kerala unknown tourist places ..! Best கேரளாவில் பெரும்பாலான காணாத இடங்கள்

1 min read
kerala unknown tourist places-vidiyarseithigal.com

kerala unknown tourist places

இந்தியாவில் சுற்றுலா தளங்களுக்கு குறைவே இல்லை. பெருவாரியான நகரங்களில் பல இடங்கள் சுற்றுலா செல்ல இடங்களாக உள்ளன. இருப்பினும் பெரும்பாலான மக்கள் கேரளாவிற்கு சுற்றுலா செல்வதை விருப்பமாக கொண்டுள்ளனர். அதற்கான காரணமாக இருப்பது அங்கு நிலவும் வானிலை மற்றும் பச்சை போர்வை உள்ள பகுதிகளே ஆகும் . கண்களை கொள்ளை அடிக்கும் அளவுக்கு இயற்கை எழில் நிறைந்த பகுதியாக கேரளா உள்ளது.

கேரளா என்றாலே அதிகபடியான மக்கள் செல்ல விரும்பும் இடங்கள் மூணார், தேக்கடி, ஆலப்பூழா ஆகும் . ஆனால் இந்த இடங்களை காட்டிலும் கேரளாவில் சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன . அவை என்னென்ன என்பதனை குறித்து இப்பதிவில் காணலாம் .

Ponmudy:

கேரளாவில் சுற்றுலா செல்ல விரும்புகீறீர்களா அதிகமபடியான மக்கள் செல்லாத இடங்களுக்கு செல்ல ஆசைப்படுகீறீர்களா உங்களுக்கு ஏற்ற இடம்தான் இந்த ponmudy. திருவனந்தபுரத்தில் இருந்து 61 கீமி தொலைவில் அமைந்துள்ள இடம் தான் இது. அங்கு அமைந்துள்ள Golden valley மிகவும் ரம்மியமானதாக உள்ளது. மிகவும் தூய்மையான கண்ணாடி போன்று இந்து நீர் இருக்கும் . சுற்றிலும் பச்சைபசலேன அமைந்துள்ளது.

kerala unknown tourist places

kerala unknown tourist places

Peppera wildlife sanctuary அடுத்தபடியாக காண்பதற்கு முக்கிய இடமாக இது உள்ளது. அனைத்து வகையான விலங்குகளும் இங்கு உள்ளன. இதன் அருகில் உள்ள ஏர்போர்ட் மற்றும் ரயில் நிலையம் திருவனந்தபுரம் ஆகும் . மலை ஏறுதலில் விருப்பம் உள்ளவர்களுக்கு சிறந்த இடமாக இந்த Ponmudy இருக்கும்.

Ranipuram :

அடுத்தபடியாக kerala unknown tourist places இருக்கும் இடம் தான் Ranipuram . இது காசர்கோடு மாவட்த்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியது போல அமைந்துள்ளதால் இயற்கை பிரியர்களுக்கு சிறந்த இடமாக இது இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை . கடல் மட்டத்தில் இருந்து சுமார் 750 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் இந்த இடம் இயற்கை விரும்பும் நபர்களுக்கு உகந்த இடமாகும். மணிமாலா மலை ஏறுவதை விரும்பும் நபர்களுக்கு முக்கிய இடமாக உள்ளது.

ரம்மியமான சூழல் , சாரல் காற்று என அனைத்து இந்த இடத்திற்கு மேலும் அழகு சேர்கின்றன.ஜீப் சாவரிகள் மூலம் வனவிலங்குகளை காண செல்வது முக்கிய அம்சமாக உள்ளது. அருகாமையில் உள்ள ஏர்போர்ட்  மங்களூர் ஆகும் . அருகாமையில் உள்ள ரயில் நிலையம் காசர்கோடு ஆகும் .

Ilaveezha poonchira:

Pala-thodapuzha நெடுஞ்சாலையில் கோட்டயம் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டு இருக்கும் இடமாக இது உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3200 அடி உயரம் வரை கொண்ட மலைகளால் இந்த இடம் உள்ளது. கேரளாவில் உள்ள சுற்றுலா பயணிகளால் அதிகம் அறியப்படாத இடமாக இது உள்ளது . நவம்பர் முதல் மார்ச் மாதம் இந்த இடத்திற்கு சென்று வருவது சிறப்பானதாக அமையும் .  அருகாமையில் உள்ள ஏர்போர் கொச்சின் ஆகும் . அருகாமையில் ரயில் நிலையம் கோட்டயம் ஆகும் .

Kalpetta :

அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லாத இடமாக இருப்பது இது ஆகும் . கடல் மட்டத்தில் இருந்து சுமார் 780 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் முழுவதும் தேயிலை தோட்டங்களால் முழுவதும் சூழப்பட்டுள்ளது. Karapuzaha Dam 12கிமீ தொலைவில் அமைந்துள்ளது. Muthunga wildlife sanctuary இப்பகுதியில் இருந்து 37 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அனைத்து வகையான விலங்குகளும் இந்த சரணாலயத்தில் உள்ளன.

Kanthapara waterfalls 9 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடமாக உள்ளது.

இவை மட்டுமின்றி இன்னும் பல்வேறு இடங்கள் கேரளாவில் அதிகபடியான சுற்றுலா பயணிகள் செல்லாத இடங்களாக உள்ளன . அவை குறித்து அடுத்த பதிவில் காணலாம் .

Spread the love
x