rachitha mahalakshmi: மாற்றுத்திறனாளி ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல சீரியல் நடிகை rachitha mahalakshmi ..!

1 min read
rachitha mahalakshmi-vidiyarseithigal.com

rachitha mahalakshmi

வெள்ளித்திரை பிரபலங்களுக்கு ரசிகர் பட்டாளம் இருப்பது போல சின்னத்திரை பிரபலங்களுக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. வாரத்தில் 5 நாட்கள் நமது வீட்டில் ஒருவராகவே சின்னத்திரை பிரபலங்கள் மாறிவிடுகின்றனர். ஒரு காலத்தில் பெண்களே அதிகமாக சின்னத்திரை தொடர்களை ரசித்து வந்தனர்.

ஆனால் பெண்களுக்கு நிகராக சின்னத்திரை சீரியல்கள் ஆண்களையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை ரச்சிதா தனது தீவிர ரசிகரான கார்த்திக் என்ற மாற்று திறனாளி ரசிகர் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம்  என பல மொழி சீரியல்களில் நடித்து இருப்பவர் ரச்சிதா. பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மிகுந்த ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

https://www.instagram.com/p/CKGzAbJlCWs/

தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நாம்  இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரச்சிதா (rachitha mahalakshmi) தன்னுடைய ரசிகரான கார்த்திக் என்பவரின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார். மேலும் அவருக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்துள்ளார்.

இதனை வீடியோவாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Spread the love
x