லெஜண்ட் சரவணா நடிக்கும் படத்தில் இவங்கதான் ஹீரோயினா..! வாயை பிளக்கும் ரசிகர்கள்…!

1 min read
cinemanews-vidiyarseithigal.com

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜண்ட் சரவணன் அருள் தற்போது திரைத்துறையில் அடியெடுத்து வைத்து படம் ஒன்றினை நடித்து வருகிறார். சுமார் 200 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தினை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கி வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு கதாநாயகி யார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், இப்படத்திற்கு பிரபல பாலிவுட் கதாநாயகி ஊர்வசி ரவுட்டாலா நடிக்கிறார் என்பது உறுதி செய்யபட்டுள்ளது.

மேலும் அவர் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிவிக்கபட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் இப்படம் எடுக்கபட்டு வருகிறது. விரைவில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது.

Spread the love
x