best helmets: அடேங்கப்பா Helmet -ல இத்தனை Variety இருக்கா..! இத படிச்சுட்டு Helmet வாங்குங்க..! 3 Best Helmets to Wear..!

1 min read
best helmets- vidiyarseithigal.com

best helmets:

வாகனங்களில் செல்லும் அனைவரும் Helmet அணிந்து செல்வது நன்மையை பயக்கும் விஷயமாக உள்ளது. எதிர்பார விபத்து ஏற்படும் போது Helmet அணிவது நம் உயிரை காக்கும் செயலாக உள்ளது. நாம் வெளியூர் பயணம் மேற்கொண்டாலும் சரி, அல்லது உள்ளூரிலே எங்கேயும் செல்ல வேண்டுமானாலும் சரி ஹெல்மட் அணிய வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.

நாம் அணியும் helmet-களில் பல வகைகளும், பலவிதமான தரத்திலும் உள்ளன. Helmet-களில் மூன்று முக்கிய வகைகள் உண்டு . அவை

Full Face Helmet :

best helmets
full face helmets

இந்த வகை ஹெல்மட்கள் வாகனம் ஒட்டுபவரின் முழு தலையையும் மூடிவிடுகிறது. இதன் மூலம் வாகன ஒட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பு தன்மையை இந்த வகை ஹெல்மட்கள் வழங்குகின்றன.

Half Face Helmet:

best helmets
half face helmets

இந்த வகை ஹெல்மட்கள் வாகன ஒட்டிகளின்  முகத்தை மூடுவது இல்லை. தலையை மட்டுமே முழுமையாக மூடுகிறது. முகத்திற்கு வைசர் ஒன்று அளிக்கபடுகிறது . அது நமக்கு சிறந்த பார்வையினை வழங்குகிறது.

Flip up Helmet :

best helmets
flip up helmets

இது போன்ற ஹெல்மட்கள் Full face helmet போன்றும், Half face helmet போன்றும் பயப்படுத்தபடுகின்றன. நமக்கு ஏற்றால் போல இந்த ஹெல்மெடினை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். நகரப்பகுதிகளில் பயணிக்கும் போது அல்லது நெடுச்சாலைகளில் பயணிக்கும் போது அதற்கு ஏற்றது போல மாற்றி அமைத்துக் கொள்ளலாம்

இந்த ஹெல்மெட்டில் மொத்தம் 4 வகை உள்ளது.

Half shell helmet:

best helmets
half shell helmets

இந்த வகை ஹெல்மெட்கள் பயன்படுத்த உரிய நேரம் சைக்கிளில் செல்லும் போது தான் ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை இரு சக்கர மோட்டார் வாகனம் ஒட்டும் போது பயன்படுத்துகின்றனர். இந்த வகை ஹெல்மெட்கள் விபத்து முழு பாதுகாப்பு அளிப்பதில்லை.

Off road helmet:

best helmets
off road helmets

ஆப் ரோடிங்க் அதாவது புழுதி நிறைந்த சாலைகளில் செல்லும் போது இந்த வகை ஹெல்மெட்கள் பயன்படுத்த சிறந்ததாக உள்ளன.

On road helmet;

best helmets
on road helmets

இந்த வகை ஹெல்மெட்கள் சாலைகளில் செல்லும் போது பயன்படுத்த மிகுந்த நம்பிக்கை உள்ளவை. சிறந்த பார்வை அளிக்க கூடிய வைசர் அமைந்துள்ளது. மேலும் உட்புற காற்றோட்டம் இந்த வகை ஹெல்மெட்களில் அதிகம் கிடைக்கின்றன.

Dual Sport helmet:

best helmets
dual sports helmets

இந்த வகை ஹெல்மெட்கள் On road மற்றும் Off road இரண்டிலும் பயன்படுத்த ஏதுவாக உள்ளது.

Things to consider before buying helmet:

Helmet வாங்குவதற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் சில இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன அவை.

Certification ( தரச் சான்றிதழ் )

Shape and size ( ஹெல்மெட் உடைய வடிவம் மற்றும் அளவு)

Visor( ஹெல்மெட்டில் உள்ள முன்புற கண்ணாடி)

Better cushioning ( ஹெல்மெட்டில் உள்ள குஷன் திறன்)

Ventilation ( காற்று செல்லும் வசதி)

Material ( பயன்படுத்திய பொருள் ஹெல்மெட் தயாரிக்க)

Weight ( எடை)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் சரிபார்த்த பின்பு தான் நாம் ஹெல்மெட்களை வாங்க வேண்டும். இதனை செக் செய்து வாங்கினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

3 Best Helmets to buy:

Vega crux HE1284 full face helmet:

மக்கள் அதிகம் விரும்பும் ஹெல்மெட்களில் இந்த ஹெல்மெட் முதன்மையானதாக உள்ளது. இதில் உள்ள Silent Strap Lock ஹெல்மெட்டினை நன்றாக நாம் அணிந்த உடன் பிடித்து கொள்ள செய்கிறது. இதனை Open face ஹெல்மெட்டாக பயன்படுத்த முடியும். இதில் உட்புறத்தில் பயன்படுத்தபட்டுள்ள Foam நாம் இதனை பயன்படுத்தும் போது கழுத்து வலி வராமல் குறைக்கிறது. இந்த வகை ஹெல்மெட்கள் அதிக விறபனையாக மற்றோரு காரணம் இதன் விலை ரூ.1028 மட்டுமே .

இதில் உள்ள முக்கிய அம்சங்கள் Lightweight, silent strap lock, ISI approved, contains ABS shell  ஆகும் . ஆனால் இதில் உள்ள குறையாக பார்க்கபடுவது Visor மட்டுமே.

Steel bird R2K full face graphics Helmet:

நீங்கள் ரூபாய் 2000 பட்ஜெட்டில் சிறந்த ஹெல்மெட் வாங்க விரும்பினால் இந்த ஹெல்மெட் சிறந்த ஒன்றாக இருக்கும். வாகன் ஒட்டிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிறந்த ஹெல்மெட்டாக இந்த வகை ஹெல்மெட் உள்ளது. இதில் உள்ள சிறந்த காற்றோட்ட முறை வாகன ஒட்டிகளுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. அனைத்து வயது தரப்பிரனரும் விரும்பும் வகையில் இந்த ஹெல்மெட் வடிவமைக்கபட்டுள்ளது.

இதனுடைய சிறப்பம்சங்களாக பார்க்கபடுவது Good fiiting in head, bulid quality, built for everyday riders. Cushion fitting ஆகியவை ஆகும் . ஆனால் இதில் உள்ள ஒற்றை குறைப்பாடு என்னவென்று பார்த்தால் இதனுடைய எடை ஆகும்.

Vega verve open face helmet ( best for ladies)

பெண்களுக்கான ஹெல்மெட் என்று வருகையில் நம்பர் ஒன் ஹெல்மெட்டாக பார்க்கப்படுவது இந்த ஹெல்மெட் ஆகும். 12 வகையான வண்ணங்களில் இந்த ஹெல்மெட் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் உள்ள கழற்றி மாற்றி உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. மேலும் இதில் உள்ள Foam பகுதியை நாம் மாற்றி நமக்கு ஏற்ற இடத்தில் வைத்துக்கொள்ள முடியும்.

இந்த ஹெல்மெட் உடைய சிறப்பம்சங்களாக பார்க்கபடுவது Light weight, ponytail space, silent strap lock ஆகும். ஆனால் இதில் உள்ள குறைபாடாக பார்க்கப்படுவது surface rough ஆகும் .

Spread the love
x