best mobiles under 15000 ..! ஏப்ரல் மாத சிறந்த மொபைல்கள் …!
1 min readbest mobiles under 15000
இன்றைய காலகட்டத்தில் மாதம்தோறும் குறைந்தது 20 முதல் 30 புது மாடல் செல்போன்கள் அனைத்து வித பிராண்டுகளையும் சேர்த்து வந்து கொண்டிருக்கின்றன. முன்பு போல் இல்லாமல் தற்போது சிறந்த மொபைல்கள் குறைந்த விலையில் அனைத்து பிராண்டுகளும் போட்டி போட்டு வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த மாதத்திற்கான அதாவது ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த smart phones -கள் 15 ஆயிரம் பட்ஜெட் விலையில் என்னவெல்லாம் இருக்கின்றது என்பதை இந்த பதிவில் காணலாம்.
Redmi note 10:
இந்த பட்ஜெட்டில் நாம் முதலில் காண இருப்பது Redmi note 10 ஆகும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய சந்தையில் ரெட்மி சிறந்த ஸ்மார்ட்போன்களாக மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஆண்ட்ராய்ட் 11 கொண்டு இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வருகிறது.
best mobiles under 15000
இதில் Rear camera 48 MP + 8 MP + 2 MP + 2 MP Front Camera 13MP உள்ளது. மேலும் 6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 668 பிராஸசர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இதில் முக்கிய அம்சமாக பார்க்கபடுவது இதன் டிஸ்பிளே 6.53 இன்ச் சூப்பர் Amoled டிஸ்பிளே இதில் உள்ளது . இதன் பேட்டரி திறன் 5000 mah ஆக உள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை 13,999 ஆகும்.
Xiomi POCO M3:
ரெட்மி அடுத்த்படியாக இந்திய சந்தையில் குறுகிய காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்ட ஸ்மார்ட்போன் என்றால் அது போகோவாக தான் இருக்க முடியும். இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை போக்கோ நிறுவனம் பெற்றுள்ளது. குறைவான விலையில் நிறைந்த Specifications -களுடம் ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது.
சமீபத்தில் வெளியான Poco M3 மிக குறைந்த விலையில் அதிகபடியான திறன்களுடன் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்ட் 10 உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளி வந்துள்ளது. இதில் 48 MP + 2MP + 2MP என்ற அளவில் ரியர் கேமராவும், 8MP அளவில் Front cameraவும் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 662 கீழ் இயங்குகிறது. இதில் 6ஜிபி மாடல் முதல் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக பார்க்கபடுவது இதன் பேட்டரி திறன் ஆகும் 6000 Mah அளவில் மிகப்பெரிய பேட்டரி கொடுக்கபட்டுள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை 12,282 ஆக உள்ளது.
Realme Narzo 20 pro :
அடுத்தபடிய சமீபத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ரியல்மீ சிரீஸ் குறித்து பார்ப்போம். கடந்த சில நாட்களில் அதிகபடியான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் வெளியிட்டது ரியல்மீ நிறுவனம் தான். குறைந்தது மாதம் 15 மாடல்கள் வரை ரியல்மீ வெளியிட்டு வருகிறது. Realme Narzo சிரீஸின் முக்கிய குறைந்த விலை ஸ்மார்ட்போன் தான் Narzo20 pro . இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 10 கீழ் இயங்குகிறது. இதில் 48MP+8MP+2MP+2MP rear camera P rear camera உள்ளது. மேலும் 16MP Front camera உள்ளது.
பேட்டரி திறன் 4500 ஆகும் Helio G95 எனும் பிராஸசர் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தபட்டு வருகிறது. LCD டிஸ்பிளே, 90hz refreshrate என பல சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
Samsung Galaxy M12:
இந்திய சந்தையில் பல ஆண்டுகளாக வலம் வரும் சிறந்த samsung smartphone உள்ளது. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சாம்சங்க் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் குறைந்த விலையில் இந்தியாவில் வெளியான சாம்சங்க் ஸ்மார்ட்போன் தான் M12.
இதில் ஆண்ட்ராய்ட் 11 வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 48MP + 5MP+ 2MP+ 2MP rear cameraவும் , 8MP front cameraவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் exynos 8 octo 850 பிராஸசர் மூலம் இயங்குகிறது. கூடுதல் சிறப்பம்சமாக இதில் இருப்பது 6000 mah பேட்டரி திறன் ஆகும். இந்திய சந்தையில் இதன் விலை 10,499 ஆகும்.
மேலே குறிப்பிடபட்டுள்ள மாடல்கள் குறைந்த பட்ஜெட்டில் இருக்கும் நம்பிக்கையான ஸ்மார்ட்போன்களாகும். இவை மட்டுமல்லாமல் பல ஸ்மார்ட்போன்கள் 15 ஆயிரத்திற்கு குறைவாக உள்ளன. ஆனால் அவற்றை ஒப்பிடுகையில் இந்த ஸ்மார்ட்போன்கள் அந்த பட்ஜெட்குள் சிறந்ததாக உள்ளன.