telegram tips and tricks In Tamil..!

1 min read
telegram tips and tricks-vidiyarseithigal.com

telegram tips and tricks

வாட்ஸ் ஆப்பில் அறிவிக்கபட்ட Privacy policy மாறுதல் காரணமாக பலர் வாட்ஸ் ஆப்பில் இருந்து டெலிகிராமுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். கடந்த சில மாதங்களில் மட்டும் டெலிகிராம் பயனர்களின் எண்ணிக்கை கோடிக்களில் அதிகரித்துள்ளது.

பல வருடங்களாக வாட்ஸ் ஆப் உடன் போட்டி போட்டு வந்த டெலிகிராம் நிறுவனம் தற்போது அனைவராலும் அறியப்பட கூடிய செயலியாக மாறியுள்ளது. இப்படிபட்ட செயலியில் வாட்ஸ் ஆப்பில் இல்லாத பல தொழிநுட்பங்கள் உள்ளன. அவை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

Start Secret Chat:

வாட்ஸ் ஆப்பில் பெரும்பாலான பயனர்கள் விலகியதற்கு காரணம் அதன் பிரைவசி பாலிசியில் கொண்டுவரப்பட்ட மாற்றம் தான். ஆனால் டெலிகிராமோ பிரைவசிக்கு பலவிதங்களில் முன்னுரிமை அளித்து வருகிறது. அதில் ஒன்று தான் Secret chat option.

டெலிகிராமில் அனைத்து சாட்களும் cloud server-ல் சேமித்து வைக்கப்படுகிறது. பலமான பாதுகாப்பு அளிக்கபட்டாலும் சிறிய ஆபத்தும் உள்ளது. இப்படிபட்ட நிலையில் நீங்கள் டெலிகிராமில் ரகசியமாக பேச விரும்பும் நபர்களிடம் Secret chat mode-ல் பேசும்போதும் உங்கள் சாட் பலமாக பாதுக்காக்கபடுகிறது.

telegram tips and tricks

இந்த வகை சாட்களை மற்றொரு நபர் கூட Screenshot எடுக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பாக வைக்க முடியும். இதனை எப்படி செட் செய்ய வேண்டும் என்றால் உங்கள் டெலிகிராம் ஒபன் செய்த உடன் பென்சில் போன்ற பட்டன் கீழே காட்டும், அதனை கிளிக் செய்த Start New secret chat என்ற option இருக்கும் .

அதனை கிளிக் செய்து எந்த நபருடன் Secret chat செய்ய விரும்புகிறீர்க்ளோ அவர்களை கிளிக் செய்து ஒகே கொடுக்கவேண்டும்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

Edit sent messages:

வாட்ஸ் ஆப் அல்லது பிற சமூக வலைத்தளங்களில் நாம் அனுப்பும் மெசேஜ் தவறனால் நாம் அதனை டெலிட் செய்துவிட்டு பிறகு மீண்டும் அணுப்ப வேண்டும். ஆனால் டெலிகிராமில் நமக்கு அந்த குறை இல்லை. ஒருவேளை எதிர்ப்பாரா விதமாக நாம் அனுப்பும் மெசேஜ் தவறாகி போனால் நாம் அதனை Edit செய்து மீண்டும் அனுப்பலாம்.

telegram tips and tricks

telegram tips and tricks

எப்படி நாம் edit செய்ய வேண்டும் என்றால் நாம் அனுப்பிய மெசேஜினை முதலில் க்ளிக் செய்ய வேண்டும் . அப்படி செய்த பின் நிறைய Option கள் காட்டும் அதில் Edit என்ற Option இருக்கும். அதன் மூலம் நாம் தவறாக அனுப்பிய மெசெஜினை எடிட் செய்து கொள்ளலாம். ஆனால் இதில் உள்ள ஒரு சிரமம் என்னவென்றால் அந்த நாம் Edit செய்தோம் என்பதை Edited என காட்டும்.

Silent Messages sending:

பொதுவாக நாம் மெசேஜ் என்ற ஒன்று அனுப்பினாலே Notification சத்தம் கேட்கும். ஒருவேளை நாம் செல்போனை Silent or vibration mode ல் வைத்தால் மட்டுமே சத்தம் கேட்காமல் இருக்கும். சத்தம் கேட்கும் என்பதற்காக நாம் Silent ல் நாள் முழுவதும் வைத்திருக்க முடியாது. அதற்காக தான் டெலிகிராமில் send silent message என்ற Option கொண்டுவரப்பட்டுள்ளது.

telegram tips and tricks-vidiyarseithigal.com

telegram tips and tricks

இதன் மூலம் நாம் அனுப்பும் Secret message மற்றவர்களுக்கு தெரியாத வகையில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு அனுப்பலாம். எப்படி நாம் Silent message கள் அணுப்ப வேண்டும் என்றால் நாம் யாருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு தேவையான மெசேஜினை டைப் செய்து கொள்ள வேண்டும்.

மெசேஜ் டைப் செய்த உடன் நாம் உடனடியாக Send கொடுத்துவிடுவோம் ஆனால் அப்படி கொடுக்காமல் அதனை PRESS and HOLD the send button அப்படி செய்யும் போது நமக்கு சில Option கள் காட்டும் அதில் Send without sound என்று இருக்கும் அதனை பயன்படுத்தி நாம் silent message களை அனுப்பலாம்.

Message Scheduling:

நாம் அனுப்பும் மெசேஜ்கள் எந்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதனை நாம் உறுதி செய்யும் வகையில் டெலிகிராமில் ஒரு Option கொடுக்கபட்டுள்ளது. அதன் மூலம் நாம் wishes போன்ற மெசேஜ்களை குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப முடியும்.

உதரணமாக நாம் முக்கிய வேலை ஒன்றில் இருப்போம் ஆனால் அந்த நேரத்தில் மற்றவர்களுக்கு நாம் Wish செய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்ட வேலையை ஞாபகப்படுத்த வேண்டும் என்றால் நாம் Scheduling message மூலம் எளிதாக செய்யலாம்.

இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று பார்த்தால் முதலில் நீங்கள் யாருக்கு என்ன மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அதனை டைப் செய்து கொள்ளுங்கள் பின்னர் Send option ஐ press and hold செய்தால் நமக்கு சில option கள் காட்டும் அதில் Schedule message என்ற option இருக்கும் . அதன் மூலம் நாம் எளிதாக நாம் அனுப்பும் மெசேஜினை schedule செய்யலாம்.

Spread the love
x