Tamil online news: நாட்டில் எங்கு இருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கும் திட்டம்..! தேர்தல் ஆணையம் தகவல்..!

1 min read
tamil online news-vidiyarseithigal.com

Tamil online news:

இந்தியாவில் தேர்தல் நடைபெற்றால் வாக்காளர்கள் அவரவர் சொந்த தொகுதி செல்ல வேண்டியதாக இருக்கும். அதிலும் வெளியூர் ஊர் மற்றும் வெளிமாநிலங்களில் பணியாற்றுவோர் வாக்களிக்க பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு செல்வர்.

இதன் காரணமாக வாக்களர்கள் எங்கு இருந்து வேண்டுமானாலும் தங்கள் வாக்குகளை செலுத்த தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் வாக்களர்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் வாக்களிக்கும்  remote voting முறை  குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய வாக்களர் தினத்தை முன்னிட்டு பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விரைவில் நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் வாக்களர்கள் வாக்களிக்கும் திட்டம் குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்தினை சென்னை ஐஐடி உள்ளிட்ட தொழிநுட்ப நிறுவனங்கள் இணைந்து ஆய்வு செய்து வருவதாகவும் அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

Spread the love
x