nagini 5 : சீரியல் பிரியர்களை கட்டிப்போட வருகிறது..! நாகினி 5 சீரியல் ..!

1 min read
nagini 5-vidiyarseithigal.com

nagini 5

தமிழகத்தில் சீரியல் தொடர்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. பல தமிழ் தொலைகாட்சிகளில் பல்வேறு வகையான சீரியல்கள் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கின்றன. தமிழின் முன்னனி தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தொலைக்காட்சியில் நாகின் என்ற கற்பனை தொடர் ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது வரை 4 பாகங்களில் வெளியான இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த தொடரின் 5ம் பாகம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

இது குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வர்த்தக தலைவர் அனுப் சந்திரசேகரன் கூறுகையில் இதுவரை வெளியான நாகினி தொடர்களில் இருந்து nagini 5 சற்று மாறுப்பட்டு வித்தியாசமான கதைகளம் கொண்டதாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

மேலும் பொழுதுபோக்கு நிறைந்த வெற்றி தொடரான நாகினி தொடரை மீண்டும் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தொடர் பார்வையாளர்களை பிரமிக்க வைப்பத்துடன் அவர்களுக்கு சிறப்பான அனுபவத்தையும் அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புத்தம் புதிய தொடர் ஜனவரி 21ம் தேதி முதல் ஒளிப்பரப்பாகும் எனவும் மாலை 6 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பகும் என அறிவிக்கபட்டுள்ளது.

Spread the love
x