youtube channel tips tamil: யூடியுப் சேனல் வச்சி இருக்கீங்களா..! உங்களுக்கான Top 3 Best Contents ideas..!

1 min read
youtube channel tips tamil-vidiyarseithigal.com

youtube channel tips tamil

youtube channel tips tamil

இன்றைய உலகில் அனைத்து தரப்பு மக்களிடமும் ஸ்மார்ட்போன் மிக அதிகமாக புழக்கத்தில் உள்ளது. அதிலும் ஸ்மார்ட்போன்களில் உள்ள youtube செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில்  லட்சக்கணக்கான மக்கள் வீடியோக்களை பதிவேற்றி பணம் சம்பாரித்து வருகின்றனர்.

Youtube சிறு விளக்கம்:

யூடியுப் சேனல்கள் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் யூடியுப் மூலம் பணம் ஈட்ட வழியை உருவாக்கினர். யூடியுப் வீடியோக்கள் ஒளிப்பரப்பாகும் போது வரும் விளம்பரங்கள் மூலம் நாம் அதில் பணத்தை ஈட்டுகிறோம். 10 ஆயிரம் பார்வையாளர்கள் ஒரு குறிபிட்ட வீடியோவை பார்க்கும் போது நமக்கு குறிப்பிட்ட தொகை அளிக்கப்படுகிறது. இவ்வாறு தான் யூடியுப் மூலம் பணம் ஈட்ட முடிகிறது.

Youtube Content தேர்வு முறை:

பொதுவாக நாம் அனைவரும் Technology, Food vlog, Travel Vlog போன்ற வீடியோக்களை அதிகமாக செய்யவே முயற்சிக்கிறோம். ஆனால் அதனையும் தாண்டி பல வீடியோக்கள் எளிதாக உருவாக்கி நாம் பயன்பெறலாம். டெக் வீடியோக்கள் போன்ற வீடியோக்களை நாம் தயார் செய்ய கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டும்.

Food vlog, Travel Vlog போன்ற வீடியோக்களுக்கு நாம் பொருட்செலவு செய்ய வேண்டும். ஆனால் நமக்கு செலவு இல்லாமல் வீட்யோக்களை நாம் உருவாக்கி பயன்பெறலாம். மேலும் அனைவரும் பயன்படுத்தும் வீடியோக்களை நாமும் பயன்படுத்தாமல் வித்தியாசமாக முயற்சிக்கும் போது நமக்கு அதிக Views எளிதில் கிடைத்துவிடும்.

Reels video collage:

நம் பெரும்பாலான யூடியுப் வீடியோக்களில் பார்த்திருப்போம் சினிமா பிரபலங்களின் Dubsmash அல்லது Reels வீடியோக்களை ஒன்று சேர்த்து ஒரு வீடியோவாக உருவாக்கி இருப்பர். பின்னர் அந்த வீடியோவிற்கு ஏற்றால் போல பின்னனி இசை அமைத்து அதனை யூடியுப் சேனல்களில் பதிவேற்றி இருப்பர்.

youtube channel tips tamil
youtube channel tips tamil

இது ஒரு வகையான பொழுதுபோக்கு அம்சம் கொண்ட சேனல்களின் வீடியோக்களை கையாளும் விதமாக உள்ளது. பின்னர் அந்த வீடியோவிற்கு ஏற்றால் போல் Thumbnail வைத்து வீடியோவை வெளியிட்டு இருப்பர்.

Funny Videos collage:

நிறைய யூடியுப் தளங்களில் நாம் Funny வீடியோக்களை பார்த்திருப்போம். பெரும்பாலான மக்கள் பொழுதுபோக்கு அம்சத்திற்காக யூடியுப் தளத்திற்கு வருகின்றனர். அவர்களை கவர கூடிய ஒன்றாக Funny வீடியோக்கள் உள்ளன. பிற சமூகவலைத்தளங்களில் உள்ள Funny வீடியோக்களை ஒன்று திரட்டி பின்னர் அதனை எடிட் செய்து நாம் ஒரு வீடியோவாக உருவாக்கி யூடியுப் தளத்தில் பதிவேற்றலாம். மேலும் அதற்கு உரிய Thumbnail பயன்படுத்தும் பட்சத்தில் அதிகபடியான பார்வையாளர்களை நாம் கவர முடியும்.

Cinema News: 

Cinema செய்திகளுக்கு என பல யூடியுப் சேனல்கள் உள்ளன. அந்த       சேனல்களின் பதிவேற்றப்படும் சினிமா குறித்த செய்திகளை மக்கள் விரும்பி பார்க்கின்றனர். மேலும் சினிமா கிசுகிசு போன்ற செய்திகளை மக்கள் விரும்பி பார்க்கின்றனர். நீங்கள் யோசிக்கலாம் நாம் எப்படி சினிமா செய்திகளை தேடுவது , எங்கு இருந்து எடுப்பது போன்று.

ஆனால் நீங்கள் நினைப்பதை விட சினிமா செய்திகளை எடுப்பது மிகச்சுலபம். நீங்கள் படிக்கும் செய்திதாள்கள் அல்லது ஆன்லைன் செய்தி தளங்களில் இருந்து உங்களுக்கு ஏற்றது போல சில வார்த்தைகளை மாற்றி அமைத்து சினிமா செய்திகளை நீங்கள் பெற்று கொண்டு பின்னர் அதற்கு ஏற்றது போல வீடியோ அல்லது புகைப்படத்தை பயன்படுத்து அந்த வீட்யோவிற்கு ஏற்றால் போல Voice Over செய்து நீங்கள் வீடியோவை பதிவேற்றலாம்.

Spread the love
x