படி செய்யவும் . அப்போது தான் நல்ல லாபம் அடையலாம் .
Human psychology:
மக்களின் மனநிலை அதனையும் நீங்கள் தொழில் தொடங்குவதற்கு முன் சிந்திக்க வேண்டும். உங்கள் பகுதியில் என்ன தெவையை மக்கள் எதிர் பார்க்கின்றனர். அவர்களிடம் இல்லாத பொருளை அல்லது அவர்களின் தேவையை அறிந்த பிறகே நீங்கள் உங்களுக்கு அந்த தொழில் ஏற்றதா என முடிவு செய்தால் எளிதாக இருக்கும்.
அப்படி இல்லையென்றால் உங்களுடையை தொழிலில் உள்ள ஒரு பொருளை மக்களிடம் எப்படி சேர்க்க போகிறீர்கள் என நீங்கள் முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக உணவகத்தை தொடங்கினால் கூட அந்த உணவகத்தில் உங்கள் பகுதியில் கிடைக்காத என்ன உணவு உங்கள் உணவகத்தில் கிடைக்கும் என்பதனை மக்களிடம் புரிய வைக்க வேண்டும்.
Leadership :
அடுத்து முக்கியமான ஒன்று தலைமைத்துவம் உங்கள் தலைமையில் எப்படி இருக்க போகிறீர்கள் . உங்களுடன் பணிபுரிவர்களை எப்படி செயல்பட வைக்க போகிறீர்கள் என பல விஷயங்கள் உள்ளது. மேலும் உங்கள் தலைமையில் உங்கள் நிறுவனம் எப்படி முன்னேற்ற பாதையில் செல்ல போகிறது என்பது போன்ற விஷயங்களை நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்ட தலைப்புகள் ஒரு சிலவைகளே ஆகும் . இது போன்று பல விஷயங்கள் உள்ளன . அவற்றை எல்லாம் நீங்கள் ஆராய்ந்து அதன் படி உங்கள் தொழிலை தொடங்கினால் வெற்றியை விரைவாக அடைந்துவிடலாம்.