7 day weight loss diet plan in tamil

1 min read
7 day weight loss diet plan in tamil-vidiyarseithigal.com

7 day weight loss diet plan in tamil

வாழ்க்கையில் எதை கொடுத்தாலும் மனம் வேண்டாம் என்று அவ்வளவு எளிதில் சொல்லாது. ஆனால் உடல் எடை ஏறுதல், முடி உதிர்தல் போன்ற விஷயங்களில் மனம் சற்று சோர்வடைந்துவிடும். என்ன செய்தால் தீர்வு கிடைக்கும் என மனம் அலைபாயும். யாரிடம் யோசனை கேட்பது போன்ற குழப்பங்கள் ஏற்படும்.

அவ்வாறு ஏற்படும் குழப்பங்களுக்கும் சரி, உடல் எடை குறைய சிறந்த வழிகளும் சரி இங்கே கிடைக்கும். உடல் எடை குறைப்பில் மிகவும் முக்கியமான ஒன்று இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பது ஆகும். பவுடர்கள், மாத்திரைகள் மூலம் உடல் எடை குறைவது போல தெரிந்தாலும் நாளடைவில் உடலில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

சரி தலைப்பின் மூலக்கூறுக்கு செல்லலாம். 7 நாட்களில் உடல் எடை குறைப்பது. 7 நாட்களில் உடல் எடையை குறைக்கலாமா ? என்ற யோசனை வரலாம். அப்படி வருவதும் சரியே . ஆனால் அதற்கு பதில் குறைக்க முடியும் என்பதே , எவ்வாறு குறைக்க முடியும்? என்ன செய்ய வேண்டும் ? என இதில் பார்க்கலாம்.

ஏழு நாட்களும் நாம் முக்கியமான ஒன்றை கடைப்பிடிக்க வேண்டும். அது என்னவென்று பார்த்தால் டயட் ஆகும். உணவு முறை என்பது தான் நம்மில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும் முக்கிய காரணியாகும். அதனை சரிசெய்தால் எளிதில் உடல் எடை குறைப்பில் நாமும் வெற்றி பெறலாம்.

7 day weight loss diet plan in tamil:

Day 1:

முதல் நாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் முழுக்க முழுக்க பழங்களே ஆகும். பழங்கள் உடலுக்கு சத்து தரக்கூடிய ஒன்றாகவும், கொழுப்பு சேருவதை குறைக்கும் ஒன்றாகவும் உள்ளது. முதல் நாளில் உங்களுக்கு பிடித்த எந்த பழவகை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்து கொள்ளலாம்.

ஆனால் வாழைப்பழத்தை மட்டும் உட்கொள்வதை தவிர்த்துவிடுங்கள். இவை மட்டுமின்றி உடல் குறைப்பில் முக்கிய அங்கம் வகிப்பது தண்ணீர் குடிப்பது ஆகும். நிறைய தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது 8 முதல் 12 கிளாஸ் நீரை குடிக்க வேண்டும்.

முதல் நாளில் பழங்களை தவிர வேறு எந்த உணவையும் தொடக்கூடாது. முக்கியமாக வேக வைத்த காய்கறிகளை கூட எடுத்து கொள்ள கூடாது.

Day 2:

இரண்டாம் நாளில் பழங்களை தவிர்த்து காய்கறி டயட் ஆக மாற வேண்டும். அனைத்து வகையான காய்கறிகளையும் பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ எடுத்துக் கொள்ளலாம். உருளைக்கிழங்கு கூட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பாக கேலோரி குறைவான வெள்ளரி, புடலங்காய்,பீன்ஸ், கேரட், பூசணி, கீரை மற்றும் வேகவைத்த முட்டைகோஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். மேலும் நாள் ஒன்றினை போல 8 முதல் 12 கிளாஸ் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.

Is peanut butter good for weight loss tamil

Day 3:

நாள் மூன்றில் காய்கறி மற்றும் பழங்கள் என இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம். இதில் முக்கியமான ஒன்று மூன்றாம் நாளில் வாழைபழம் மற்றும் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லது. காலையில் காய்கறி என்றால் மதியம் பழங்கள் மாலையில் காய்கறி இரவு மீண்டும் பழங்கள் என மாறி மாறி உட்கொள்ள வேண்டும்.

Day 4:

நான்காம் நாளில் வாழப்பழம் மற்றும் பால் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் முழுவதும் பால் மற்றும் வாழைப்பழத்தை மட்டும் எடுத்துக் கொள்ள  வேண்டும். சுமார் 8 முதல் 12 வாழைப்பழங்களும், மூன்று கிளாஸ் பாலும் போதுமானது ஆகும்.

உணவு குறைவு என்பதால் பசி உணர்வு தோன்றும். எனவே சீரான இடைவெளியில் எடுத்துக் கொண்டால் அந்த உணர்வை சமாளிக்க முடியும். 4 வேளைக்கும் தலா 2 பழங்களை எடுத்துக் கொண்டு இடையே பால் குடித்து வந்தால் பசி உணர்வை சமாளிக்க முடியும்.

chia seeds benefits for weight loss Tamil..!

Day 5:

ஐந்தாம் நாள் தக்காளி டயட் ஆகும். ஒரு கப் சாதம் மற்றும் 5 முதல் 7 தக்காளி தான் உங்கள் உணவு. தக்காளியால் யூரிக் அமிலம் அதிகபடியாக உற்பத்தியாகும் என்பதால் 12 முதல் 15 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியமாகும்.

Day 6 :

ஆறாம் நாளில் மதியம் மட்டும் ஒரு கப் சாதம் எடுத்துக் கொண்டு, மற்ற வேளைகளில் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும். அவ்வாறு பருகுவதால் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் சீராக இயங்கும் மற்றும் செரிமான எளிதாக இருக்கும்.

Day 7 :

ஏழாம் நாளில் மதியம் ஒரு கப் சாதமும், மற்ற வேளைகளில் காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ளலாம். பழங்களை ஜீஸாக கூட குடிக்கலாம். குறிப்பாக  ஐந்தாம் நாளினை தவிர அனைத்து நாட்களிலும் 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

jeera water for weight loss tamil

முடிவு:

இவ்வாறு 7 நாட்களும் கடைபிடித்து வர வேண்டும். வெறும் உணவில் எடை குறைக்கலாமா என்று கேட்டால் முடியும். ஆனால் அவ்வளவு மாற்றம் தெரியாது. எனவே அனைத்து நாட்களிலும் சுமார் 30 முதல் 60 நிமிடம் வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

இதனை 7 நாட்கள் செய்து வருவது மூலம் உடல் எடையில் குறிப்பிட தகுந்த மாற்றம் நிச்சயம் காணப்படும்.

குறிப்பு:

மேற்கூறியவை அனைத்து ஒரு ஆலோசனை மற்றும் வழிமுறையே . உங்கள் உடலில் உணவு கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சூழ் நிலையும் இருக்கலாம். எனவே மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

Spread the love
x