affiliate marketing in tamil..! எளிமையாக முதலீடு இன்றி வீட்டிலிருந்து சம்பாரிக்கலாம்..!

1 min read
affiliate marketing in tamil-vidiyarseithigal.com

affiliate marketing in tamil

இன்றைய உலகில் அதுவும் இது போன்ற கொரோனா காலங்களில் பலர் வேலையிழந்துள்ளனர். மேலும் சிலருக்கு சம்பளம் குறைப்பு போன்ற சம்பவங்கள் நிக்ழந்துள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்தோ அல்லது அவர்கள் வேலையில்லாமல் இருக்கும் நேரங்களில் Part time -ல் சம்பாரிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

பகுதி நேர வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன. அதில் ஒன்று தான் Affliliate marketing . மார்கெட்டிங்க் என்றாலே ஒரு பொருளை மற்றவர்களிடம் விற்பது அதில் பல வகைகள் உண்டு அப்படிபட்ட ஒரு வகை தான் அப்ளியேட் மார்கெடிங்க்.

Affliate marketing என்றால் என்ன?

இது ஒரு வகையான டிஜிட்டல் மார்கெட்டிங்க் வகை தான் . ஒரு நிறுவனம் அவர்கள் தயாரித்த பொருட்களை விற்க டீலர்களை நாடுவார்கள் அது போல தான் இது. இங்கு சற்று மாறுபட்டு நாம் டீலராக மாறி ஆன்லைனில் அவர்களது பொருட்களை விற்று கொடுத்தால் நமக்கு 5 முதல் 10 சதவீதம் வரை கமிஷனாக கிடைக்கபெறுகிறது.

உதராணமாக ஒரு நிறுவனத்தின் பொருளை நீங்கள் விற்று கொடுத்தால் உங்களுக்கு கமிஷனாக ரூ.100 கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம் . தற்போது அதே பொருளை உங்கள் மூலம் 10 பேர் வாங்கினால் உங்களுக்கு எளிதாக ரூ.1000 வரை கமிஷன் கிடைத்துவிடும்.

நீங்கள் விற்பனை செய்யும் பொருளுக்கு ஏற்ப உங்கள் கமிஷன் தொகை மாறுப்பட்டு கொண்டே இருக்கும்.

Affiliate marketing-ல் ஈடுபடுவது எப்படி ?

அப்ளியேட் மார்கெட்டிங்க் ஈடுபடுவது மிகவும் எளிமையான ஒன்று . பெரிதாக நாம் முதலீடு செய்ய வேண்டும் , பொருட்களை வாங்கி விற்க வேண்டும் என்று எந்த வித கஷ்டமும் இன்றி எளிமையாக நாம் மார்கெட்டிங்க் ஈடுபடலாம்.

அதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு அப்ளியேட் மார்கெட்டிங்க் தளத்தில் sign up செய்ய வேண்டும்.

affiliate marketing in tamil

affiliate marketing in tamil

பிறகு அவர்கள் தரும் பொருளின் லிங்கினை ஷேர் செய்து மார்கெட்டிங்க் செய்ய வேண்டும். பின்னர் அந்த பொருளின் லிங்கினை கிளிக் செய்து மக்கள் வாங்கினால் உங்களுக்கு ஒரு கமிஷனை அந்த நிறுவனம் அளிக்கும்.

புதிதாக அப்ளியேட் மார்கெட்டிங்யில் ஈடுபடுபவரா நீங்கள் ?

நீங்கள் புதிதாக அப்ளியேட் மார்கெட்டிங்கில் ஈடுபடுவரா கவலையே வேண்டாம் எளிதாக மார்கெட்டிங்க் செய்யலாம். நீங்கள் எளிதாக உங்கள் அப்ளியேட் மார்கெட்டிங்கை மக்களிடம் கொண்ட செல்ல பல வழிகள் உள்ளன . அவை Blogging, Youtube channel இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும் எளிமையாக செய்யலாம் .

புதிதாக பிளாக் ஒன்றினை தொடங்குகள் . அதில் நீங்கள் போடும் கடின உழைப்பு உங்கள் பிளாக்கினை நன்றாக வளர செய்யும். பிளாக் மூலம் உங்கள் பொருளை நன்றாக விளம்பரம் செய்து மக்களிடம் கொண்டு செல்லலாம் பிளாக் உருவாக்க அதிக முதலீடும் தேவையில்லை.

அதைபோல தான் யூடியுப் சேனலும் அதில் பதிவிடபடும் வீடியோக்கள் மூலம் உங்கள் பொருட்களுகான லிங்கிகை சேர் செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

பிளாக் மூலம் எப்படி பொருளை விற்பது ?

இப்போது நீங்கள் ஒரு பிளாக்கினை உருவாக்கிவிட்டீர்கள் உங்களிடம் அப்ளியேட் மார்க்கெட்டிங்க் செய்வதற்கான லிங்கும் உள்ளது . அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்கள் அப்ளியேட் மார்கெட்டிங்க் புரோகிராமில் எந்த பொருளுக்கு அதிகம் கமிஷன் கிடைக்கும் என்பதனை கண்டறியுங்கள் .

பின்னர் அந்த பொருள் குறித்து விரிவான விளக்கம் கொடுத்து ஏன் அந்த பொருளை வாங்க வேண்டும். அந்த பொருளினால் என்ன பயன் கிடைக்கும் என்பதனை விளக்கமாக எழுதுங்கள் . பின் அதில் அந்த பொருளின் விளம்பர லிங்கினை பதிவிடுங்கள் .

தற்போது அந்த லிங்கினை உங்களது சமூக வலைத்தளங்கள், மற்றும் வாட்ஸ் குரூப்கள் ஆகியவற்றில் பதிவிடுங்கள் . அந்த பதிவின் மூலம் லிங்கினை கிளிக் செய்து பொருட்கள் வாங்கினால் உங்களுக்கு கமிஷன் அதிகபடியாக கிடைக்கும்.

Youtube மூலம் விற்பது எப்படி ?

யூடியுப் மூலம் பொருளினை விற்பதும் எளிமையான ஒன்று தான் . பிளாகில் நீங்கள் எழுதுவீர்கள் அதற்கு பதிலாக அந்த பொருள் குறித்து நீங்கள் எளிமையாக புரியும் வண்ணம் பேசி வீடியோ ஒன்றினை பதிவிடுங்கள் . அதன் மூலம் யூடியுப் மூலம் நீங்கள் அந்த பொருளை பலரிடம் விற்பனை செய்யலாம்.

கூடுதல் பயன்:

இவை இரண்டின் மூலம் நீங்கள் செய்வதால் அப்ளியேட் மார்கெட்டிங்க் மூலம் மட்டுமின்றி நீங்கள் கூகுள் adsense மூலமாக எளிமையாக கூடுதல் வருமானத்தை ஈட்டலாம்.

ஒரு வேளை உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டால் அப்ளியேட் மார்கெட்டிங்க் குறித்து அதற்கு விளக்கம் அளிக்க சிறப்பு வகுப்புகள் நடத்தபடுகின்றன. 

Spread the love
x