13 ஆண்டுகளாக முடி வெட்டவில்லை: இறுதியில் இப்படி ஆயிடுச்சே..!

1 min read
hair-vidiyarseithigal.com

பொதுவாக காவியங்கள் மற்றும் காப்பியங்களில் 6 அடி கூந்தல் உடைய பெண் என உவமை பொருத்து கூறுவர். பெண்களின் அலங்காரங்களில் ஒன்றாக சிகை அலங்காரம் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு வெளியான டாங்கில்டு எனும் கார்ட்டூன் படத்தில் கூட கதாநாயகிக்கு நீளமான கூந்தல் இருப்பது போல காட்சிப்படுத்தி இருப்பர்.

இந்நிலையில் ஜப்பானில் 35 வயதான ராபன்ஸல் என்ற பெண்ணுக்கு 6 அடி 3 அங்குலத்தில் அழகான நீளமான கூந்தல் உள்ளது. அதனை நெட்டிசன் கள் பார்த்து வியந்து வருகின்றனர். இவ்வளவு நீளமான கூந்தல் குறித்து அவரிடம் கேட்டதற்கு அவர் அந்த கூந்தலுக்கு குங்குமப்பூவிலிருந்து தயாரிக்கபடும் எண்ணெய்யை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Spread the love
x