best web series: WEBSERIES பிரியரா நீங்க..! கண்டிப்பா பார்க்க வேண்டிய வெப் சீரிஸ்கள்..!

1 min read
best web series-vidiyarseithigal.com

best web series

சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் வரும் தொடர்களை நாம் நாடகம் என்று அழைத்து வந்தோம். திரையரங்குகளில் ஒளிப்பரப்பாகும் பட்ஜெட் அளவில் நாடகங்கள் அப்போது வரவில்லை. குறைவான பட்ஜெட்டில் எடுக்கபட்டு வந்தன.

பின்னர் காலம் செல்ல செல்ல பல ஆன்லைன் Streaming தளங்கள் வர தொடங்கின. அப்படியாக வந்த தளங்களில் எடுக்கபட்டு வரும் series கள் பலரிடையே நல்ல வரவேற்ப்பை வெற்று வருகின்றன. திரைப்படங்களுக்கு நிகரான கிராபிக்ஸ் காட்சிகள், ஒளிப்பதிவு என Web Series கள் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

அப்படி மிக பிரம்மாண்டமாக மாறுபட்ட கதையை கொண்டு உருவாக்கபட்ட சில வெப்சிரீஸ்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

The 100:

மிகவும் மாறுபட்ட கதைகளம் விறுவிறுப்பான காட்சிகள் என சலிப்புதட்டாமல் இந்த வெப்சிரிஸ் உள்ளது. Elysa Taylor, Bob Marley என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த வெப்சிரீஸில் நடித்துள்ளனர். மொத்தமாக 7 சீசனாக இந்த வெப்சிரீஸ் வெளிவந்துள்ளது.

காதல், சண்டை, அன்பு என அனைத்தும் கலந்த ஒரு கமர்சியல் மற்றும் Scientific வெப் சிரிஸ் என்றே சொல்லலாம். கதிர்வீச்சு காரணமாக உலகம் அழிகிறது வாழ தகுதியற்றதாக இருக்கும் பூழிக்கு விண்ணில் இருந்து 100 இளைஞர்கள் வருகின்றனர்.

best web series

அவர்கள் எவ்வாறு உயிர்பிழைக்கின்றனர் பூழி வாழ தகுதியுடையதா போன்ற சவால்களை எதிர்த்து அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது கதையாகும். மிகவும் மாறுபட்ட முறையில் இந்த வெப் சிரிஸ் வெளியாகி உள்ளது. சற்றும் சலிக்காத வண்ணம் உருவாக்கபட்டுள்ளது.

Snowpiercer:

இதுவும் ஒரு வகையான Science Fiction கதைக்களம் ஆகும் . உலகம் கடுமையான குளிர்ச்சியால் பாதிப்பட்டு உறைந்து விடுகிறது. அப்படி அனைத்தும் உறையும் நிலையில் ஒரு நீளமான ரயில் பெட்டியில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் உள்ளனர். அனைத்து விதமான அந்த ரயில்பெட்டிகளில் உள்ள அந்தஸ்து வேறுபாட்டை எப்படி முறியடித்து மக்கள் அதில் வாழ்கின்றனர் என்பதும் மேலும் பூமி மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புமா என்பதும் சுருக்கமான கதையாகும்.

best web series

இதுவரை இரண்டு சீசன்கள் இந்த வெப்சீரிஸில் வெளிவந்துள்ளது. Jennifer connely, sean bean என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த வெப்சிரிஸில் நடித்துள்ளனர். ஒரு பக்கம் உலகம் அழியும் நிலையில் உள்ளது . மறுபக்கம் ஏற்பட்ட அதிகார சண்டை என விறுவிறுப்பாக கதையை நகர்த்தி உள்ளனர்.

கடைசியாக முடிந்த சீசன் 2 தொடர்ச்சி விரைவில் வெளியாகும் என பல ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கபட்டு வருகிறது.

LOST IN SPACE :

பெரும்பாலான படங்கள் விண்வெளி மற்றும் ஆரர் போன்ற வடிவிங்களில் தான் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி வெளி வந்த series தான் Lost in Space . பூமியில் இருந்து வேறு ஒரு கிரகத்திற்கு colony அமைப்பதற்கான ஒரு குழு அனுப்பி வைக்கபடுகிறது. அந்த குழுவில் பல குடும்பங்கள் இருக்கின்றனர்.

best web seriesbest web series

இந்நிலையில் அவர்கள் செல்லும் வழியில் எதிர்பாராமல் விபத்து ஏற்படுகிறது . அந்த விபத்தில் இருந்து அவர்கள் எவ்வாறு தப்பிக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்தது யார் போன்ற ஆச்சரியங்கள் நிறைந்த கதையாக திரையில் வருகிறது. நேர்த்தியான கிராபிக்ஸ், ஒளிப்பதிவு என பிரம்மிப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த வெப் சிரீஸ் உள்ளது.

இதுவரை இரண்டு சீசன்கள் வெளிவந்துள்ள நிலையில் அடுத்த சீசன் விரைவில் வெளி வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

Sex Education:

பலருக்கு தெரிந்த வெப் சிரீஸாக தான் இது இருக்கும். பலரும் இதன் பெயரை வைத்து தவறாக எண்ணிவிடுகின்றனர். ஆனால் பாலியல் கல்வி முக்கியத்துவம் குறித்தும், பருவ காலத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஏற்படும் உறவு காதலா? காமமா? என்பதனை இந்த வெப் சிரிஸ் அழகாக காட்டி இருக்கும்.

காதல் காட்சிகளுக்கு சற்றும் பஞ்சம் இல்லாமல் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் வகையில் நேர்த்தியாக உருவாக்கபட்டுள்ளது. இதுவரை இரண்டு சீசன்கள் வந்துள்ள நிலையில் கோவிட் காரணமாக மூன்றாவது சீசன் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

best web seriesbest web series

மூன்றாவது சீசனுக்காக பலரும் ஆவலுடன் காத்திருக்கும் எதிர்ப்பார்ப்பை கடைசி இரண்டு சீசன்கள் உருவாக்கி உள்ளன.

மேலே நீங்கள் படித்த வெப் சிரிஸ்கள் அனைத்து சற்றும் சலிக்காத வண்ணம் திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு வெப் சிரிஸ் பிரியர் என்றால் கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டியவை ஆகும். எந்த ஒரு இடத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த வெப்சிரிஸ்கள் உருவாக்கபட்டுள்ளன.

Spread the love
x