Tamil online news: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நினைவில்லம் மக்கள் பார்வைக்கு..! எப்போது என வெளியான அறிவிப்பு..!

1 min read
tamil online news-vidiyarseithigal.com

Tamil online news;

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றி அமைக்கபட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா காலமானார் . அதன் பின் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என அதில் தெரிவிக்கபட்டு இருந்தது. அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இதனிடையே வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. ஆனால் போயஸ் தோட்ட இல்லத்தை விலைக்கு வாங்கும் வகையில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ.67,90,52,033ஐ டெபாசிட் செய்தது.

இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் போயஸ் இல்லம் அரசுடமையானது. மேலும் இழப்பீட்டு தொகையை பெற வேண்டியவர்கள் சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கபட்டது. இதனை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யபட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் நினைவில்லம் அமைக்க அனுமதி அளித்தது.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

அதன் பின் பணிகள் வேகப்படுத்தபட்டன. பின்னர் 27ம் தேதி நினைவில்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபட உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் , தற்போது வரும் 28ம் தேதி முதல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்பட்டு மக்கள் பார்வைக்கு வரும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Spread the love
x