part time business ideas tamil ..!Best Sidehustles ideas tamil ..!
1 min readpart time business ideas tamil
நம்மில் அனைவருக்குமே வருமானத்திற்கு அதிகமான செலவுகள் இருந்து கொண்டுதான் உள்ளது. அதனை ஈடுகட்ட நாம் பலரிடம் பணம் பெறுவது, செலவுகளை குறைப்பது என பல வழிகளை நாம் கையாண்டு வருகிறோம். ஆனால் நம்மில் கிடைக்கும் நேரத்தில் கூடுதலாக என்ன செய்யலாம் என சிந்திகாமல் இருக்கிறோம் .
வேலை நேரம் முடிந்த பிறகு கூடுதல் வருமானத்திற்கு நாம் செய்ய வேண்டிய சில தொழில்கள் அல்லது வேலைகள் குறித்து இதில் பார்க்கலாம். இதனை தான் ஆங்கிலத்தில் Side hustles என அழைப்பர். இவ்வாறு நாம் செய்யும் பட்சத்தில் கூடுதலாக நாம் வருமானம் பெறலாம் .
Freelancer on Fiverr:
Fiverr ஒரு இணையதளம் ஆகும் . அதில் பகுதி நேர வேலை தேடுபவர்களுக்காக பல வேலைகள் உள்ளன. குறிப்பாக Content Writing, Video editing, Photo Editing என பல வேலைகள் அதில் உள்ளன. இது போன்ற தளங்களில் நமக்கு ஏற்ற வேலைகள் எளிதாக கிடைத்துவிடும். குறிப்பிட்ட பிராஜக்டினை எடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து தரவேண்டும்
பின்னர் அதற்கேற்ப நமக்கு பணம் தருவார்கள். இதில் Hour அல்லது Days அல்லது week கணக்குகளில் வேலை செய்து அதற்கேற்ப பணத்தினை பெற்றுக் கொள்ளலாம் .
Develop a website :
வெப்சைட் டெவலப் செய்வது மிகப்பெரிய காரியம் என பலர் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அது மிக எளிதான ஒன்று தான். இவ்வாறு வெப்சைட் டெவலப் செய்து விற்பது மூலம் நாம் எளிமையாக பகுதி நேரத்தில் நிறைய சம்பாரிக்க முடியும். வெப்சைட் டெவலப் செய்வதற்கென்று பல பிரத்யேக வெப்சைட்கள் உள்ளன. அவற்றின் மூலம் நமக்கு ஏற்றது போல வெப்சைட்களை உருவாக்கி நாம் அதனை விற்பனை செய்ய முடியும் .
இது போன்று பகுதி நேர வேலைகள் எளிமையாகவும் , பணம் சம்பாரிக்க முறையானதாகவும் இருக்க கூடியவை. மெல்ல கற்றுக் கொண்டால் நாம் எளிதாக அதில் இருந்து நங்கு சம்பாரிக்க இயலும்.
Start your ATM :
என்ன நம்ம ஏடிஎம் ஆரம்பிக்கிறதா . பேங்க் இருந்தா தான் ஏடிஎம் வைக்க முடியும் . அப்படி நினைக்காதீங்க உங்களுக்கு என்று சொந்த இடம் இருந்தால் போதும் நீங்களே ஒரு ஏடிஎம் வைக்கலாம் . அதன் மூலம் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை நன்றாக சம்பாரிக்க முடியும்.
அப்படி ஒரு சில ஏடிஎம் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி கொண்டு வருகின்றனர். பலர் அப்படி என்ன சம்பாரிக்க முடியும் என எண்ணுவீர்கள் . ஆனால் உங்களால் 60 முதல் 80 சதவீதம் வரை மாதம் கிடைக்கும் தொகையில் இருந்து உங்களுகாக அந்த நிறுவனம் வழங்கும் . இதன் மூலம் நீங்கள் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வருமானமாக பெறலாம்.
Start a Youtube Channel :
பலர் இதனை செய்கீறார்கள் நாம் என்ன இதில் புதிதாக செய்யபோகிறோம் என நீங்கள் யோசிக்கலாம். அந்த யோசனையை விட்டு விட்டு தொடங்கினாலே போதும் மெல்ல நீங்களே டெவலப் செய்து விடலாம் . சராசரியாக இந்தியாவில் 20 மில்லியன் வரை யூடியுப் மூலம் சம்பாரிக்க முடிகிறது.
அனைவரும் பின்பற்றும் முறையை பின்பற்றி வீடியோக்களை பதிவிடுவதை காட்டிலும் வித்தியாசமான முறையில் பதிவிட்டு வந்தால் எளிதாக நாம் அதில் சம்பாரிக்க இயலும் . ஆனால் இதுபோன்ற இடங்களில் பொறுமை மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. நிதானமாக நாம் வீடியோக்களை பதிவேற்றி கொண்டே வந்தால் ஒரு நாள் நாம் சம்பாரிக்க தொடங்கி விடலாம்.
இதுபோன்று பல தொழிலகள் அல்லது வேலைகளை நாம் Sidehustle ஆக செய்து வருவதன் மூலம் நிரந்தர மற்றும் முறையான வருமானத்தை பெற்றுக் கொண்டே இருக்கலாம். ஆனால் இவை அனைத்திற்கும் பொறுமை என்பது மிக அவசியமான ஒன்றாகும் .