Whatsapp : பிரைவசி பாலிசி மாற்றம் ..! வாட்ஸ் ஆப் அளித்த விளக்கம்..!

1 min read
Whatsapp-vidiyarseithigal.com

whatsapp

வாட்ஸ் ஆப் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் மெசேஜிங் செயலியாக உள்ளது. இந்நிலையில் தான் வாட்ஸ் ஆப் அதனுடைய தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தை கொண்டு வந்தது. அது பெரும்பாலான மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

கடந்த 6ம் தேதி கொண்டு வந்த தனியுரிமை கொள்கை மாற்றத்தின் படி வாட்ஸ் ஆப் டேட்டாக்களை முகநூல் மற்றும் இதர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் என தெரிவிக்கபட்டு இருந்தது . அதனை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் கணக்கு முடக்கபடும் என தெரிவித்திருந்தது.

ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினருடன் இருந்து கண்டனம் எழவே வாட்ஸ் ஆப் (whatsapp)  இது குறித்து விளக்கம் அளித்து , மேலும் தனியுரிமை கொள்கை மாற்றத்தை மேற்கொள்ள மூன்று மாதம் அவகாசம் கொடுத்தது.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு 14 கேள்விகளை வாட்ஸ் ஆப் நிறுவனத்துடன் எழுப்பியது. மேலும் ஒரு தலைபட்சமாக மாற்றங்களை ஏற்க முடியாது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக தற்போது மீண்டும் விளக்கம் அளித்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம் வாட்ஸ் ஆப் பயனர்களின் டேட்டாக்கள் ஒருபோது முகநூல் நிறுவனத்துடன் பகிரப்படாது என தெரிவித்துள்ளது.

Spread the love
x