tamil online news paper: அவர் எய்ட்ஸ் நோயாளி என முன்பே தெரியும்..! மாணவியின் செயலால் அதிர்ந்த பெற்றோர்..!

1 min read
tamil online news paper-vidiyarseithigal.com

tamil online news paper

குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை தேடி வந்துள்ளனர். அப்போது போலீசார் விசாரணையில் மாணவியும் அதே பகுதியில் ஆட்டோ ஒட்டுநரும்( வயது 22) காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. அந்த மாணவி காணாமல் போன தினத்தன்று இருவரும் ஒன்றாக வீட்டை வெளியேறியது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கபட்டது.

tamil online news paper

இதனையடுத்து போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்துள்ளனர். அப்போது அந்த மாணவியும் , அவரின் காதலருமான ஆட்டோ ஒட்டுநரும் கோவையில் இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக கோவை விரைந்த போலீசார் மாணவிடை மீட்டனர். ஆட்டோ ஒட்டுநரையும் பிடித்தனர். அதன் பின் அவர்கள் இருவரையும் நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் மாணவி காதலித்து ஆட்டோ ஒட்டுநர் எய்ட்ஸ் நோயாளி என்றும் இந்த தகவலை ஆட்டோ ஒட்டுநர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட போலீசார் மற்றும் பெண்ணின் பெற்றோர்கள் அதிர்ந்துள்ளனர். உயிர்கொல்லி நோயை வைத்து கொண்டு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டாயே என போலீசார் கண்டித்துள்ளனர்.

அப்போது குறுக்கிட்ட மாணவி அவர் எய்ட்ஸ் நோயாளி என்பது எனக்கு முன் கூட்டியே தெரியும் என கூறியுள்ளார். இதனை கேட்ட போலீசார் மற்றும் பெற்றோகளுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது ஏற்பட்ட பரிதாபத்தில் தான் காதலித்தேன் என அந்த மாணவி தெரிவித்துள்ளார். மேலும் தங்களை சேர்த்து வைக்கும் படி மாணவி புலம்பியுள்ளார்.

ஆட்டோ ஒட்டுநர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மாணவியை மருத்துவ பரிசோதனைகாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Spread the love
x