latest news update: குறைவான நேரம் செல்போன் பயன்படுத்துவது ஆண்களா? பெண்களா? ஆய்வில் வெளியான தகவல்..!

1 min read
latest news update-vidiyarseithigal.com

latest news update

தற்போது உள்ள காலகட்டத்தில் செல்போன் அன்றாட பொருட்களில் ஒன்றாகி விட்டது. பெரும்பாலான மக்கள் செல்போன் இல்லாமல் இருப்பது இல்லை. இந்நிலையில் குறைவான நேரம் இளம் பெண்கள் செல்போன் பயன்படுத்துவது குறித்து டிஜிட்டல் அதிகாரமளித்தல் பவுண்டேஷன் ஆய்வு ஒன்று நடத்தியது.

10 மாநிலங்களில் எடுக்கபட்ட சர்வேயில் டிஜிட்டலை எப்படி பயன்படுத்துகிறார்கள், எப்படிப்பட்ட சவால்களை பயன்படுத்தும் போது எதிர்கொள்கீறார்கள் . கல்வியியல் தொடர்பாக எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது போன்ற கேள்விகள் எழுப்பட்டன.

இதற்கு பதிலளித்த பெரும்பாலான பெண்கள் சொந்தமாக செல்போன் பயன்படுத்துவதில் சிரமங்களை சந்தித்துள்ளனர். ஜார்கண்டை சேர்ந்த 17 வயது பெண் கூறுகையில் , அவர் செல்போன் பயன்படுத்த கூடாது எனவும் நீ சின்ன பொண்ணு உனக்கு எதுக்கு செல்போன் என பலர் கூறினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பீகாரை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ஸ்மார்ட்போன் உபயோகிபதற்காக எங்களை திட்டுகிறார்கள். எங்களுக்கு போன் வேண்டாமென்று அவர்கள் நினைத்து கொள்கிறார்கள் என கூறினார். மேலும் பெறோர்கள் கூறுகையில் 60 சதவீத இளம்பெண்களுக்கு செல்போன் பயனபடுத்துவது மூலம் கவனச் சிதறல் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.

அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 65% பெண்களுகம், அசாமில் 3.3% பெண்களும் செல்போன் பயன்படுத்துவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. செல்போன் பயன்படுத்துவதில் பாலின ஏற்றத்தாழ்வுகள் இருபதாக அந்த கருத்துகணிப்பில் தெரிய வந்துள்ளது. ஹரியானவில் ஆண்கள் செல்போனை எளிதாக பயன்படுத்த முடிகிறது ஆனால் பெண்களால் முடியவில்லை.

தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் சரிசமமாக செல்போன் பயன்படுத்துகின்றனர் என கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

Spread the love
x