newsupdates: மருத்துவமனை வெளியிலேயே பல நாட்களாக காத்திருந்த நாய்..! காரணம் இதுதானாம்..!

1 min read
newsupdates-vidiyarseithigal.com

newsupdates:

துருக்கி நாட்டில் வயதான நபர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கபட்டார். அவரை ஆம்புலன்ஸில் வைத்து அழைத்து செல்லும் போது அவரது ஆம்புலனஸிற்கு பின்னால் அவர் வளர்த்த நாய்குட்டி வந்துள்ளது. அவர் வரும் வரை மருத்துவமனை வெளியிலேயே காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி நாட்டில் டிராப்ஜன் மாகாணத்தில் சிமில் சென்டர்க் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு வயது 68. அவர் நாய்க்குட்டி ஒன்றினை ஆசையாக வளர்த்து வந்துள்ளார். அதன் பெயர் போன்கக். இந்நிலையில் கடந்த 14ம் தேதி அவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்.

newsupdates-vidiyarseithigal.comnewsupdates

வீட்டில் இருந்து தன் எஜமான் ஆம்புலன்சில் அழைத்து செல்வதை பார்த்த நாய்க்குட்டி ஆம்புலன்சின் பின் பல கிலோமீட்டர் தூரம் ஒடி சென்றுள்ளது. பின் அவர் அனுமதிக்கபட்டு இருந்த மருத்துவமனை வாசலில் அமர்ந்து கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட சிமில் மகள் நாய்க்குட்டியை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

ஆனால் மீண்டும் மீண்டும் அந்த நாய் சிமில் இருக்கும் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து கொண்டே இருந்துள்ளது. ஒருவழியாக ஆறு நாட்கள் கழித்து நாய்க்குட்டி தன் எஜமானரை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளது. இந்த சம்பவம் பார்பவர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Spread the love
x