list of ba courses …! B.A courses list and details in tamil..!

1 min read
list of ba courses-vidiyarseithigal.com

list of ba courses

பள்ளி பருவம் அதாவது 12வது வகுப்பு முடித்ததுமே பலருக்கு எழும் சந்தேகம் அடுத்தது என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம்? சிலர் நண்பர்களிடம் ஆலோசனை பெறுவர், சிலர் உறவினர்களிடம் ஆலோசனை பெறுவர். ஒரு சிலர் என்னென்ன Course Course கள் உள்ளது என்பதனை ஆராய்ந்து அதன் பின் முடிவெடுப்பர்.

அப்படி ஆராய்ந்து முடிவெடுப்பவர்களுக்காக பிரத்யேக தொகுப்பு தான் இந்த தொகுப்பு. B.A என்னென்ன course கள் உள்ளது. படித்து முடித்தபின் வேலைவாய்ப்பு வகைகள் என்ன என்பதனை விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.

B.A படிப்பில் சேர விரும்பினால் பல்வேறு வகையான பாடப்பிரிவுகள் உள்ளன. 30 க்கும் மேற்பட்ட பாடபிரிவுகள் இந்த பட்டப்படிப்பில் அடங்கி உள்ளன

B.A English :

முழுக்க முழுக்க ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளித்து உருவாக்கபட்ட பாடப்பிரிவு தான் B.A English .  மூன்று ஆண்டுகால பட்டப்படிப்பாக இது உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் இந்த பட்டப்படிப்பு மூலம் அறிந்து கொள்ள முடியும். 12ம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

இந்த பட்டப்படிப்பினை தேர்ந்தெடுப்பது மூலம் நமக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழி பிறக்கின்றன. உதாரணமாக Content writing , Teaching, Media என பல்வேறு துறைகளை நம்மால் எளிதில் தேர்வு செய்ய முடிகிறது. ஒரு சில கல்லூரிகள் தொலைதூர கல்வியாகவும், பகுதி நேர பட்டப்படிப்பாகவும் இதனை வழங்கி வருகின்றன.

B.A Economics :

அடுத்ததாக இந்த வரிசையில் வருவது Economics இந்த பட்டப்படிப்பும் மூன்று ஆண்டுகால படிப்பு தான். 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த பட்டப்படிப்பில் சேர தகுதியுடைய நபர்கள் ஆவர். இந்த பட்டப்படிப்பு மூலம் நாம் அறிந்து கொள்ள கூடிய விஷயமாக இருப்பது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை நாம் எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதாகும்.

Microeconomics, macroeconomics, political economics போன்ற பாடங்கள் இந்த பட்டப்படிப்பில் அடங்கியுள்ளன. இந்த பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு Invest analyst மற்றும் sales analyst போன்ற வேலைவாய்ப்புகள் ஆண்டுக்கு ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வருமானம் வரையில் சம்பளமாக அளித்து வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

B.A Political science :

இந்த பட்டப்படிப்பும் மூன்று ஆண்டுகளுக்கான பட்டப்படிப்பு ஆகும். 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த படிப்பில் சேரலாம். இந்த படிப்பின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அரசியல் பற்றிய நுணுக்கம்களை அறிந்து கொள்ள முடியும். இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு Historical and modern political, Public administration, Govermental policies, public affairs குறித்த பாடங்கள் கற்பிக்கபடுகிறது.

இந்த பட்டப்படிப்பினை முடித்த மாணவர்களுக்கு Media, public service, Education, social service போன்ற வேலைவாய்ப்புகள் அதிகம் காத்திருக்கின்றன. ஒரு சில கல்லூரிகளில் Entrance exam மூலம் மாணவர்கள் இந்த பட்டப்படிப்பிற்கு தேர்வு செய்யபடுகின்றனர்.

B.A geography :

மூன்று ஆண்டுகளுடன் கூடிய பட்டப்படிப்புகளில் இதுவும் ஒன்று. புவிசார்ந்த அனைத்து தகவல்களையும் கொண்ட பட்டப்படிப்பாக இத் உள்ளது. Maps projection, Economic geography, Human geography , Physical geography போன்ற பாடப்பிரிவுகள் இந்த பட்டப்படிப்பில் அடங்கியுள்ளன.

இந்த பட்டப்படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் கண்டிப்பாக 12ம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. பட்டப்படிப்பினை முடித்த பிறகு மாணவர்களுக்கு தனியார் மற்றும் அரசு துறைகளில் வேலைக்கு விண்ணப்பித்து பெறலாம் . Cartographer, Demographer, Land analyst போன்ற வேலைகளை மாணவர்கள் எளிமையாக பெறலாம்.

B.A Psychology:

மேலே நீங்கள் பார்த்த பட்டப்படிப்பு வரிசைகளில் இதுவும் ஒன்று. மூன்று ஆண்டுகள் ஆறு செமஸ்டர்கள் கொண்ட பட்டப்படிப்பாக இதுவும் திகழ்கிறது. 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். பெரும்பாலான கல்லூரிகள் Entrance exam மூலமே இந்த படிப்பிற்கு மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.

இந்த படிப்பின் மூலம் மாணவர்கள் Human mind and human characterstics பற்றி படித்து தெரிந்துகொள்கின்றனர். மேலும் சில சமயங்களில் சிலரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் மாணவர்களுக்கு கற்று தரப்படுகிறது. இந்த படிப்பினை முடித்த மாணவர்களுக்கு educational institutions, hospitals, cooperate companies என பல இடங்களில் நல்ல ஊதியத்தில் வேலை வழங்கப்படுகிறது.

B.A Physical education (list of ba courses) :

பலருக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டு மீது ஆர்வம் இருந்து கொண்டே தான் இருக்கும். விளையாட்டு சார்ந்த படிப்புகள் அவர்களுகென உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று தான் இந்த பட்டப்படிப்பு. ஏனைய பட்டப்படிப்புகள் போலவே மூன்று ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்பாக இது உள்ளது.

இந்த படிப்பினை முடித்த பிறகு தனியார் மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. Physical teacher, athletic trainer, sports coach, என எண்ணற்ற வேலைவாய்ப்புகள் கொண்ட படிப்பாக இவை உள்ளது.

மேற்கண்ட bachelor of arts courses list பட்டங்கள் தவிர B.A  B.A வில் ஏராளமான பட்டப்படிப்புகள் குவிந்து கிடக்கின்றன. மேலே குறிப்பிடபட்டுள்ளது அதில் ஒரு சில பட்டப்படிப்புகள் மட்டுமே.

Spread the love
x