youtube earnings-ல் நிரந்தர வருமானம்..! உங்கள் திறமையே மூலதனம்..!

1 min read
youtube earnings-vidiyarseithigal.com

youtube earnings

youtube earnings

இன்றைய உலகில் அனைத்து தரப்பு மக்களிடமும் ஸ்மார்ட்போன் மிக அதிகமாக புழக்கத்தில் உள்ளது. அதிலும் ஸ்மார்ட்போன்களில் உள்ள youtube செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில்  லட்சக்கணக்கான மக்கள் வீடியோக்களை பதிவேற்றி பணம் சம்பாரித்து வருகின்றனர்.

Youtube சிறு விளக்கம்:

யூடியுப் சேனல்கள் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் யூடியுப் மூலம் பணம் ஈட்ட வழியை உருவாக்கினர். யூடியுப் வீடியோக்கள் ஒளிப்பரப்பாகும் போது வரும் விளம்பரங்கள் மூலம் நாம் அதில் பணத்தை ஈட்டுகிறோம். 10 ஆயிரம் பார்வையாளர்கள் ஒரு குறிபிட்ட வீடியோவை பார்க்கும் போது நமக்கு குறிப்பிட்ட தொகை அளிக்கப்படுகிறது. இவ்வாறு தான் யூடியுப் மூலம் பணம் ஈட்ட முடிகிறது.

Youtube சேனல் தொடங்குவது எப்படி ?

முதலில் யூடியுப் சேனல் தொடங்க வேண்டுமென்றால் நாம் ஒரு  E-mail Id யை தொடங்க வேண்டும். நாம் எப்போதும் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தாமல் புதிதாக ஒரு முகவரியை பயன்படுத்த வேண்டும்.  பின் நமது சேனலுக்கான பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நாம் தேர்ந்தெடுக்கும் பெயர் அனைவரையும் கவர கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். மேலும் நமது யூடியுப் பக்கத்திற்கு என்று தனி ஒரு Logo வை உருவாக்க வேண்டும் அல்லது நமது புகைப்படத்தை கூட லோகோவாக பயன்படுத்தலாம். இருப்பினும் தனி லோகோ என்பது அதிக ஈர்க்க கூடிய ஒன்றாக இருக்கும்.

Youtube Content தேர்வு முறை:

பொதுவாக நாம் அனைவரும் Technology, Food vlog, Travel Vlog போன்ற வீடியோக்களை அதிகமாக செய்யவே முயற்சிக்கிறோம். ஆனால் அதனையும் தாண்டி பல வீடியோக்கள் எளிதாக உருவாக்கி நாம் பயன்பெறலாம். டெக் வீடியோக்கள் போன்ற வீடியோக்களை நாம் தயார் செய்ய கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டும்.

Food vlog, Travel Vlog போன்ற வீடியோக்களுக்கு நாம் பொருட்செலவு செய்ய வேண்டும். ஆனால் நமக்கு செலவு இல்லாமல் வீட்யோக்களை நாம் உருவாக்கி பயன்பெறலாம். மேலும் அனைவரும் பயன்படுத்தும் வீடியோக்களை நாமும் பயன்படுத்தாமல் வித்தியாசமாக முயற்சிக்கும் போது நமக்கு அதிக Views எளிதில் கிடைத்துவிடும்.

Youtube Monitization முறை:

நாம் அதிகபடியான வீடியோக்களை பகிர்ந்து கொண்டே இருந்தால் பார்வையாளர்கள் அதிகபடியாக வந்துக்கொண்டே இருப்பார்கள். இருப்பினும் நாம் போகிற போக்கில் ஒரு வீடியோ ஒன்றினை பதிவேற்றி விட கூடாது. நாம் பதிவேற்றும் வீடியோ மூலம் என்ன பயன்? எந்த வகை Viewers கள் அந்த வீடியோக்களை அதிகம் பார்ப்பார்கள் என அனைத்தையும் சிந்தித்து பதிவேற்ற வேண்டும்.

youtube earnings
youtube earnings

இப்படி செய்து கொண்டு வந்தால் ஒரு கட்டத்தில் நாம் அதிகபடியான Subscribers களை பெற்று விடலாம். Youtube விதிமுறை படி  1000 subscribers மற்றும் 4000 watch hours நாம் அடைந்த பிறகே நமக்கு Monetize அதாவது வருமானம் ஈட்ட வழி பிறக்கும். இந்த இலக்கினை ஒரு சிலர் வாரக்கணக்கிலும், ஒரு சிலர் வருடக்கணக்கிலும் அடைகின்றனர்.

ஆனால் நீங்கள் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு அழகிய வீடியோவிற்கும் நீங்கள் எளிதில் அடைந்துவிடலாம் அந்த இலக்கினை.

திறமை மட்டுமே:

Youtube வருமானம் என்பது முழுக்க முழுக்க உங்கள் Creativity திறனை சார்ந்ததாக உள்ளது. நீங்கள் யோசிக்கும் வித்தியாசமான முறை உங்களை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்கிறது. யூடியுப் வருமானம் என்பது உங்கள் இதர வருமானம் போன்றதாகும். உதாரணமாக நீங்கள் வேறு ஒரு இடத்தில் பணி புரிந்து கொண்டு இருப்பவராக இருக்கலாம்.

உங்களுக்கு அந்த வருமானம் பற்றாக்குறையாக இருக்கலாம். அதனை ஈடுகட்ட நீங்கள் மீண்டும் கடினமாக உழைக்காமல் எளிதாக வருமானம் ஈட்ட சிறந்த வழியாக யூடியுப் உள்ளது. இதில் நீங்கள் வெற்றி பெற பொறுமையும், திறமையும் இருந்தால் மட்டுமே போதும்.

Spread the love
x