new business ideas in tamil: Best Business Ideas for Students..! படித்து கொண்டே பிசினஸ்..!
1 min readnew business ideas in tamil
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் படிக்கும்போது சம்பாரிக்கும் எண்ணம் கொண்டவர்களாகவும், திறமை கொண்டவர்களாகவும் மாறி வருகின்றனர். சிலர் பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டு சம்பாரித்து வருகின்றனர். மேலும் சிலர் குழுவாக இணைந்து அவர்களுக்கு தெரிந்த தொழிலை தொடங்கி சம்பாரித்து வருகின்றனர்.
பொதுவாக தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணினால் குறிப்பிட்ட சில தொழில்களையே பெரும்பாலும் தொடங்கி வருகின்றனர். உதாரணமாக உணவகம், பாஸ்ட் புட் ஷாப், பேக்கரி என இது போன்ற தொழில்களையே மாணவர்கள் தொடங்க ஆசைப்படுகின்றனர். ஆனால் இவை மட்டும் அல்லாமல் பல தொழில்கள் மாணவர்களுக்காக உள்ளன. அவை குறித்து இப்பதிவில் காணலாம்.
Blogging / Blogger :
இதில் முதலில் நாம் தெரிந்த கொள்ள இருப்பது பிளாகிங்க் பற்றி தான் . இப்போது நீங்கள் ஒரு குழுவாக இல்லாமல் தனியாக ஏதேனும் செய்ய வேண்டும். ஆனால் பிறரிடம் சென்று வேலை செய்ய நேரமில்லை. கிடைக்கும் நேரத்தில் நல்ல சம்பாரிக்க எண்ணினால் நீங்கள் Blogging என்ற தொழிலை தேர்ந்தெடுத்து செய்யலாம்.
உங்களுக்கு தெரிந்த விஷயங்களை, செய்திகளை, கருத்துக்களை பிளாகிங்க் மூலம் நீங்கள் தெரிவித்து அதன் மூலம் நீங்கல் பணம் ஈட்டலாம். எளிமையாக மூதலீடு அதிகம் இன்றி தொடங்கும் ஒரு தொழிலாக பிளாகிங்க் இருக்கும்.
Photographer (new business ideas in tamil) :
இதனை நீங்கள் ஒரு குழுவாக அல்லது தனியாக கூட செய்யலாம். போட்டோகிராபியில் பல வகைகள் உண்டு. Event Photography, Potrait Photography என பல வகைகள் உண்டு அதில் ஏதேனும் ஒன்றினை நீங்கள் தேர்ந்தெடுத்து ஈடுபடலாம். குறிப்பாக நீங்கள் போட்டோகிராபியில் நன்றாக தெரிந்தவர் என்றால் மட்டுமே நீங்கள் இதனை தேர்வு செய்ய வேண்டும்.
அதிக அளவில் Baby photoshoot, Couples photoshoot போன்றவற்றை தேர்வு செய்தால் எளிதாக குறிப்பிட்ட தொகையை நன்றாக சம்பாரிக்கலாம்.
Event organizer ( new business ideas in tamil) :
இந்த தொழிலையும் நீங்கள் ஒரு குழுவாக செய்தால் நன்றாக லாபம் ஈட்டலாம். முதலில் சிறிய அளவில் Birthday function போன்றவற்றிக்கு event management செய்து வந்து பின்பு பெரிய அளவில் செய்தால் நன்றாக சம்பாரிக்க முடியும். அதிகபடியான மக்களை ஈர்க்க சமூக வலைத்தளங்களில் உங்கள் தொழிலை பகிர்ந்து விளம்பரம் செய்ய வேண்டும். அதுவே இந்த தொழிலின் மூலதானமாகும்.
நீங்கள் பகிரும் உங்களின் முந்தைய Event களின் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவையே உங்களுக்கு நல்ல பெயரையும், வாடிக்கையாளர்களையும் பெற்று தரும்.
T-shirt Selling :
டி சர்ட் விற்பது இன்றைய காலத்தில் பலரால் செய்யபட்டு வருகிறது. சாதாரண டி சர்ட்கள் அல்லாமல் வித்தியாசமாக படங்களில் வரும் வசனங்களை அச்சடித்து அதில் டி சர்ட் தயாரித்து விற்பது நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
மேலும் Celebrities முகம் பதிக்கபட்டு டி சர்ட்களை விற்பதும் நன்றாக லாபத்தை தருகிறது. கேட்கும் போது டி சர்ட் விற்பது கடினமாக இருக்கும். தொழிலாக தொடங்க நிறைய முதலீடு வேண்டும் என்று எண்ணி அஞ்ச வேண்டும். இதற்கென பல நிறுவனங்கள் உள்ளன . அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் டி சர்ட் உங்கள் ரசனை கேற்ப வாங்கலாம் . பின்னர் அதனை நீங்கள் விற்று லாபத்தை ஈட்டலாம்.
Youtube ChanneL :
நீங்கள் ஒரு குழுவாக இருக்கீறிர்கள் என்றால், உங்களிடம் நல்ல Creative mind உள்ளது என்றால் கண்டிப்பாக யூடியுப் பக்கம் ஒன்றினை தொடங்கி, அதனை கொண்டு நீங்கள் சம்பாரிக்க தொடங்கலாம். வித்தியாசமான மற்றும் புதுமையான நிகழ்ச்சி அல்லது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றால் எளிதாக யூடியுபில் வெற்றி பெறலாம்.
ஆனால் எடுத்தவுடன் நீங்கள் அதில் சம்பாரிக்க முடியாது யூடியிப்பில் monetize ஆக சில வழிமுறைகள் உள்ளன . அவற்றை கடந்த பிறகே உங்களுக்கு யூடியுப் மூலம் வருமானம் வர தொடங்கும். ஆனால் தற்சமயத்தில் யூடியுப் வருமானம் தான் அதிக லாபம் தரும் ஒன்றாக உள்ளது. இது போன்ற business ideas tamil உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Courier Agencies :
Amazon, Flipkart போன்ற தளங்களுக்கு உங்கள் ஊரில் நீங்கள் ஒரு courier partner ஆக மாறி சம்பாரிக்கலாம். அதற்கு நீங்கள் அது போன்ற நிறுவனங்களின் Website களுக்கு சென்ற் அவர்கள் கேட்கும் படிவங்களை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அவர்கள் கூறும் வழிநெறிகளை பின்பற்றி அது போன்ற நிறுவனங்களுக்கு டெலிவரி பார்ட்னர் ஆகலாம்.